பிறமதத்தான் பின்சென்ற பெண்திசை மாற்றி
உறுமதத்தின் உள்ளிருத்தி னாலும் -----பெறுமதியும்
மேம்படுமோ தொல்லைதான் மேம்படுத்தி விட்டபழி
தாம்படவே நோய்மிகவே ஆம்.
ஒருவன்பின் சென்ற பெண்ணை மீட்டுக் கொணர்ந்தாலும் அவள் பிறந்த வீட்டுக்கு நலம் சேர்க்கமாட்டாதவள் என்பது கருத்து. (இது பெரும்பான்மை பற்றிய கருத்து.)
பிறமதம் - நீங்கள் சாராத வேறுமதம்.
பிறமதம் - நீங்கள் சாராத வேறுமதம்.
உறுமதம் - உங்கள் மதம்
பெறுமதி - அடையும் அறிவு
(மேம்படுமோ தொல்லை மேம்படுத்தி விட்டபழி
தாம்படவே -- வழிமாற்றியவன் துன்புறுமாறு)
நோய்மிகவே ஆம். - நோய் கூடுதல் ஆகும்.
இப்பாடலின் நோக்கம் பிறமதம் சார்ந்தோரை குறைத்து மதிப்பிடுவ தன்று. பல்வேறு பழிகள் தோன்றி அவர்களைப் பாதிக்கக் ]காண்கிறோம் என்பதுதான். தொல்லைகள் ஏற்படுகின்றன என்பது தான் நம் முன் ஏற்படும் காட்சி. இதையே இப்பாடல் பதிவு செய்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக