சொல்: மோகம் (மோகத்தைக் கொன்றுவிடு!)
பழைய நூல்களில் மோப்பு என்ற சொல் கிடைக்கிறது. இச்சொல்லில் பு என்பது
விகுதியாதலின் மோ என்பதே பகுதி என்று தமிழாசிரியர்கள் கருதியுள்ளமைக்கு
ஆதாரம் உள்ளது. மோகம் என்ற சொல்லுக்கும் மோ என்பதே பகுதியாகும்,
மோப்பாகினேன் என்றால் மோகம் கொண்டேன், காதல் கொண்டேன் என்று பொருள்.
காதல்வயப்பட்டுத் திரியும் பெண்ணுக்கு "மோப்பி" என்றும் சொல்வர். இஃது
கைப்பெண்களுக்குப் பயன்படுத்தப்படும் சொல்லாகும். இச்சொல்லும்
தொடர்புடையதே ஆகும்.
மோகம்: இது தமிழ்ச்சொல்லென்று அறிந்து மகிழ்வீர். வகையில் இது திரிசொல்
ஆகும். வாசனைபிடித்தல் என்னும் பொருளினின்று திரிந்து காதல் என்ற
பொருளுக்குச் சென்றுவிட்டபடியால் திரிசொல் ஆவது இது.
மோகனம் என்பது இராகத்தின் பெயராகவும் இருக்கிறது. மோகன் மோகனா என்ற
பெயருள்ளவர்களும் பலருள்ளனர். மோகனம் என்ற பெயருள்ளவர்கூட சிங்கப்பூர்
வானொலியில் பணியாற்றியுள்ளார். மோகம் என்ற சொல்லும் பேச்சு வழக்கில் உள்ள
சொல்; மற்றும் பாடல்களில் எதிர்கொள்வதுதான்.
விலங்குகள் மோப்பம் பிடித்தே பாலியல் அணுக்கம் கொள்கின்றன.
யாரும் போய்த் தெரிவிக்காமலே உணர்ந்து நெருங்குகின்றன. ஆகையால்
மோகம் என்ற சொல் மோத்தல் என்ற மோ விலிருந்து பிறந்தது.
மோ+கு+
அம் = மோகம். இங்கு கு என்பது சொல்லாக்க இடைநிலை. மோப்பம் என்பதில்
மோ+பு+அம் = மோப்பம் என்று பு இடைநிலை ஆனது போல. இதில் பு இடைநிலை
என்னாமல் "விகுதி" ',இன்னொரு 'விகுதி " என்றும் சொல்லலாம்.
மோகித்தல்
என்பதில் இகரம் இறுதியில் நின்று வினையானது. மோ +கு+ இ = மோகி. இடை
நின்ற கு= க் +உ. . இதிலுள்ள உகரம் கெட்டது . மோ +க் +இ = மோகி
.ஆயிற்று.
மோகப் பற்று : இது பின் மோகபத் ஆனது.
மோகினி என்பது மோயினி என்றும் திரியும்.
இந்தியத் துணைக்கண்ட முழுதும் ஒருகாலத்தில் தமிழ் வழங்கியதென்பதே
உண்மை. இமையத்திலும் ஏறிக் கொடிநாட்டியவன் தமிழன். இமயவரம்பன் என்ற
பட்டம் ஒன்றும் விளையாட்டுக்காக இலக்கியத்தில் வரவில்லை.
தமிழ் சுமேரியாவிலும் வழங்கியதே! பொய்யா?
அறிக மகிழ்க.