வெள்ளி, 2 ஜூன், 2017

வீதம் HOW FORMED

இன்று வீதம் என்ற சொல்லை நுணுக்கமாக நாடுவோம்.

இச்சொல்லுக்கு எதுகையாய் ஒலிக்கும் மீதம் என்ற சொல்லைப்
பாருங்கள். இதில் வரும் மீ என்ற முதல்மிகு என்பதன் நீட்சித்
திரிபு ஆகும். பகுதியில் பகு பா என்று நீண்டு பாதி ஆனதுபோல்
மிகு என்பது மீ ஆனது. மிகு > மிகுதிமீதி > மீதி + அம் = மீதம்.
இங்கு மீதி என்பதன் இறுதி இகரம் கெட்டு இன்னொரு விகுதியைப்
பெற்றதுமிகு > மிகுதுமீது > மீதம்  என்று விளக்கினும்
இழுக்காது. காரணம் து என்பது ஓர் இடைநிலை விகுதியாக  அல்லது
சொல்லாக்க இடைநிலையாகப் பல சொற்களில் வந்துள்ளதை
இவண் முன் இடுகைகளைப் படிப்பார் உணரலாம்,

ஆனால் வீதம் என்பதில் உள்ள வீ ஏன்னும் நெடில் விகு என்பதன்
திரிபு அன்று. அது விழு என்பதன் திரிபு. அல்லது வீழ் என்பதன்
கடைக்குறைஎனினும் இதில் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.
தொழுதி = தொகுதி என்பதால் ழுவும் குவும் பரிமாற்றத்திற்குரியவை.
வழு (வழுத்து ) என்பதும் வாழ் (வாழ்த்து) என்பதும் கண்டு தெளிக;
எனவே விழு என்பது வீழ், வீ என்று மாறும்.

இந்த வீ என்பது விழுக்காடு என்பதில் உள்ள விழு என்பதன் திரிபே.
எனவே வீ + து + அம்வீதம் ஆனது. இந்நிலையினின்று அது
விகிதம் என்று உருமாறியதுவிழுவிழு+ இது + அம் =விழுதம் >
விகிதம் ஆனது. இங்கு வீதம் என்பது மெருகூட்டப்பட்டது.

மறுபார்வை செய்த தேதி:  30.9.2017



கருத்துகள் இல்லை: