பூடுவான்
என்ற சொல்லைப் பார்த்து
அறிந்துகொள்வோம்.
பூடு
என்பது பூண்டு என்பதன் இடைக்குறை
என்றுதான் இலக்கண
நூல்கள்
விளம்புகின்றன.
பூண்டு
> பூடு.
இடை
நின்ற ணகர
ஒற்று
அல்லது மெய்யெழுத்து மறைந்தது.
வான்
என்பது
விண்ணைக்
குறிப்பது.
ஆனால்
நாமெடுத்துகொண்ட
சொல் இதைப்
பற்றியதன்று.
இது
பேச்சில் வரும் "பூடுவான்"
என்ற
சொல்.
ஓடிப்போய்விடுவான்
என்பது
ஓடிப் பூடுவான் என்று வருகின்றது.
இந்தப்
பாணியில்
வேறு
சொற்கள் அமைந்துள்ளனவா என்று
இன்னும் தேடவில்லை.
இல்லை
என்றுதான் தோன்றுகிறது.
போய்விடு
என்பது பூடு என்று
மாறுவதுபோல் வேறு சொற்கள் இல்லை என்று
தோன்றுகிறது.
இப்படிப்
பல திரிபுகளைக் கொண்டது தமிழ்.
திரிபுகள்
எவ்வளவு கட்டு
மீறி இருந்திருந்தால்
தமிழிலிருந்து பல மொழிகள்
தோறியிருக்கும்
என்று
நினைக்கிறீர்கள்?
போய்வி > பூ .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக