உத்வேகம் என்ற சொல்லைப் பாருங்கள்; .
இதில் வேகம் என்பது தமிழ். உ என்பது சுட்டடி மூலச்சொல். உது: உந்து. முன் செல்லும் வேகம், அதை உலகுக்கு அளித்ததும் தமிழே.
எதுவும் வெந்து சாம்பலாவதால் விரைவில் அழிந்துவிடும், எனவே
வேகுவித்தல் விரைவு குறித்தது. வேகு + அம் = வேகம் ஆயிற்று.
நாளடைவில் இச்சொல் வேவிப்பதனால் மட்டுமின்றி எவ்வழியில் விரைவு நேரினும் அதைக் குறிக்கும் சொல்லாய் மாறியது.
தீயே விரைவுக்கு வழி என்பதைத் தீவிரம் என்ற சொல்லும் காட்ட
வல்லது. இதன் முன் நிற்கும் சொல் தீ. எந்த வாதமாக இருப்பினும்
பைய மெள்ள அணுகாமல் சுட்டுப் பொசுக்கும் வேகத்தில் செல்வதே
தீவிரம் ஆகிறது.விர் > விரை; விர் > விரம், விர்ரென்று போகிறான்
என்ற வருணனை விர் : விரைவு குறிப்பதே, விரைவு என்பதென்ன>
ஒரு மணிக்கூறினுள் முடிக்கத்தக்கதை ஒரு நிமிடத்தில் முடித்தால்
அதுவே விரைவுக்கு உதாரணம், எல்லா விரைவுகளும் காலச்சுருக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை,
ஆங்கிலத்தில் உள்ள எக்ஸ்டீரிமிஸம் என்ற சொல் நுனிக்குச் செல்லுதல் என்று பொருள்படுவது, ஒற்றை ப் பிறனுக்குத் தெளிவுறுத்துவதில் முழு இட அளவையும் எடுத்துக்கொள்ள வேண்டும்; ஆனால் மற்ற இடங்களினூடு செல்லாமல் நுனிக்குச்
சென்றுவிடுகின்றனர் அல்லது இறுதி நிலைக்கு ஏகிவிடுகின்றனர்
என்பது இதன் விளக்கம்,
எல்லாத் தீவிரவாதிகளும் எடுத்துக்கொண்டதை விளக்க ஒன்று காலத்தைச் சுருக்கிவிடுகிறான்; அல்லது இடத்தைச் சுருக்கிவிடுகிறான். அவன் சொல்வது சரியென்று ஏற்கும் வரை அவன் காத்திருப்பதில்லை.. அவனுக்கு அவன் கொள்கை உடனே ஏற்கப்பட
வேண்டும். இதையே இடச்சுருக்கமும் காலச்சுருக்கமும் காட்டும்
இச்சொற்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் வேகம் மற்றும் தீவிரம் என்ர சொற்ள் விளக்கப்பட்டன,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக