வந்தஎல்லாம் எழுதவேண்டும் என்னும் உள்ளம்.
வாய்ப்பில்லை வழிவிட்டால் தானே வெல்ல?
செந்தமிழைக் கணினியிலே சீராய்ச் செய்யும்
செவ்வெழுதி ஒவ்வாமைப் போரில் தொய்யும்!
இந்தநிலை எய்தியதால் ஏய்ந்த எல்லாம்
ஏற்றுதலோ கூற்றுவன்வாய்ப் பட்ட வல்லோ!
மந்தநிலை வந்திடாமல் மாற்றி ஆக்கம்
மலர்விக்கும் எம்முயற்சி புலரு மாமோ!
பொருளுரை:
வந்த எல்லாம் --- மனத்தில் எண்ணிய எல்லாம்;
என்னும் உள்ளம் --- என்று மனம் சொல்லும்;
வழி விட்டால்தானே--- (கணினி) ஒத்துழைத்தால் தானே;
வெல்ல == வெற்றி அடைய (முடியும் ).
செவ் வெழுதி === நல்ல எழுதி ( எடிட்டர்)
ஒவ்வாமை --- ஒத்துழைக்காமல் போதல்.
போரில் -- போராட்டத்தினால்;இழுபறியால் .
தொய்யும்----இயக்கத்தில் சிறப்பு கேடு அடையும்;
ஏய்ந்த === வந்து சேர்ந்த;
ஏற்றுதலோ -- வலைத்தளத்தில் வெளியிடுதலோ;
கூற்றுவன் வாய்ப்பட்ட - அழிவிற் பட்டன;
அல்லோ - அல்லவோ;
மந்த நிலை -- இயக்கம் கெடுதல்:
புலருமோ -- ஒளியில் மேல்வருமோ.
வாய்ப்பில்லை வழிவிட்டால் தானே வெல்ல?
செந்தமிழைக் கணினியிலே சீராய்ச் செய்யும்
செவ்வெழுதி ஒவ்வாமைப் போரில் தொய்யும்!
இந்தநிலை எய்தியதால் ஏய்ந்த எல்லாம்
ஏற்றுதலோ கூற்றுவன்வாய்ப் பட்ட வல்லோ!
மந்தநிலை வந்திடாமல் மாற்றி ஆக்கம்
மலர்விக்கும் எம்முயற்சி புலரு மாமோ!
பொருளுரை:
வந்த எல்லாம் --- மனத்தில் எண்ணிய எல்லாம்;
என்னும் உள்ளம் --- என்று மனம் சொல்லும்;
வழி விட்டால்தானே--- (கணினி) ஒத்துழைத்தால் தானே;
வெல்ல == வெற்றி அடைய (முடியும் ).
செவ் வெழுதி === நல்ல எழுதி ( எடிட்டர்)
ஒவ்வாமை --- ஒத்துழைக்காமல் போதல்.
போரில் -- போராட்டத்தினால்;இழுபறியால் .
தொய்யும்----இயக்கத்தில் சிறப்பு கேடு அடையும்;
ஏய்ந்த === வந்து சேர்ந்த;
ஏற்றுதலோ -- வலைத்தளத்தில் வெளியிடுதலோ;
கூற்றுவன் வாய்ப்பட்ட - அழிவிற் பட்டன;
அல்லோ - அல்லவோ;
மந்த நிலை -- இயக்கம் கெடுதல்:
புலருமோ -- ஒளியில் மேல்வருமோ.