அற்புதம் என்பதோ ஓர் அற்புதமான சொல். இச்சொல்லின் அடிச்சொற்கள் யாவை என்று ஆய்வோம்.
அருமை, புதுமை என்ற சொற்கள் நீங்கள் அறிந்தவையே.
அரு + புது + அம்.
தமிழாசிரியர்கள் இவற்றை அரும்புதுவம் என்று புணர்த்தி யிருப்பார்கள்.
இங்கேதான் சொல்லமைப்புப் புணர்ச்சி வேறுபடுகிறது.
அரு >அர்.> அற்.
புது > புத். (இங்கும் உகரம் கெட்டது).
அம் -விகுதி. அம் என்பது அழகு என்றும் பொருள்படும்.
அர்+புத்+அம் = அற்புதம்.
அரு என்பதன் மூலவடிவம் அல் என்பது. இதற்கு விளக்கம் உண்டு எனினும் பின்பு காண்போம்.
ஆகவே அல்+புது+ அம் = அற்புதம் என்பதுமாம் .
லகரம் ரகரமாய்த் திரியும். பகரத்தின்முன் லகர ஒற்று றகரம் ஆகும்
அல் ஒரு சொல் விகுதியுமாகும்.
எனவே, இச்சொல் அழகிய அரும்புதுமை என்ற அளவிற்குப் பொருள்விரிக்க இடம்தரும்.
இது திரித்துப் புனையப்பெற்ற சொல் என்பது சொல்லாமலே விளங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக