சனி, 23 டிசம்பர், 2017

சொல்லிறுதி இடையின ஒற்றுக்கள்



இறுதி இடையின எழுத்துக்கள் வீழ்ச்சி;

 இடையின எழுத்துக்கள் ய ர ல (வ)% ழ ள.

இவ்வெழுத்துக்கள் வகர ழகர ஒற்றுக்கள் நீங்கலாக சொல்லின் இறுதியில் ஒற்றெழுத்துக்களாய் வருங்கால், அவை கெடும் ( அதாவது விடப்படும் ).  இது பெரும்பாலும் பேச்சிலே நிகழும். எழுத்திலும் வந்து சொற்கள் திரியும்.

1.கொய்யாக்காய் > கொய்யாக்கா.
இதில் யகர ஒற்று (ய்) ஒழிந்தது.
நாய் - நே;  பாய் - பே;  தாய் -  தே என்றும் ஒருமாதிரியாய் இழுத்துப் பேசுவோருமுண்டு.
எண்ணெய் > எண்ணெ;  பண்ணை > பண்ணெ;
ஐ என்பது அய் போலும் யகர ஒற்றிழந்து  எகரமாகும்.

2. தண்ணீர் > தண்ணி.
இதில் ரகர ஒற்று ( ர்)  ஒழிந்தது.

3,  பந்தல் > பந்த.  செய்தால் >  செய்தா.
இங்கு லகர ஒற்று வீழ்ந்த்து.

4. அவள் >  அவ;    அவ்வாள் > அவா.

5. இனி ழகர ஒற்று:  இது சொல்லிடை வீழும்.
   வாழ்க்கைப்படு > வாக்கப்படு.
   வாழ்த்தியம் > வாத்தியம்.
சூழ்து >  சூது. ( நன்`கு ஆலோசித்து விளையாடுவது ).  சூழ்தல் - ஆலோசித்தல்.
    ழகர ஒற்றுக்கு ஒரு ரகரம் தோன்றும்:
     அவிழ் > அவுர். 

6, வகர% ஒற்று சொல்லிறுதியில் வருவதில்லை. சொல்லிறுதிக்கு இரட்டித்து ஒரு உகரச் சாரியை போலும் வந்து முடியும். இதை சொல்லாக்க விகுதி எனலாம்.
கவ் ( )  >  கவ்வு.   வு : விகுதி.

 கவ் என்பது சொல்லாகக் கருதப்படுவதில்லை.
 

கவ் > கவ. கவ் >  கவிழ்  கவ் > கவர். ஆகவே கவ் என்பதைப் பிறைக்கோட்டுக்குள் இட்டுக் காட்டலாம்.  (கவ் )>

சீனமொழியில் இது கா என்று நீளும்.

அறிந்து மகிழ்வீர்.
 

வெள்ளி, 22 டிசம்பர், 2017

காஒசிகன் கௌசிகன் (முனிவர் பெயர்)


காட்டில் தவமியற்றி அரிச்சந்திரனையும் எதிர்கொண்டவர் விசுவாமித்திரர். விசுவாமித்திரர் என்பது காரணப்பெயர்.  விசுவம் = உலகம்; மித்திர எனில் நண்பர். ஆக, உலகநண்பன் இந்த முனி.

இவருக்கு இன்னொரு  பெயரும் உளது. அது கௌசிக முனி என்பர்.
கௌசிகமுனி காட்டில் தவமியற்றி வருந்தியவர். அரிச்சந்திரன் வேறு வந்து தொல்லைதந்து அவர்தம் வருத்தத்தை மிகுத்துவிட்டான். இப்போது இந்தக் கதையை ஒட்டிக் கௌசிக என்ற பெயரைத் தமிழைக் கொண்டு ஆராய்வோம்.

கா = காடு.
ஒசி(தல்) = வருந்து(தல்.)
கு = இடைச் சொல். வேற்றுமை உருபாகவும் வரும். கு என்பதன் பொருள் சென்றுசேர்தல்.
அன் -   ஆண்பால் விகுதி.  இது பிறமொழிகளில் அ~ என்று குறுகும்.
காஒசிக(ன்)  என்பது காவுசிக என்று வரும் : இது மேலும் குறுகி கௌசிக ஆகும்.

பொருள்: காட்டில் வருந்தியோன்.

அரிச்சந்திரன் வருத்தமூட்டினான். காட்டுச் சூழ்நிலைகளும் வருத்தமூட்டுபவை.

தமிழ்ச்சொற்களின் பொருளால் கதை பிறந்ததா அல்லது கதையின் காரணமாகச் சொல் அமைந்ததா என்பது ஆய்வுக்குரியது.

ஏனை ஆய்வாளர்கள் குஷ் என்பதனடி கௌசிகன் எனும் பெயர் தோன்றிற்று என்பர்.  ஜான் காரெட் என்னும் ஆய்வாளர் (1871) நடு ஆசியாவிலுள்ள குஷ் என்ற இடப்பெயரிலிருந்து பெயர் அமைந்ததாகக் கருதுவார்.
அந்த இடத்துக்கும் கௌசிக முனியின் பெயருக்கும் உள்ள ஒலியொற்றுமையைக் காட்டி, இவர் அங்கிருந்து வந்தவர் என்று கருதுவார்.  வேறு ஆதாரம் யாதுமில்லை. 

ஆரியர் என்பது ஓர் இனப்பெயர் அன்று.

உளைப்பு என்றால் உச்சரிப்பு. உழைப்பு வேறு,

பேச்சொலி என்பதற்கு மற்றொரு நல்ல சொல் உளை
என்பதாகும். சேறு,  அழுகை என்பன பிற அர்த்தங்கள்.
உழை என்பது பாடுபடு என்ற பொருளுடைய சொல்.

அது நீங்களறிந்த சொல் ஆகும்.



இந்த உளை என்ற சொல்லை ஒலிக்கும் பயன்படுத்துவ
தில்லை;  சேற்றுக்கும் இக்காலங்களில் பயன்
படுத்துவதில்லை.

அரிய இனிய தமிழ்ச்சொற்களைத் தமிழன்பர்கள்
கற்றுக்கொண்டு வேண்டியாங்கு அவற்றைப் புழங்கவும்
வேண்டுமென்பது எனது வேணவா ஆகும்.

உளை என்பது அழுகை மற்றும் ஒலி என்று பொருள்
படவும் செய்யும் என்று அறிந்தீர்கள் அல்லவா?

உளை (ஓலி) என்ற சொல்லிலிருந்தே "ஊளை"  என்ற
 சொல்லும் திரிந்தமைகிறது.  ஊளை என்பதும் ஒலியே
ஆயினும் அது நாய்கள் நரிகள் முதலியவற்றின்
நெட்டொலியைக் குறிக்கிறதென்பதை நீங்கள்
அறிவீர்கள். ஒரு நாய் ஊளை யிடுகிறதென்றால்
தன் தனிமையை உணர்த்தவும், பிரிவினைத் துன்பம்
பொறாத்தன்மையாலும் மற்றும் தன் கூட்டத்திற்குத்
தன் இருப்பிடமுணர்த்தவும் நீட்டொலி செய்யு
மென்பதை நீங்கள் அறிந்திருத்தல் கூடும்.
 ஊளையிடும் நாயை வைத்திருப்பது கூடாது என்பது
அவ்வொலி கேட்டு  நரிகளோ பிற விலங்குகளோ
வந்து தாக்கக்கூடும் என்ற பழங்கால அச்சமே ஆகும்.
அதுவும் நீங்கள் காட்டோரத்து
வாழ்நரானால் இதில் கவனம் தேவை. அது நிற்க.

உளை (ஒலி) > ஊளை ( ஒரு குறிப்பிட்ட ஒலி).

தொடர்பையும் குறில் நெடிலாக்கிச் சற்று வேறுபட்ட
பொருளை உணர்த்தும் தமிழ்மொழியின் பாங்கையும்
 ஈண்டு உணர்ந்துகொள்க.

தனக்கு வேண்டிய சொற்களைத் தமிழ் இப்படித்தான் பல
உத்திகளைக் கையாண்டு சொந்தமாகப் படைத்துக்கொண்டது.
கடன்பெற்றது சிறிதே. கடன்பெறாமைக்குக் காரணம் அது
சிறப்பாக வழங்கிய பழங்காலத்தில் அதற்குக் கடன் தரத்தக்க
பெருமொழிகள் அருகிலில்லை என்பதும் ஒரு காரணமாம். சிறு
கிளைமொழிகள் பல இருந்திருத்தல் கூடும்.

இனிப் பேச்சொலி, எழுத்தொலி ( உச்சரிப்பு) என்பதை
உளைப்பொலி என்றும் குறிப்பிடுவேன். மனத்துள் இருத்திடுவீர்.
பலுக்குதல் என்றொரு சொல்லும் உளதென்பது நீங்கள்
அறிந்ததே.

Frightening murder in JB Malaysia. Police sweep suspects.

This is fast sweep after a frightening murder. You
may wish to read:

http://www.straitstimes.com/asia/se-asia/jb-petrol-station-murder-four-more-detained


வியாழன், 21 டிசம்பர், 2017

இகர ஈற்றுச் சொற்கள் விகுதிபெறுதல்



þ¸Ã ®üÚî ¦º¡ü¸û Ţ̾¢ ¦ÀÚ¾ø:

¾Á¢ú¦Á¡Æ¢Â¢ø þ¸Ã ®üÈ¢ø ÓÊÔõ ¦º¡ü¸û ÀÄ. «¨Å À¢ý §ÅÚ ®Ú ¦ÀüÚ Á¢ÌóÐ ¿¢ýÚ ¦À¡Õû ¯½÷òÐõ. 

þõ Á¢Ì¾¨Ä§Â Ţ̾¢ ±ý`¸¢§È¡õ.  Á¢Ì> Å¢Ì; Á¢Ì¾¢ Ţ̾¢Â¡Â¢üÚ.

º¢Ä ¸¡ñ§À¡õ.

ÀÊ+ «õ =  À¡¼õ.

þíÌ Ó¾É¢¨Ä ¿£ñ¼Ð.  À > À¡.

Ê ±ýÈ þÚ¾¢ þ¸Ãõ þÆó¾Ð.   ±É§Å À¡ð+«õ = À¡¼õ ¬Â¢üÚ.  ட்+அ =ட. " À¡ð" ±ýÀÐ ´Õ ¦º¡øÄýÚ. Ò½÷¢ø ¾¢¡¢¾ÄýÈ¢த் ¾É¢§Â ¿¢øÄ¡Ð.

¿Ê+«¸õ = ¿¡¼¸õ.

þíÌ Ó¾É¢¨Ä ¿ ±ýÀÐ ¿¡ ±ýÚ ¿£ñ¼Ð. À¢ý Ê ±ýÈ þÚ¾¢,  þ¸Ãõ þÆóÐ  ¿¡ð ±ýÚ ¿¢ýÚ «¸õ ±ýÈ Å¢Ì¾¢ ¦ÀüÚ ¿¡¼¸õ ¬Â¢üÚ.  ட்+அ = ட.

«¸¦ÁýÀÐ þíÌ ¦º¡øÄ¡ì¸ Ţ̾¢; «¾üÌô ¦À¡ÕÇ¢ø¨Ä.

¿Ê + «Éõ: ¿¼Éõ.

Àþ ¿¡ðÊÂõ ӾĢ Üòиû ¿ÊòÐ즸¡ñ§¼ ¬Îž¡Ìõ.  §ÅÚ 
«Âø ¿¡ðÎ ¿¼Éí¸û §À¡Ä ¦ÅÚõ ¯¼ø «¨º×¸û «øÄ.

þíÌõ ¿Ê ±ýÈ ¦º¡øÄ¢ý þÚ¾¢ þ¸Ãõ ¦¸ð¼Ð. ¿ð ±ýÚ ¿¢ýÚ «Éõ Ţ̾¢ ¦ÀüÚ ¿¼Éõ ¬Â¢üÚ.  ட்+ அ = ட.

«Éõ ±ýÀÐ «ý+«õ = «Éõ. «ý ±ýÀÐ µ÷ þ¨¼¿¢¨Ä ¬Ìõ. «¨¾ þÚ¾¢ «õÓ¼ý þ¨½òÐ ´Õ Ţ̾¢Â¡¸ì ÜÈôÀð¼Ð.

புதன், 20 டிசம்பர், 2017

சாட்சி

சாட்சி என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.

ஒரு திருட்டைப்பற்றிய வழக்கில்,  ஆங்குப் பொருளைப் பறிகொடுத்தவனே திருடியவன்மேல் குற்றம் சாட்டுபவன். அவன் சொல்வதை நம்பி, ஓர் அரசின் காவலன் திருடனெனப்பட்டவனைக்  கைது செய்கிறான். கைது என்றால் கையில் எடுத்துக்கொள்ளுதல். மனிதனைக் கையிலெடுத்தல் இயலாதெனினும் இது ஓர் அணிவகையான சொல்வழக்கு என்று அறிக. ஒரு பொருள் கைவயப் படுவதுபோலவே திருடனும் கைவசப் படுகிறான்.

கை என்பது மனிதனின் கையாகிய உறுப்பையும் குறிக்கும்.  பக்கம் என்றும் பொருள்தரும்.  வீதியின் அந்தக்கையில் அவர் வீடு உள்ளது என்று பேசுவது கேட்டிருக்கலாம். கைது என்ற சொல்லில் காவலனின் பக்கமாய் வந்து திருடன் மாட்டிக்கொண்டான் என்ற பொருளும் கொள்ள வழியுள்ளது.
து என்பது விகுதி. து என்பது அஃறிணை விகுதியாகவும் வரும்.  உடையது என்றும் பொருள்படும்.  எனவே  திருடனைக் காவலனின் கை உடையதாய் உள்ளது என்றும் பொருள் கூறலாம்.

அது என்பதில் அங்கு உள்ளது என்பது பொருளாதல் போலவே கைது என்பதில் கையில் உள்ளது என்றும் பொருளாம்.

குற்றம் சாட்டுபவன் பொருளைப் பறிகொடுத்தவன், அவனே காவல் நிலையத்தில் போய் சாட்சியும் சொல்லவேண்டும்; பின் நீதிமன்றத்திற்கும் போகவேண்டும்.  அவன் கடமை, அவன் சாட்டுகிற குற்றத்திற்கொப்ப விளக்கங்களை அளிப்பது. சாட்டுதல் என்பதில் இதுவும் அடங்கும்.

சாட்டுதல்  என்பது சாடுதல் என்பதன் பிறவினை. சாடச் செய்தலே சாட்டுதல்.
திருடியவனை உடைமைக்காரன் அடிப்பதே ஆதியில் மனிதக் குலங்களிடை நிகழ்ந்தது. கையால் அடிக்காமல் வாய்ச்சொற்களால் அதைச் செய்யப் பின்னர் அவன் நாகரிகம் அடைந்து கற்றுக்கொண்டான். இவ்வாய்ச் சொற்கள் பெரிதும் அதிகாரமுடைய பெரியவனிடமோ  குழுவினிடமோ விடுக்கப்பட்டன.

உடமைக்காரனே தண்டிக்காமல் பெரியவன்  அல்லது குழு திருடனைத் தண்டித்தது. ஆகவே முன்போல் சாடாமல்  குற்றத்தைச் சாட்டினான்.
சாடுதல் சாட்டுதல் என்பவற்றின் தமிழ்ப்பொருள் அனைத்தும் இணைத்துக்கூறப் பொருத்தமானவை. அதை நிகண்டுகள் மூலம் நீங்கள் அறியலாம். நானே சொல்ல வேண்டினும் அதைப் பின்னோர் இடுகையில் தருவேன். இதன் நீட்டம் குறைக்க இத்துடன் இவ்விளக்கத்தை நிறுத்துவோம்.  சொல்லுக்குள் செல்வோம்.

இதன் அடிச்சொல் சாள் என்பது.  சார், சால், சாள் என்ற மூன்றும் பொருந்துதல் சென்றுசேர்தல் என்ற அடிப்படைக் கருத்தை உடையவை.

சாடு என்பது சாள்+து என்று பிரியும்.

சாட்டு என்பது டகர ஒற்றுத் தோன்றிப் பிறவினை வடிவம் கொண்டது.  ஓடு > ஓட்டு என்பதனுடன் ஒப்பு நோக்குக.

சாள்+ சி = சாட்சி.
சாள் என்பது அடிப்படைப்  பொருந்துதல் கருத்தாதலின்  சாட்சி என்பவன் சாட்டுதலுடன் அல்லது வழக்கினுடன் பொருந்தி நிற்பவன். ஒன்றை இன்னொன்று பொருந்துவதில், வகை பலவாகும். கடினப் போக்கில் பொருந்துபவை; மெல்லப் பொருந்துபவை; நீர்ப்பொருள்போல் கலந்துபொருந்துபவை. பொருந்தி உடைபவை; பொருந்தும்போது துகள் ஆகுபவை இன்னும் பல.

பல்லாயிரம் ஆண்டுகளாய் மனிதனின் மொழி வளர்ந்துள்ளபடியால் அதை உணர நன்கு ஆழ்ந்து கற்கவேண்டும். இதை இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.  மிக நீண்டால் கேட்போன் உறங்கிவிடுதல் கூடுமாதலின். இன்னொரு கால் சற்று விரிப்போம்.

சாள்+ சி. இதில் சி விகுதி. சாட்சி.

சாள்> சாடு.
சாள் > சாட்டு.
சாள் > சாட்சி.

சாள் என்பது சாய் என்றும் திரியும்.
சாள் > சாய்.  ஓப்பு:  மாள் > மாய்.  மாள்தல் – மாய்தல்.

முடிவு:  சாட்டுகிறவனே சாட்சி. 


அவன் அதைப் பிறனுக்குத் தெரிவிக்கும் வழிகள் மேம்பாடு அடைந்துள்ளன.  அது குமுகத்தின் வளர்ச்சி.  மனித வளர்ச்சி.
 


பின் செப்பம் செய்யப்படும்.

செவ்வாய், 19 டிசம்பர், 2017

இந்தியத் தற்காப்புப் படைகள்



தற்காப்புத் தொடர்பானஇந்தியாவின் நாடாளுமன்றக் குழு எழுபது ஆண்டுகட்குப் பின் இப்போதுதான் திடீரென்று விழித்தெழுந்து முப்படைகளிலும் பலவிதத் தட்டுப்பாடுகள் நிலவுதலைப் பறைசாற்றி யுள்ளது.
இன்னும் கொஞ்ச காலத்தில் வானூர்திப் படையின் பல விமானங்கள் பழையனவாகிப் பயன்படுத்த இயலாமல் போய்விடும்.
தற்போதைய நிலையில் போர்மூண்டால் இரு முனைகளிலும் சண்டைசெய்ய 45 வானூர்திப் படையணிகள் வேண்டுமாம். இப்போது 33 படையணிகள் மட்டுமே உள்ளனவாம். இன்னும் கொஞ்ச நாளில் இதுவும் வெகுவாகக் குறைந்துவிடுமாம்.
மற்ற தரைப்படை கடற்படைகளிலும் குறைவுகள் பலவுள்ளனவாம்.
தற்காப்பு பற்றி இந்தியமக்கள் அவ்வளவாகக் கவலைகொள்வதில்லை. அதனால் கவனிப்பாரற்ற துறைகளில் தற்காப்பும் ஒன்று.  மந்திரி என்ன செய்கிறார், படைத்தலைவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்று அவர்களில் யாரும் கேட்பதில்லை.  எந்த நடிகர் மந்திரி வேலைக்கு வரவிருக்கிறார் என்பதில் அக்கறையுள்ளவர்கள் மக்கள்.
மேலும் அரசின் சலுகைகளைப் பெற பல்வேறு சாதிகளின் போராட்டம் சில மாநிலங்களிலாவது மிக்கத் தீவிரமாகிவருகிறது. சலுகை வரம்புகள் ஐம்பது விழுக்கட்டுக்கு மேலாகிவிடக்கூடாது என்பது இப்போதுள்ள உச்ச வரம்பு என்று தெரிகிறது.
முழுமையாக எல்லாமும் சலுகைமுறையில் ஒழுகிப் போய்விட்டால் பொருளியலும் பாதிக்கப்படலாம்.
இந்தியாவைப்பற்றிய இந்தத் தாளிகைக் கட்டுரை இவற்றை விளக்கமாகத் தெரிவிக்கிறது. படித்து அறிந்துகொள்ளுங்கள்.



Government draws Parliamentary panel fire on military modernisation