சனி, 16 டிசம்பர், 2017

ஒரு காதல் கவி: புதுமையின்பம்

புதுமையின்பம்!



புதுமையின்பம்! ஓடிவா!
காதலனே ஓடியென் முன்வருவாய்!
தேடித்
திரிந்த திருவும் நானாவேன்.
சிவந்த அழகுமேனி
சேரத் துடிப்பாய்?
கனிந்த செவ்விதழில் காதல் படிக்கவா!




உனக்கென யான்செய்த ஒப்பனை காண்பாய்
எனக்கென பின்னே இருப்பது நல்விருந்து!
வாழ்வெல்லாம் சேர்ந்து கிடந்தே இறந்திடும்
போகச் சிறுநாகப் பூச்சிப் பிறவியோ?
சேருமுன் வால்களையே

சீராக நாமிணைத்து
வேறுபாடு ஏதுமின்றி
விருந்துக் கிணைந்திடுவோம்.
என்ன புதுமையின்பம், என்ன புதுமையின்பம்!

நானே அழகியதேளே, புவிமீது
நீயே எனை நாடும் நாதன் —....... நீயறிவாய்!
உன்வேலை தன்னை ஒருவாறு நீமுடிப்பாய்,
என்வேலை பின்னை இனிநான் செய்திடுவேன்.
ஆம்!

உனை உண்டு செரித்திடுவேன், வாவா! வா!
கோரப் பசி பசி!
வாரி யான் உண்ணவே
ஊறும் வாய் கண்டாயே,
உண்ண உணவாகு!
இதோ! என் வயிற்றுக்குள் வந்துவிட்டாய்! இன்பம்!
மெதுவாய் நகர்கின்றேன்
மேல்.
இணைய விட்டு என்றன் துணைதீர்த்துக் கட்டிய
இன்னமுதப் பெண்ணாவேன் நானே
வாழ வந்துவிடு!
என்னுடலின் மேல் இணைந்து
இன்பம் நீகண்டாயே ்,
பெண்ணமு துண்டாய்!
பெருமகிழ்வு நீகண்டாய்!
என் குடலுள் நீ வாழ
பசி!
காதல் மட்டும் எழுதுதற் கெளியது.
எளியதே எழுதி எழுதி
இனிய புகழே நாமே பெறலாம்!

எளியதென் றாலே என்ன கண்ணா?
எழுத எளியது
செய்யக் கடியது என்ன கண்ணா?
கண்டது கடிய தென்பார் அதுதான்
கண்ட தெல்லாம் கடியது
கடிய தெல்லாம் கடுமை யானது,
கடுமை என்பதே ஒருபெருங் கொடுமை.
ஆனால்
கண்ட தெல்லாம் கடிய தாயினும்
காதல் மட்டும் எளியது அன்றோ?
எதற்கோ எளியது? எழுதுவதற்கே!
காதல் மட்டும் எழுதுதற் கெளியது.

ஆயின்:
காதலை எழுதுவோம்; கருதுபுகழ் பெறுவோம்.
கவிகட் கெழுத எளியது காதல்.
காதலர் தமக்கோ செய்யக் கடியது.

காதல் காதல் என்று
கண்டபடி கட்டித் தழுவி
வழுக்கி விழுந்து
...........................................................

முழுக்கவிதையும் இங்கே உள்ளது.

(could not copy :  errors cropped up.)
formatting and colour code could not remove


சொடுக்கவும்.

https://bishyamala.wordpress.com/2007/03/19/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/

https://bishyamala.wordpress.com/2007/03/19/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/


வெள்ளி, 15 டிசம்பர், 2017

நிவாரணம் எங்கே? இதோ....





நிவாரணம் என்ற சொல்லை ஆய்வுசெய்க.
ஒரு துன்பமோ அல்லது துயரோ:
நி   =  நீங்கி;
வார் =  வருகின்ற;

அணம் :  இது ஒரு விகுதி.  பெரும்பாலும் அண்மைப் பொருள் தருவது.     அண் > அண்முதல்;  அண் - அண்மை.  இப்பொருளை இழந்து  வெறும் சொல்லிறுதியாகவும் வரும்.  பட்டு என்பது ஒரு சிற்றூரையும் குறிக்கும்.  அதற்கு அண்மிப் பெரிதாய் இலங்குவது பட்டணம்.  பல பட்டுக்கள் அண்மி நிற்கும் ஒரு சிறுநகரம் பட்டணம்.

கட்டணம்:  ஒருவன் சென்று அல்லது அண்மிக் கட்டும் தொகை.  அணிமைப்பொருள் தேய்ந்துவிட்டதெனினும் ஒப்புக.
வார் என்பது வரு என்பதன் திரிபு.  வரு> வாராய்! வரு > வாரார் ( எதிர்மறை).  வரு> வாரும், வாருங்கள்.

இந்த வார் என்ற சொல் நிவாரணம் என்பதில் பயன் கண்டுள்ளது.
நிவாரணம்: ஒரு துயர் அல்லது இடர், நீங்குவதற்கான; அல்லது கோணல் நிமிர்வதற்கான நிலை.

ஒரு கம்பியை நிமிர்த்தினால் நீங்குவதும் நிமிர்வதும் ஒன்றென்பது விளங்கும்.  பின்  வளைந்த நிலையிலிருந்து  நீங்கி முன் இருந்த நிலைக்குச் செல்கிறது கம்பி.  ஆக அது நிமிர்ந்துவிட்ட்து.

நி. நீ எல்லாம் ஒன்றுதான்.

சொற்களின் அடிப்படைகளைக் கண்டுகொண்டால்
தமிழ் எளிது; இனிது.





அன்னியன்

அந்நியன்
 


அன்னியன் அல்லது அந்நியன் என்பதும் மிக்கத் திறமையுடன் அமைக்கப்பட்ட ஒரு சொல் என்பது நன்கு தெரிகிறது.

இலக்கணத்தைப் படித்து, எல்லாவற்றையும் இலக்கணப்
படியேஆய்ந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்வாருளர்.

எல்லாம் அப்படியே அமைக்கப்பட்டிருந்தால் அல்லவோ
அவ்வழி மாறாமல் சென்று கண்டுபிடிக்க முடியும்? சொல்
அமைத்தவர்களும் பல குறுக்குவழிகளைக்
கையாண்டிருக்கிறார்கள்.


அல்+ நீ +அன் = அன்னியன். (நானும் நீயும் அல்லாத
 பிறன்,) நீ என்பது நி என்று குறுக்கப்பட்டது.


இதில் அல் என்பது, அயல் என்பதன் குறுக்கமாகவும்

அல் என்ற அன்மைப் பொருள்தரு சொல்லாகவும் இரண்டு
நன்மைகளைச் செய்கிறது.

இங்கு பழம்+ நீ என்பது பழனி என்று மாறியதாகப்
பற்றாளர் அல்லது பத்திசெய்வோர்
கூறுவதில்,  நீ என்பது நி என்றே குறுகியது.


அன்னியன்> அன்ய.

Posted on February 23, 2007 retrieved
























அழிந்த சிவஞானபோத உரைகள் பாடல் 1.2 மற்றும் 10.2

சிவஞான போதத்திற்கு யாமெழுதிய உரையில் 1,  2 -ம் பாடல்களுக்கானவை அழிந்தன. இறுதிப்பாடலுக்கான இரண்டாம்பகுதியும் அழிந்தது. இவை கள்ள மென்பொருள்களால் அழிவுண்டன. வெளியாரால் மறைவாக அனுப்பப்பட்டவை இவை.

2008 முதல் 2014 வரை எழுதிய வேறு கவிதைகள் இடுகைகளும் அழிந்தன.

இவை  ஆயிரத்துக்கு மேற்பட்டவை. 

இவற்றுள் எவையேனும் உங்களிடம்இருந்தால் அனுப்பி உதவுவீர்களானால் நன்றியுடையேன்.

இவை சேமித்து வைக்கப்பட்டிருந்த கணினிகளும் செயலிழந்துவிட்டன.

2015, அதன் பின் உள்ளவை பாதிக்கப்படவில்லை.




போதித்தல், போதம், போதனை



இன்று போதித்தல் என்ற சொல் எப்படி அமைந்தது என்பதை அறிந்துகொள்வோம்.

போதித்தல் என்ற சொல்லுக்குக் கற்பித்தல் என்பது பொருள்.
இதில் போ என்பதே பகுதி. தி என்பதும் தல் என்பதும் சொல்லின் பொருளை மிகுத்துக் காட்டுவதற்காகச் சேர்க்கப்பட்ட துண்டுச் சொற்கள்.

போ என்ற அடிச்சொல் தமிழில் உண்டாகிப் பயன்பாடு கண்டு பல நூற்றாண்டுகளோ ஆயிரம் ஆண்டுகளோ ஆயின பின்புதான் போதி என்ற சொல் புனையப்பட்டிருக்க வேண்டும். இதைப் புனைந்த அறிஞன் யாரென்பதை அறிந்துகொள்ள இயலவில்லை.

ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் செல்லும் காரியத்தைச் செய் என்பதே போ என்ற சொல்லின் பொருள். இது ஏவல் வினையாகும். ஏவல் என்றால் ஒன்றைச் செய்யச் சொல்வது.

நாம் எண்ணிய கருத்தை இன்னொருவனிடம் செல்லும்படி செய்வதே போதித்தல் ஆகும்.  மனிதனும் விலங்கும் ஓரிடத்தினின்றும் பிறிதோரிடத்திற்குச் செல்வதுபோன்றே ஒரு கருத்தும் ஒருவனிடமிருந்து பிறனுக்குச் சென்று சேர்கிறது.  

போதித்தல்- (  கருத்து பிறனிடம்)   போகும்படி செய்தல். ஆகவே கற்பித்தல்.
கருத்து பிறனுக்குச் செல்வதால் அவன் அதைப் புரிந்துகொள்வான் என்பது ஊகம் (யூகம்).

கருத்துக்கள் போய்ச்சேர்ந்தாலும் புரியாத மரமண்டைகளைப்  பற்றிப் போதித்தல் என்ற சொல்லுக்குள் ஒரு கவலையைத் திணித்தல் இயலாது.

சொல்லால் நாம் அறியும் பொருளிற் பல தோற்றங்கள் சொல்லின் புறத்து இணைந்து நிற்பவை. சொற்கள் பல இவ்வாறே இயல்கின்றன.  ஆதலின் அதுவே இயல்பு ஆகும்.

பின் போதி என்பது வினைப்பகுதியாகவும், முதனிலைப் பெயராகவும் ஓர் விகுதிபெற்றும் இயன்றது.

போதி + அம் = போதம்.
எ-டு:  சிவஞான போதம்.  சைவ சித்தாந்த ஞான போதம்.

போதமாவது போதிக்கப்பட்ட கருத்துக்களின்  தொகுப்பியைபு.

தமிழில் வீட்டுச் செல்லாகிய போ என்பது இத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்று பொருள்தந்து நிற்பது நமக்குப் பெருமையே ஆகும்.

போதனை - போதி + அன் + ஐ.

இத்தகைய அமைப்புகளிலெல்லாம்  போதி என்ற சொல்லின் இகர இறுதி கெடும் அல்லது ஒழியும். இல்லாவிட்டால் போதி + அன் + ஐ = போதியனை என்றாகிச் சொல் நீட்டமாகிவிடும்.  அத்தகைய நீட்டத்தினால் ஊதியமில்லை. ஆனதொரு பயனும் இல்லை.

போதியனை என்றால் அதில் வரும் யகர உடம்படு மெய் சொல்லுக்குப் புறத்திருந்து புகுவதே ஆகும். அஃது இன்றியே சொல் இனிது புணர்க்கப்படுதலின் அது தேவையின்றாயிற்று என்`க.

இப்போது கவனியுங்கள்:

1.அறு + அம் = அறம்.
(அறுத்து அல்லது அறுதிசெய்து இயற்றிய நெறியமைப்பு.)

அறு + அம் = அற்றம்  (தருணம்).

2. சிறு + அர் =  சிறுவர்.
இங்கு ஓர் வகர உடம்படு மெய் வந்து  இரு துண்டுகளையும் இணைத்த்து.

சிறு + அர் =  சிறார்.
இங்கு று என்பதிலுள்ள உகரம் கெட்டபின் சொல் அமைந்த்து.

அர் எனினும் ஆர் எனினும் ஒன்றே.

அன் விகுதியும் ஆன் என்று வரும்.  அள் விகுதியும் ஆள் ஆகும்.  These are  variations... Not substantially different.

இருவகையாகப் புணர்ந்து இருசொற்கள் கிடைத்தன. போதியனை என்று ஒரு புதிய சொல் தேவையாயின் அப்படி ஒன்றை உருவாக்க வசதியுள்ளது காண்க.

பரிந்து இடும் பரிச்சை (பரீக்ஷா)


இன்று பரீட்சை என்ற சொல்லின் அமைப்புக் காண்போம்.
இப்போது இச்சொல்லின் பயன்பாடு குறைந்துவருகிறது. இதற்கு நல்ல இணையான சொல்லாகத் தேர்வு என்ற சொல் வழங்குகிறது.

பரிதல் என்றால் யாது பொருளென்று முதலில் காண்போம். இது தமிழ்ச் சொல். அன்பு, அறுத்தல், இரங்குதல்,ஒடித்தல், ஒழுகல், தறித்தல், பங்கிடல், பரிந்து பேசுதல், வெட்டுதல், பற்று வைத்தல்,  பகுத்தறிதல் என்பன இச்சொல்லின் பொருளாகும்.

இற்றைத் தமிழன் இதனெல்லாப் பொருள்களிலும் இதைப் பயன்படுத்த அறிந்திராவிட்டாலும், பரிந்துரை என்ற சொல்லையாவது அறிந்து பயன்படுத்தவல்லனாம். “ரெக்கமண்ட்” என்ற ஆங்கிலத்துக்கு ஈடாக இதைப் பயன்படுத்துவான்.

இதனை இதற்கு ஏற்றுக்கொள்க, அல்லது இவனை இச்செயலுக்கு அல்லது பதவிக்கு ஏற்றுக்கொள்க என்ற பொருளில் பரிந்துரை என்பது வரும்.

பரீட்சை என்பது இரு சொற்களைக் கொண்டு அமைந்ததாகும்.  பரிதலும் இடுதலும் அவை.

ஒரு கேள்வியைத் தேர்ந்து எடுக்கிறார் ஒருவர். பல கேள்விகள் உலகில் உள்ளன. அவற்றுள் ஒன்றை அவர் எடுக்கிறார்.  இந்த ஒன்றை அவர் வெட்டி எடுக்கிறார். இதற்குப் பதில் சொல் என்`கிறார். அதாவது நீங்கள் பதிலுரைக்க உங்கள்முன் இடுகிறார்.  இப்படி வெட்டி முன் இடுவதுதான் பரிந்து இடுதலாகும்.  பகுத்தறிந்து இடுகிறார் எனலும் ஆகும்.    பரிதல் சொல்லின் ஏனைப் பரிமாணங்களையும் விரித்துப் பொருத்தலாம். கேள்விக்குப்  பதில் ஒரு மரத்துண்டை உங்கள் முன் வைத்து இதைத் தூக்கு பார்க்கலாம் என்றும் கேட்கலாம்.  பரீட்சை என்பது கேள்வி பதில் பொருந்தியதாக மட்டும் உலகில் இருப்பதில்லை.

இடு  என்பது சை விகுதி பெற்று இடுச்சை ஆனது. பின் இது “ இட்சை” என்று திரிந்துவிட்டது.  இச்சை எனினும் அதுவே.  பரி + இடு + சை >  பரி+ இ(டு)+ சை > பரிச்சை > பரீச்சை> பரீட்சை.

பரிச்சை என்ற ஊர்ப்பேச்சுச் சொல் டுகரத்தை முற்றிலும் விலக்கி நிற்க, அதன் திருத்தமாகிய பரீட்சை என்பது டகர மெய்யெழுத்தையாவது உள்ளடக்கி நிற்பது மகிழ்ச்சிக்குரியதே எனலாம். டுகரத்தின் சுவடாவது தெரிகிறதே.

இச்சை என்ற விருப்பம் குறிக்கும் சொல், இடுச்சை என்று தோன்றி டுகரத்தை முற்றிலும் கெடுத்து இச்சை என்றானது காண்க.  நம் மனத்தை எதில் இடுகிறோமோ அதன்பால் நாம் இச்சை கொள்கிறோம்.

இட்டம் என்ற சொல்லும் இடு+ அம் = / என்று புணர்ந்து இட்டமாகிப் பின் இஷ்டமான கதையை முன்பு ஓர் இடுகையில் விரித்து வரிசெய்ததுண்டு. அதாவது விவரித்ததுண்டு.

இடை டுகரம் மறைதலை இங்குக் காண்க.

கேடு > கே > கேது.  ( கெடுதல் செய்யும் கோள்)
கேடு > கேதம்.  (துக்கம்).  அதாவது உயிர்க்கேடு.

 ஊர்ப்பேச்சுச் சொல் பரிச்சை  தான்.

விரும்பி இடப்படுவது பரிச்சை அல்லது பரீச்சை.இதன் கொடுந்திரிபு பரீக்ஷா.


பின் சந்தித்து உரையாடுவோம்.


 

புதன், 13 டிசம்பர், 2017

பொருளும் அழகும் கவித்தது கவி.



தமிழில் கவ்வுதல் என்றால் அகப்படுத்துதல், வாயினால் பற்றிக்கொள்ளுதல். 

கவ்வு என்பது வினைப்பகுதி,. மேலிருந்து ஒரு பொருளை மூடிக்கொள்ளுதலுக்குக்  கவித்தல் எனப்படும்.

ஏதேனும் ஒரு பொருளை உட்படுத்தி, அதன்மேல் வரணனைகளையும் கருத்துகளையும் கொண்டு மூடினால் அல்லது போர்த்திவைத்தால், அப்பொருளைக் கவித்துவைத்தோம் எனலாம்.

நிலவே நிலவே ஓடிவா என்றால் நிலவு என்ற பொருளின் மேல் வருதலாகிய கருத்தினைக் கவித்தும் குவித்தும் மேல்விரித்து உட்பொதிந்தும் வைக்கிறோம் என்று பொருள்.

இப்படிக் கவித்தலைத்தான்  கவி என்கிறோம். கவி > கவிதை.  இங்கு தை என்பது விகுதி.  

தை என்பது பொதுவாக ஒரு விகுதி. வினைப்பகுதியையும் பிற சொற்களையும் சென்றிணைந்து புதிய சொல்லை அமைக்கும்.

கவ்வுதல், கவித்தல் தொடங்கிக் கவடு (கபடு) உட்படப் பல கருத்து விரிவுகளை உள்ளடக்கிப் புதிய சொற்களை மொழிக்கு ஈந்தது கவ்~ என்ற அடிச்சொல். திறன்மிக்க இவ்வடி  பிறமொழிகளையும் வளப்படுத்தியது, நெல்லுக்கு ஓடியது புல்லுக்கும் ஊட்டம் தந்ததுபோலாம், இது பிற ஆதாரங்களுடன் கூடி நின்று தமிழின் தொன்மையை விளக்கவல்லது.

கவை முதலிய சொற்கள் தமிழில் உள. அவற்றை ஈண்டு விரிக்கவில்லை.
இனிச் சொல்லமைப்பினைக் கவனிப்போம்.

கவி > கவிதல்
கவி > கவித்தல்.
கவி > கவிதை.

பொருளின்மேல் அழகு கவித்தல்; சிந்தனை கவித்தல். எண்ணங்களை விரித்து அடக்குதல். வார்த்தைகளைப் போர்த்தி மூடுதல்.

தை விகுதிச் சொற்கள்.   காழ் > கழுதை;   பழ > பழுதை.   வன > வனிதை.   புன்> புனிதை ( புனலால் தூய்மை பெற்றவள்); (புன்>புனல்) . தேவு > தேவதை;  அகம் > அகந்தை.

இவை மொழியிற் பலவாம்.

ஒரு பொருண்மேல் மனம் கவிந்து சொற்கள் இயைந்து வெளிப்படுதல் - கவிதை.  கவி என்பது முதனிலைத் தொழிற்பெயர்.

கவிதை, பாக்கள் சிறந்த மொழி தமிழ்.  கவிதைச்சொல் பிறமொழிகளிலும் 
 சென்று வழங்கியது தமிழிற்குப் பெருமை ஆகும். 

 இதை இன்னொரு முறை வேறு கோணத்தினின்று காட்டுவோம், வாய்ப்புக் கிட்டுகையில்.

will edit. Some dots have appeared in unwanted places
These will be later corrected.