வெள்ளி, 15 செப்டம்பர், 2017

நெடும்பல்லியத்தனார் - சங்கப்புலவர்



நெடும்பல்லியத்தனார் என்பவர் ஒரு சங்கப்புலவர்.
சங்ககாலத்திலும் பல வாத்தியக் குழுக்கள் இருந்தன/ அப்போதிருந்த இசைக்கருவிகளை அவர்கள் இசைத்தனர்.   அப்போது அவை குறைவு என்று எண்ணலாகாது,  யாழ்போலும் சில இப்போதில்லை. வீணை என்பது வேறு என்ப.
இயம் என்ற தமிழ்ச்சொல் இசைக்குழுவைக் குறித்தது. இச்சொல்தான் வாழ்த்தியம்  > வாத்தியம் என்ற சொல்லில் இருக்கிறது.
இயம் என்றால் பல் கருவிகள் ஒன்றாகச் செயல்படுவது என்று பொருள்.  கூத்துக்கும் இயம் இன்றியமையாது தேவைப்பட்டது.  எனவே இயங்களை இயக்க அறிந்தவர்கள் பலர் அப்போதிருந்தனர்.
இயைதல் பல கருவிகள் இணைந்தொலித்தல்; இயை > இயம். ஐகாரம் கெட்டு அம் விகுதி புணர்ந்தது எனினுமாம்.  இய என்பது உரிச்சொல்.  அடிச்சொல் என் க.   இயை என்பதினின்று இசை என்பது தோன்றியது.   யகர சகரப் போலி/  பல சொற்களில் இத்தகு திரிபு நிகழும்.
நெடும் பல்லியத்தனார் என்ற பெயர் அவர் பல இயங்களை உடையராய் இருந்தாரென்பதைத் தெரிவிக்கிறது  இவற்றை இயக்குவது அவர்தம் வாழ்க்கைத் தொழில் என்று தெரிகிறது; அவர் தம் தொழிற்சிறப்பாலே அறியப்பட்டவர்; அவர் இயற்பெயர் அறியோம். அவர் உயரமானவர் போலும் அவரினும் உயரம் குறைந்த இயம் இயக்குவோர் இருந்தனர் போலும். நெடும் என்ற அடைமொழி உள்ளவராதலின்..

அக்காலத்தில் அவர் மிகுபுகழ் படைத்தவராக இருந்தமையின்  அவர் இயற்பெயரால் அறியப்படுதலின்றி அவர்தம் தொழில் அதன் திறம் இவைகொண்டே அறியப்பட்டார்.
சங்கப்புலவர் ஆதலின்,  சிறந்த செய்யுள் இயற்று திறனும் உடையராய் இருந்தார்.; அவர்தம் பாடல் புறநானூற்றில் உளது. 64-வது பாடல் காண்க. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை “ பகைப்புலம் மரீஇஅய தகைப்பெருஞ் சிறப்பினன் என்று அவர் புகழ்கிறார். ஒரு பஞ்சகோலம் வெளிப்படுத்திய விறலியைப் பார்த்து நீ முதுகுடுமியிடம் சென்று பரிசில் பெறுக; உன் வறிய நிலை உனக்கு மாறிவிடுமென்று அவர் பாடியுள்ளார்., அத்தகு வள்ளன்மை அவனது ஆகும்.

இது இடுகைசெய்யப்பட்டும் கைகூடவில்லை. இது மீள்பதிவு.
பிழைகள் இப்போது கவனிக்கபடா.   பின். 


Posting as B.I Sivamala

An error occurred while trying to save or publish your post. Please try again. Dismiss



மைசூரும் ஏர்த்தொழிலின் பெருமையும்.


ஏருழவருக்குத் தமிழ் நாட்டில் புகழ். ஏனைத் திராவிட மொழிகள் வழங்கும் நாடுகளிலும் புகழ். பாரத தேசமெங்கிலும் புகழ், உணவு தந்து உலகு புரக்கும் அவர்களை உலகம் போற்றிக்கொண்டிருக்கிறது.


இப்படி ஏர்த்தொழிலை ஏற்றிப் போற்றி அதன் புகழைத் தன் அணிகலனாக பெயர்சூட்டிக்கொண்டுள்ள ஊர்தான் மைசூர்.


இற்றை மைசூரில் ஏர்த்தொழில் வெளிப்படையாகத் தெரியப்போவதில்லை. அது பண்டைப் பெருமையாகும். பக்கத்து நிலப்பகுதிகட்குப் பெயர்ந்து நிற்கும்.


மைசூர்


<  மையூர்


<  எருமையூர்


<  ஏர்மையூர்.


<  ஏர்மெய்யூர்.


மைசூர் என்ற சொல்லைப் பின்னோக்கி அலசினால் இப்படி வரும்.


எருமையென்ற விலங்கு அதன் பெயரை ஏர்த்தொழிலினின்றே பெற்றதென்பதே முடிபாக  முன்னரே ஆய்வாளர்கள் அறிந்துகொண்டுள்ளனர்/


அது உண்மையில் ஏர்மெய். ஏருக்குரிய உடலைப் பெற்ற விலங்கு.


அறியாமையினால் அவ்விலங்கை இப்போது யாரும் அந்தக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதில்லை. அது பாவம்.

preview and edit not available. 

ஏர்த்தொழில் என்பதை ஈர்த்தொழில் என்று கணினி திருத்துகிறது.

கவனமாகப் படிக்கவும்.  Some auto errors have been reverted. Will review.

வியாழன், 14 செப்டம்பர், 2017

மீனவ நண்பர்கள்.

நாம் மீன் உண்ணாதவர்களாக இருக்கலாம். சைவ உணவினிகள் உண்ணார். என்றாலும் மீனவ   நண்பர்கள்  ஆபத்தில் உதவக்கூடியவர்கள்..  மனத்தில் ஏது நினைத்தாளோ ஒரு சீன நங்கை பினாங்குப் பாலத்துலிருந்து கடலில் குதித்துவிட்டாள். அருகில் யாருமில்லை. யாரும் பார்க்கவில்லை என்று எண்ணிக்கொண்டுதான் குதித்தாள்.

ஆனால் அவளும் அறியாமல் நம் மீனவ நண்பர்கள் இதைப் பார்த்துவிட்டனர்.
அவர்கள் இருந்த படகில் அங்கு விரைந்து வந்து அவளைக் காப்பாற்றிவிட்டனர். இப்படிக் காப்பாற்ற அவர்களால்தான் முடியும்.

அன்புடன் பேசித் தற்கொலை  வேண்டாம், நாங்கள் இருக்கிறோம் என்று போதித்தனர்.

அவர்களை மீனவ நண்பர்கள் என்பது வெகு பொருத்தமே.

இந் நிகழ்வு பற்றி 2016ல் எழுதிய கவிதை இதோ.



பினாங்குப் பாலமே ஆனால் என்ன?
பிறரருகில் இல்லாமல் போனால் என்ன?
 

விலாங்குப் பாணியிலே  நீருக் குள்ளே
விழுந்ததுமே எங்கிருந்தோ கூட்டம் வந்து
 

மீனவர்கள் நாங்களெனக் குதித்து மீட்டார்! 
மேனிலையர் வேறுசிலர் மேனி முந்தார்.
 

இனாங்கு தீர்மொழியால் தண்மை காட்டி
எடுத்தார்கள் குதித்தாளை மூழ்கு முன்னே. 



இன்னாங்கு  இனாங்கு என எதுகை நோக்கிச் சுருங்கிற்று. 
பொருள்: துன்பம்.
தண்மை :  குளிர்ச்சி.


வாத்தியமும் வாத்தியாரும்



வாழ்த்தியம் என்பது  வாத்தியம் என்று திரிந்தது ஓர் இயல்பான திரிபு. இதில் ழகர ஒற்று போய்விட்டது. வாய்ப்பாடம் சொல்லிக் கொடுப்பவர் வாத்தியார் எனப்பட்டார். அதில் யகர ஒற்று ஒழிந்தது. இப்படி எழுத்துக்கள் ஒழிந்தமைக்குக் காரணம், தமிழர்கள் எப்போதும் தம்மொழியைத் திரிபுறப் பேசியதுதான் . ஆனால் இத்தகைய திரிபுகளால் ஒரு நன்மையும் விளைந்தது. ஒரு புதிய சொல் பயன்படுத்துவோனுக்குக் கிடைத்தது. வாத்தியம் ஆனமையால், வாழ்த்து என்ற சொல் அவன் எண்ணத்திலிருந்து மறைந்தது. பொருள் விரிவு அடைந்தது. எப்படி   ?  வாழ்த்து ஏதும்வழங்காத போதும் சொல் பயன்பாட்டில் தடையேதுமின்றிச் சென்றிணைந்தது. அதாவது, வாழ்த்தியமாகவே இருந்திருந்தால், வாழ்த்தும்போதுமட்டுமே அது பயன்பட முடியும். ழகர ஒற்று மறைந்ததால், ஏனைச் சூழ்நிலைகளிலும் கருத்துத் தடையின்றிப் பயன்பட்டது.ஓர் இறந்தவீட்டில் வாசிப்பதும் வாத்தியமே ஆனது.
வாத்தியார் ஆனதால்,  வாயாற்பாடம் சொல்லாமல் தபால் அல்லது அஞ்சல்மூலம் கற்பிப்பவரும் வாத்தியார் என்ற சொல்லில் அடங்கினார்1
  ஆனால் அப்படி மாறியபின் இன்னொரு தொல்லையும் விளைந்தது. அது என்ன ? அச்சொல் உப அத்தியாயி என்ற சொல்லுடன் குழம்பியது. சிலர் உப அத்தியாயி என்ற சொல் வாத்தியார் என்று திரிந்துவிட்டதாக நினைத்தனர். ஆனால் இதனால் பயன்படுத்துவோனுக்குக் கருத்துத்தடை ஏதும் ஏறபடவில்லை.
பல்லியத்தனார் என்று ஒரு கங்கப்புலவர் இருந்தார்.  அவர் பாடலைச் சுவைத்துக்கொண்டிருந்தகாலை இந்தக் கருத்துக்கள் மேலெழுந்தன.  இவற்றை எழுதிவிட்டபடியால் அடுத்த இடுகையில் அவரைப் பற்றி அறிந்துகொள்ளலாமே! 

-----------------------------------------------------
குறிப்புகள்
------------------------------------------------------
 உப + அத்தியாயி =  உபாத்தியாயி, >  உபாத்தியாயர்.  இலக்கணம் சொல்லிக்கொடுப்பவர்.

திருத்தங்கள்:  பின்.

புதன், 13 செப்டம்பர், 2017

சமஸ்கிருதத்துக்கு முந்திய சந்தாசா மொழி.



சம்ஸ்கிருதம் என்ற சொல்லை மேனாட்டறிஞர் ஆய்ந்துள்ளனர்.  அதன்படி  “ நன்றாகச் செய்யப்பட்டது “ என்பது அதன் பொருள் என்று  கூறினர். இந்தப்பெயரை யார் எப்போது எந்தக் காரணத்தினால் வைத்தார் அல்லது வைத்தனர் என்பதற்கான ஆதாரம் ஒன்றும் யாருக்கும் அகப்படவில்லை. எனவே முன்னரே ஆய்வு செய்யப்பட்டிருந்தாலும் இனி யாராவது ஆய்வு செய்வதற்குத் தடைகள்  எவையும் இல்லை.


தமிழ் என்ற சொல்லும் பழங்காலம் தொட்டு வழங்கி வருகின்றது. தொல்காப்பியப் பாயிரத்திலும் இப்பெயர் வருகின்றது.  தமிழ்வழங்குமிடத்தைத் தமிழ்கூறு நல்லுலகம் என்று தொல்காப்பிய நூல் குறிக்கின்றது. இவ்விடத்தை “ நாடு”  என்னாமல் “  உலகம் “ என்று குறித்தபடியால் இது சிலபல நாடுகளை உள்ளடக்கிய நிலப்பகுதி என்று பொருள்கொள்ளலாம். ( உலகம், நாடு என்பன ஒருபொருளனவாய்த் தோன்றுமிடங்களும் உளவெனினும். ).  

 தமிழ் என்ற சொல் எங்கனம் யாரால் முதலில் பயன்படுத்தப்பட்டது என்பதும் யார் புனைந்தது என்பதும் தெரியவில்லை. தமிழ் என்னும் சொல்லமைப்புக்குப் பலர் பல பொருள் கூறியிருப்பினும், இது  அமிழ் என்ற சொல்லினின்றும் திரிந்தது என்று அறிஞர் சிலர்  கூறுவர்.   அமிழ் > தமிழ்.  அகர வருக்கச் சொற்கள் தகர வருக்கமாகவும் திரியும் என்பது சொன்னூல் முடிபு ஆகும்.  அமிழ்தல்  என்பது தமிழ் நிலப்பகுதி கடலில் அமிழ்ந்து  போனதைக்  குறிக்கும் என்பர். சமஸ்கிருத நூல்களும் தமிழ் நிலப்பகுதி கடலிற் சென்றதைக் குறிக்கின்றன. கடல்கோள்கள் பல நிகழ்ந்துள்ளன.  அண்மைய சுனாமிகள்  இவற்றுக்குச் சான்று பகரும். 

சமஸ்கிருதம் என்ற பெயர் முதன்முதலில் இராமாயணத்தில்தான் கிடைக்கின்றது.  ஆகவே சமஸ்கிருதம் என்ற பெயர் பிற்காலப் பெயராகும். முன்னர் இம்மொழிக்குச் சந்தாசா என்று பெயரிருந்தது.  சந்த மொழியாகச் சமஸ்கிருத மிருந்ததால், இப்பெயர் பொருத்தமானது ஆகும். இது “சந்த  அசை” என்ற தமிழ்ச் சொற்களின் அடிப்படையில் அமைந்தது ஆகும்.

சந்த அசை > சந்தசை > சந்தாசா

சிலவகைச் சந்தங்கள் பலரும் அறிந்தனவாய் உள்ளன. தம்-தம், தாம்-தாம், தன-தன- தனதாம்,  தாம்-தன எனப் பல உள.   தம்-தம் என்ற சந்தங்கள் திரிந்து  சந்தம் ஆயின.   த என்ற முதலுக்கு  ச என்பது ஈடாக நிற்குமிடங்களைப் பல இடுகைகளில் உரைத்துள்ளோம். தம்தம் என்பதே சந்தம் ஆம் என்றுணர்க. ஒரு திரிபைக் கண்டவுடனே மூளை குழம்பி அது வேறே   என்பார்  மொழியின் பல்வேறு திரிபுகளை அறியாதார்.  தசை = சதை:.  மறவாதீர்.

இங்ஙனம் சந்த அசை என்பது சந்தாச ஆகி அகில இந்தியச்  சேவை புரிந்ததும் நம் பாக்கியமே ஆகும்.



திங்கள், 11 செப்டம்பர், 2017

ஒடு ஓடு ஒட்டு ஒட்டுதல் : சொற்பொருள்.



Oo

இப்போது  ஒடு  என்ற சொல்லைப் பற்றி நமது சிந்தனையைச் செலுத்துவோம்..  ஒடு என்றால் உடன்செல்லுதலைக் குறிக்கிறது.  இது தனிச் சொல்லாக வாக்கியத்தில் பயன்படுவதில்லை. ஓடு என்று நீண்டும் ஒலிக்கும் இச்சொல்,  “காற்றொடு மழைத்துளி “  என்பதுபோலும் தொடரில் பிற சொற்களுடன் இணைந்து நின்று பொருள்தருகிறது. இத்தகைய சொற்களை “உருபுகள்”  எங்கிறார்கள், பொருளை வேறுபடுத்திக் காட்டுவதால், ( அதாவது அர்த்தத்தை வேறாக்கிக் காட்டுவதால் ) வேற்றுமை உருபு என்பர் இலக்கணத்தில்.

காற்றொடு என்று  ஒடு என்ற உருவிலும்  காற்றோடு என்று ஓடு என்ற நீள் உருவிலும் இது வரும். இங்கனம் ஒடு- ஓடு உருபுகளாக மட்டும் நிகழ,  அது வினையாக வேண்டுமானால் ஒட்டு (ஓட்டுதல்) என்று வரவேண்டும்.  ஒட்டுதல் என்பதன் பொருள் நீங்கள் அறிந்ததே.  ஒன்றை மற்றொன்றுடன் சேர்த்துப் பசை கொண்டோ அஃது இல்லாமலோ வைத்தல்.  கடிதத்தைக் கூட்டில் வைத்து ஒட்டித் தபாலில் போடு என்பதுபோலும் வாக்கியங்களைக் கேட்டிருக்கலாம்.

ஒட்டு என்பது “எல்லாம்” என்றும் பொருள்தரும்.  இது மலையாளத்தில் இன்னும் வழக்கில் உள்ளது.  “கேரளம் ஒட்டுக்கும் கிட்டுஇல்லா”  என்ற மலையாளவாக்கியத்தில் கேரளம் எல்லா இடங்களிலும் என்று பொருள்தரும்.

துணி எங்காவது கொஞ்சம் கிழிந்துவிட்டால் எறிந்துவிடாமல் ஒட்டுப்போடும் பழக்கம் ஒருகாலத்தில் இருந்தது.  தையல் எந்திரத்தால் திறமையாக ஒட்டுப்போடுகிறவர்கள் இருந்தனர். இரண்டு மலேசிய வெள்ளிக்கு  ஓர் அழகான ஒட்டுப்போடும் ஒரு சீனரை மலேசியாவின் சிலிம்ரிவர் பட்டணத்தில் சந்திக்க நேர்ந்தது.  அவருடைய பிள்ளைகள் எல்லாம் படித்துப் பெரிய பதவிகளில் அமர்ந்தபின், இந்தவேலையை விட்டுவிடும்படி வற்புறுத்தியதாகவும், தாம் இறந்தபின் யார் இவ்வேலையைத் தொடரப்போகிறார்கள் என்றும் என்னிடம் சொல்லிக் கவலைபட்டார். இது தொண்ணூறுகளில் நடந்த நிகழ்ச்சியாதலின், அப்போதே எழுபதுக்கு மேலாகிய அவர் இப்போது போயிருப்பார்.  சில ஆண்டுகளின்முன் அங்கு சென்றகாலை அவர் கடை அங்கு காணப்படவில்லை. ஓட்டுப்போடும் கலை ஒழிந்துவிட்ட்து.

ஒட்டுக்கடைகளும் இப்போது குறைந்துவருகின்றன. அவற்றுக்குப் பதிலாக ஒட்டாக இல்லாமல் தனிக்கூரைகளுடன் கூடிய நிலைக்கடைகள் பல இடங்களில் இயங்குகின்றன. சிறுதொழில் செய்து பிழைப்போருக்கு ஒரு வழி வேண்டுமே!

உடலும் தோலும் ஒட்டிக்காணப்படும் விலங்கு ஒட்டகம் எனப்படுகிறது.  ஒட்டு என்ற சொல்லுக்கு இதுவும் வலிமைசேர்க்கும் அமைப்பே ஆகும். குதித்துக் குதித்தோடுவது குதிரை ஆனதுபோல உடல் ஒட்டிய விலங்கு ஒட்டகம்,  இது தமிழன்றிப் பிறிதில்லை என்பதறிக.  “கேமல்” என்பது அதற்கான ஆங்கிலம் ஆகும்.

(எழுத்துப் பிழை திருத்தம் - கவனிக்கப்படும்).


 குறிப்பு:


தபால் -   தன்பால் கொணரப்படுவதால் த-பால் ஆனது. காரண இடுகுறியாதலால் பிறர்பால் செல்வதும் அதுவே. பிறனும் ஒரு “தான்- தன் “  என்பதில் அடக்கம்.  செய்தியைத் தந்திடுவது தந்தி.   இது தந்து என்ற எச்ச வினையினின்று புனைவுற்ற சொல்.