செவ்வாய், 9 மே, 2017

Internet expensive in USA?





Even though the Internet was invented in the United States, Americans pay the most in the world for broadband access. And it’s not exactly blazing fast.

---  Hannah Yi

This is how Internet speed and price in the U.S. compares to the rest of the world




Surprisingly in Malaysia, you can in certain instances get it free without restriction.

பைக்கட்டும் packet-டும் ( ஒத்தொலிச் சொற்கள் )


ஒத் தொலி ச்  சொற்கள்

பைகளை ஒன்றாகக் கட்டிவைத்தால் அதைப்   "பைக்கட்டு" எனலாம். அல்லது சாமான்கள் பைக்குள்ளிட்டுக் கட்டப்பட்டிருந்தாலும் "பைக்கட்டு" என்ற சொல் அதைக் குறிக்கப் பயன்படுவதில் தவறில்லை.

ஆனால் இச்சொல் "பாக்கட்"  packet  என்பதனுடன் ஒலியொருமை கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். மற்றும் "பை" என்ற சொல்லுடன் "பாக்" என்ற சொல்லும் தலையொன்றி இருப்பதையும்
நீங்கள் காணலாம்.

மிகப் பழங்காலத்து மனிதர்கள் மரங்களில் பைபோலக் கட்டித் தொங்கவிட்டு இரவில் அதனுள் ஏறி உறங்கினர் என்பர்.  சில‌
காட்டுவாழ்நர் இன்றும் இங்ஙனம் வாழ்தலைச்  சில நாடுகளில்
காணலாம்.  நல்ல வீடு கட்ட அறிந்து தரையில் பாய்போட்டுப்
படுக்கத் தொடங்கியபின் பை என்ற சொல்லிலிருந்து பாய் என்ற‌
சொல் திரிந்ததாகத் தெரிகிறது.

பை > பாய்.

ஆனால் தரையில் பரப்பியதுபோல் இடப்படும் காரணத்தால் "பாய்" என்ற சொல் பிறந்தது என்றும் ஆய்வு செல்கின்றது.

பர > பரப்பு.
பர > பார் (பரந்த உலகம்).
பலகை

பத்திரம் (இலை, ஆவ்ணம்)
பாழ் (பரந்த விளைதல் இல்லா நிலம். பயனற்ற இடம்).
பட்டை
பட்டயம்
பட்டாங்கு
பட்டியல்
பட்டோலை
படு, படுக்கை.

இங்ஙனம் பல சொற்கள்  ஆங்கிலத்தில் "ஃப்ளாட்" என்ற சொல்போல நிலத்தி  ற் படிதல் போன்ற நிலையில் உள்ளவையாய்
காணப்படுதல்,  யாரும் ஆய்தற்குரியனவாகும்.

இவற்றைப் பின்னர் ஆராயலாம்.

சீனமொழியிலும்  "பாவ்" என்றால் கட்டுதல்.. பைப்பொருள் குறிக்கிறது; இதையும் கவனிக்கவேண்டும். ("தா பாவ்")

இவை நிற்க,பைக்கட்டும் பாக்கட்டும் கொண்டுள்ள ஒற்றுமை
மட்டும் குறித்து நிறுத்திக்கொள்வோம்.



திங்கள், 8 மே, 2017

பிற்காலத் தமிழில் பிறமொழிச் சொற்கள்

சில சொற்கள் எந்த மொழியிலும் நிலைமைக்கு ஏற்ப உயர்ந்த இடத்தைப் பிடித்துப் பயன்பாட்டுத் தகுதியை அடைந்துவிடுகின்றன.
இத்தகைய சொற்களில்  தகவல் என்பது ஒன்று என்று கூறினால்
அது மிகையாகாது.

இது தகவல் பரிமாற்றம் ஒரு முன்மையான இடத்தைப் பெறுகின்ற காலமாகும். ஆகவே தகவல் என்ற சொல்லை நாம் அறிந்துகொள்ள‌
வேண்டியது தேவையாகின்றது.

பிற்காலத் தமிழில் பல பிறமொழிச் சொற்களும் கலந்துவிட்டன என்பதை நாம் அறிவோம். சில  உண்மையில் பிறமொழியின ஆகும்,
வேறுசில பிறமொழியினபோலும் ஒரு தோற்றத்த உடையனவாய்
உள்ளன. எடுத்துக்காட்டாக பார்லிமென்ட் என்ற ஆங்கிலச் சொல்
பாராளுமன்றம் என்ற தமிழ்ச் சொல்லுடன் ஒலியொற்றுமை உடையதாய்  உள்ளது. இது பார் ஆளும் மன்றம் என்று பிரிக்கத்
தக்கது ஆகும். ஆகவே தமிழ்ச்சொல். இது பின் நாடாளுமன்றம்
என்று மாற்றப்பட்டு இப்போது நல்ல பயனழகு உடையாதாய் இலங்குகின்றது


தாங்கி என்ற சொல் இன்னொன்று. இதைத் தமிழர்கள் தண்ணீர்த் தாங்கி என்றனர். தண்ணீர் சேமித்து வைத்து ஓர் உயரமான இடத்தில்
இருத்தப்பெற்று அங்கிருந்து வீடுகட்குப் பகிர்ந்தளிக்கும்
கொள்கலம். பின்னாளில் வெறும் "தாங்கி" என்று மட்டும் சொன்னார்கள். இது வட இந்தியாவிலும் பரவிப்  பின்னர் ஆங்கிலத்தில் வழக்குப் பெற்றது.

கப்பல் தமிழே என்று ஆசிரியர் சிலர் எழுதியுள்ளனர்.

இத்தலைப்பை வேறொரு முறை தொடர்வோம்.

தகவல் என்ற சொல்:

தகுந்த செய்தி என்று பொருள் படுவது.  விடையம் > விடயம் என்பது விடுக்கப்படும் செய்தி என்பதுபோல, இத் தகவல் என்னும் சொல் தக்க செய்தி என்பதறிக.  தகு> தகவு; தகவு> அல் = தகவல். அவ்வளவுதான் இதன் சொல்லமைப்பு என்றறிந்து இன்புறுவீர்.

இத்தலைப்பை வேறொரு முறை தொடர்வோம்.

will review  and edit.


ஞாயிறு, 7 மே, 2017

இறைவன் ஆக்கிய ஆகமங்கள்

அறிவு என்பது வெளியிலிருந்து உள்ளுக்குச் செல்கிறது. தவளை தாவித் தாவிச் செல்வதை மனிதன் காண்கிறான். அதன்பின்னரே அது
தாவித் தாவிச் செல்லும் ஓர் உயிரி என்பதை உணர்ந்து கொள்கிறான். இந்த "அறிவு" வெளியிலிருந்து உள்ளுக்குச் செல்கிறது. அதுவே தொடக்கமாகும். அடுத்து, தவளையைப் பற்றி அறிந்து கொண்ட ஒரு மனிதன் ஆசிரியனாகி ஒரு பிள்ளைக்குத் தெரிவிக்கிறான். பிள்ளையும் அறிவு பெறுகிறது, இது நேரடியாகக் கண்டறிந்த அறிவு அன்று, ஆசிரியன் வாய்க்கேட்டறிந்ததே ஆகும். இது நேரில் தவளையைக் கண்ட மாத்திரத்தில், பிள்ளைக்குள் முழுமை பெறுகிறது. கற்ற அறிவு உறுதிப்படுகிறது, அதுகாறும் அது கேட்டறிந்ததே ஆகும். பின் கண்டும் உறுதி பெறுகிறது.

நாம் அறிந்த பல‌, நாம் நேரிற் கண்டு அறிந்த அறிவு அல்ல, பிறரிடம் இருந்து அறிந்துகொண்டவையே ஆகும். இந்தப் பிறர், இப்போது உயிரோடிருப்பவர், முன் இருந்தவர் என இருவகை. முன் இருந்தவர் எழுதிவைத்ததும் இப்போதிருப்பவர் எழுதிவைத்து நேரில் நம்மிடம் சொல்லித்தர இயலாதிருப்பதும் ஆக இருவகை..


நீண்ட காலமாக நடப்பில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நெறிகளும் முறைகளும் ஒன்று திரட்டப்பட்டு எழுத்து வடிவாக ஆக்கப்பட்டதே
ஆகமங்களும். இறைவனைத் தொழுதற்கும் ஆலயங்கள் அமைப்பதற்கும் இன்னும் ஏனைய இறைப்பற்றுத் தேவைகளுக்குமாக, ஏற்பட்ட செய்ம்முறைகள், எண்ணங்கள், கருத்துகள் முதலியவை இந்த எழுத்துக்களில் இடம்பெற்றனஇவற்றை உருவாக்கியவர்கள், இறைநலம் போற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள். இவற்றை எழுதும்போது
எந்த மொழியில் எழுதிவைப்பது என்ற கேள்வி எழும், எழவேண்டும். இவற்றைக் கற்று நடைமுறைப்படுத்தவேண்டியவர்கள் பெரும்பாலும் பூசாரிகளாக‌ இருந்தமையால், அவர்கள் இறைவழிபாட்டு நடப்புகளில் பயன்படுத்தும் சமஸ்கிருதம் என்னும் சங்கத மொழியில் எழுதப்பட்டன. இப்படி உருவாக்குமுன், வேறுமொழிகளில் அல்லது சமஸ்கிருதத்தில்  எழுதப்பட்ட பல சிறு ஏடுகள் இருந்திருக்கலாம். வற்றிலிருந்தும் நடைமுறைகள் திரட்டப்பட்டிருக்கலாம். அவை திரட்டப்பட்டு சங்கத‌ மொழியில் இறுதிவடிவம் கொடுக்கப்பட்டு மிருக்கலாம். இந்த‌ இறுதிவடிவத்தின்பின், அச்சிறுநூல்கள் தேவை0படாதவை. அவற்றைக் கைவிடுதல் என்பது இயல்பானதே. இப்படிச் செய்திருக்க மாட்டார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிந்தாலன்றி, இத்தகைய‌
நூல்வடிவங்கள் இல்லையென்று எண்ணிக்கொள்வது அறியாமையே ஆகும். வரலாற்று அறிவுக்காக பழையனவற்றைச் சேர்த்து வைத்துப் 
பின் ஆராயும் நடைமுறை, குறிப்பாகத் தமிழனிடமும் பொதுவாக‌
இந்தியனிடமும் இருந்ததில்லை.இந்த நிலையில் திடீரென்று எதிர்   தோன்றும் ஒரு ஆகம நூல்,  இறைவனால் அருளப்பட்டது என்று சொல்வது, இயல்பானதே ஆகும்.சிந்திக்கும் மூளை இறைவனால் அருளப்பட்டது என்னில், அதிலிருந்து போந்த ஆகம விடையங்களும் அவனால் அருளப்பட்டவையென்றே முடிபுகொள்ளல், ஏற்புடைத்தே!.


அவனன்றி ஓர் அணுவும் அசைவத்தில்லை. அசைந்த அணுக்களும் எழுதிய எழுத்துக்களும் அவன் அசைவே ஆகும். ஈர்க்கப்பட்ட மனத்தின் அசைவையே ஆசை என்கிறோம்: அசை> ஆசை, இது முதனிலை திரிந்த தொழிற்பெயர். இறைவனின் ஆசையால் மனிதனின் ஆசை எழுந்து, இவை உருப்பெற்றன.


ஒரு  பற்றன்  ஒரு நடைமுறையை  முற்றாகக் கடைப்பிடிக்க வேண்டின்,  அந்நடைமுடைகள் இறைவனால் அருளப்பட்டவை என்று நம்புதல் இன்றியமையாதது ஆகும்.  ஆக்கிய அனைத்தும் இறைவனால் ஆக்கப்பட்டவென்பது உண்மைநெறியும் சமயக் கடைப்பிடியும் ஆகும்.

தலைப்பு :  இறைவன் ஆக்கிய ஆகமங்கள்

will review to edit and detect hacker attacks.




சனி, 6 மே, 2017

பாரியை

பார் என்பது இவ்வுலகைக் குறிக்கிறது.இவ்வுலகில், கணவனென்பானுடன் இணைந்து 
வாழ்வு நடாத்துபவளே பாரியை. இங்கு இரு சொற்கள் கோவைப்பட்டு நிற்கின்றன.
ஒன்று பார். மற்றொன்று: இயை என்பது. இதன்பொருள் இயைதல், அதாவது 
 இணைதல் என்பதாம்.

மனைவி என்பவள் வீட்டுக்காரி என்று பொருளுணர்ந்து
கொள்ளப்படுவாளாயின், ஒப்பிடுங்கால் பாரியை என்று
குறிப்பிடப்படுபவள், பாரெங்கும் அவனுடன் இயைந்து
வாழ்பவள் ஆவாள். இச்சொல்லால் காட்டப்படுவது எல்லையில்லா
 உறவு ஆகும்.

இச்சொல் வேறு மொழிகட்கும் தாவி வழங்குவது இச்சொல்லின் விரிபொருளையும் திறத்தையும்

உணர்த்துகிறது

நல்லதோர் தீர்ப்பிது...........

இங்கு குறிப்பிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பாராட்டி ஒரு பாடலை
எழுதியிருந்தேன். இன்னொரு பாடலையும் எழுதினேன். அதை அப்போது வெளியிடவில்லை. அதை இங்கு பதிவு செய்கிறேன். நன்றாக இருப்பின் பாடி மகிழுங்கள்.

நால்வருக்கும் சாவென்ற நல்லதோர் தீர்ப்பிது
மேல்வர நாட்டினர் மிக்கமகிழ் ‍‍=== வால்வரிந்து
ஏற்ப துறுதியே  இஃதொன்றும் தீதில்லை;
கேட்பாரும் கீழ்மை அற.

இதன் பொருள்:

நால்வருக்கும் ~  நான்கு குற்றவாளிகளுக்கும்;
சாவு என்ற ~  மரணதண்டனை உறுதி என்று முடித்த;
மேல் வர ~   சட்டமறிந்த மேல்முறையீட்டின் வழியாக வர;
மிக்க மகிழ்வால் வரிந்து ஏற்பது ~  உள்ளம் மிக மகிழ்ந்து முன்னின்று ஒத்துக்கொள்வது;
இஃதொன்றும் தீதில்லை  :   இத்தகைய குற்றவாளிகட்கு மரணதண்டனை தருவதில் குறையொன்றும் இல்லை;
கேட்பாரும் ~ இதைக் கேட்டறிந்தவர்களும்;
கீழ்மை  குற்றமிழைக்கும் தன்மை நீங்கப்பெறும்படியாக.


இந்தி மொழியைத் திணிக்கவில்லை ( அமைச்சர்)


இந்தி மொழியைத் திணிக்கவில்லை, அதன் பயன்படுத்தலை ஊக்குவிக்கின்றோம் என்கிறார் மத்திய உள்துறை சார்பு அமைச்சர்
கிரண் ரிஜிஜு. ஆகவே கட்டாயம் ஒன்றுமில்லை என்று சொல்கிறார்.


Government not imposing Hindi but promoting it: Kiren Rijiju

இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.


நிருபயா உச்சநீதி மன்ற வழக்கில்
அருமையாய்த் தீர்ப்பு வழங்கினர் நன்றுநன்று.
கற்பழித்துக் கொன்ற இரண்டிரு பேருக்கும்
பிற்பகலில் தூக்கென்றார் பேதமில்லாச் சாதனையே!
கொள்ளை கொலைகற் பழிப்பினைப் போன்றவை
எள்ளளவும் ஏற்றுக் கொளவியலாக் குற்றங்கள்.
குற்றமொன்றும் செய்யாது கூனின்றிப் பேருந்தில்
பற்றியேறிச் செல்பயணி பால்பாய்ந்த பாழ்ங்கையர்
உள்குடலைப் பேர்த்தனர் ஓரிரக்கம் இல்லாமல்
பல்கடல் சூழ்நாட்டி லும்பதைக்கப் பாவிகள்!
குற்றமே கொய்த முறைமன்று முற்றும்நம் 

கைதட்டைப் பெற்றதே காண்.  

There is an inherent alignment error.
Will edit  and try later.




இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

வெள்ளி, 5 மே, 2017

வாழ்க்கைத் துணை மனைவி

வாழ்க்கைத் துணை என்பது மனைவிக்கு மற்றொரு பெயர். மனைவியே பிள்ளைகளை ஈன்று தாயாகி உலகை நிலைபெறச் செய்கிறவள் என்பது யாவருமறிந்ததே. ஆதலின் அது விளக்கம் ஏதுமின்றியே யாருக்கும் புலப்படுவதாம்.

வீட்டினை ஆட்சி புரிகின்றவள் என்ற பொருளில் மனைவி என்ற சொல் புனையப்பட்டது. அந்த ஆட்சி வீட்டுக்கு வெளியில் இல்லை யென்று வழக்காடுபவர்களும் இருக்கிறார்கள். வீட்டுக்கு வெளியில் உள்ள நிகழ்வுகளுக்கு நிற்பவன் கணவன் என்பர் இவர்.

வீட்டில் தண்ணீர் இல்லையென்றால் அதை வெளியில் சென்று
வீட்டுக்குக் கொண்டு தருபவள் பெரும்பாலும் மனைவியே. உதவாமல் ஓடிவிடுகின்ற கணவரும் உண்டல்லவா?


(உளரல்லரோ என்று எழுதவேண்டும், இப்படி எழுதினால் பலர்
கடினமென்கிறார்கள் அது நிற்க )

வீட்டிற்குரியாள் மனைவி என்பதைக் கூறுவோர், "மனை" என்ற‌
வீடு குறிக்கும் சொல்லிலிருந்து மனைவி என்ற சொல் வந்தது என்று
முடிவுக்கு வருவதால், அவர்கள் வீடு ~ மனைவி என்ற வட்டத்தினுள் சிந்திக்கிறார்கள். அது சரி அல்லது தவறு என்று சொல்லவில்லை. அப்படிச் சிந்திக்கிறார்கள் என்கிறோம்.

இப்போது வேறோரு வகையில் சிந்திப்போம். மன் : மன்னுதல் எனின் நிலைபெறுதல் என்று பொருள். மன் = நிலைபெறல்; = தலைவி அல்லது தலைமைப் பண்பு என்று பொருள்கொண்டால் மனைவி
என்பதன் பொருள் தெளிவாகிவிடுகிறது. வீட்டுக்குள் அடங்கிக் கிடப்பவள் அல்லள் மனைவி; நிலைபெற்ற வாழ்வினை உடையவள் என்று பொருள் வருகிறது.


மன்+ ஐ என்பதனுடன் வி சேர்ந்துகொள்கிறது. வி என்பதோர்
விகுதி (மிகுதி> விகுதி). துணைவி என்பதில்போல் இங்கும்
இவ்விகுதி சேர்கிறது. அது பொருத்தமே ஆகும்.
மன்+அம் = மனம் என்பதில் 0னகரம் இரட்டிக்க வில்லை; அதுபோல் மனைவி என்பதிலும் இரட்டிக்கவில்லை என்று முடிக்கலாம்.

இனிப் பாரியை என்ற சொல்லை ஆய்வு செய்வோம்



வியாழன், 4 மே, 2017

"திட்டம் தீட்டுதல்"

தீட்டுதல் என்ற சொல் வழக்கில் உள்ளதுதான். திட்டம் தீட்டினார்கள்
என்பதை நூல்களிலும் தாளிகைகளிலும் காணலாம். நாம் இங்கு
உரையாட விழைவது திட்டம் என்ற சொல் பற்றியது. "திட்டம் தீட்டுதல்
"என்ற  வழக்கிலிருந்தே திட்டம் என்ற சொல்லுக்கும் தீட்டுதல் என்ற‌
சொல்லுக்கும் உள்ள தொடர்பினை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

சவம் என்ற சொல் நான் அடிக்கடி காட்டுகிற உதாரணம்1 தான். சா + வு + அம் = சவம். இங்கு சா என்ற நெடில் சகரமாகக் குறைந்தது.
இந்த மாதிரி பல சொற்களை நான் முன் இடுகைகளில் எடுத்துக்காட்டியுள்ளேன்.

இதேபோல், நெடில் குறுகி அமைந்த சொல்தான் திட்டம் என்பது.
தீட்டு + அம் = திட்டம். சில தொழிற்பெயர்கள் வினைப்பகுதி குறுகி
விகுதி ஏற்கும். சில நீண்டு விகுதி ஏற்கும்:  எ‍~டு:  சுடு+அன் = சூடன்,  அல்லது அம் சேர்த்துச் சூடம்.  இவற்றை மனத்திலிருத்தி மகிழவும்.




‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍========================================
 ( உது= முன்னிற்பது; ஆர் = நிறைவு.  ஆர்தல்: வினைச்சொல்: நிறைதல் . அணம் : ஒரு வினையாக்க விகுதி.)

ஆகமமும் வேதமும் ~ ஒரு சொல்லியல் ஒப்பீடு.

ஆகமமும் வேதமும் ~ ஒரு சொல்லியல் ஒப்பீடு.

ஆகமம் என்றால் என்ன?  வேதம் என்றால் என்ன? இவற்றுக்கு
சமய நூலார் பல வேறுபாடுகளை எடுத்துரைப்பர். சொல்லியல்
முறையில், சமயக் கோணத்தில் நில்லாமல் இங்கு ஒப்பீடு செய்வோம்.
இது சொல்லாக்கத்தையும் அதன்கண் பிறந்த பொருண்மையையும்
உணர்ந்துகொள்ள உதவும்.

ஆகமம் என்பது தமிழ்ச்சொல். தென்னாட்டில் உள்ள   கோயில்களில்
ஆகமப்படி பூசைகள் நடைபெறுகின்றன. ஆகமத்துக்குத் தலைவன்
தென்னாடுடைய சிவனே ஆம்.

ஆகு+ அம் +அம் = ஆகமம்.

ஆகு : ஆகுதல் என்ற வினைச்சொல்.
அம்  :  அழகு.  அம்மையாகிய உலக நாயகி. அமைத்தல் என்பதன்
அடிச்சொல்.
அம் :  விகுதி.

ஆகும் நெறியில் அமைக்கப் பட்ட கடைப்பிடிகள். ஏற்பாடுகள்>

பற்றுடையாரால் வேயப்பட்டது வேதம். இங்ஙனம் வேய்ந்த பல‌
பாடல்களின் திரட்டு.

இவற்றுக்கு வேறு புனைபொருள் கூறுவோரும் உளர்.

புதன், 3 மே, 2017

கடமை தவறாத சனிக்கிரகம்

கடமை தவறாதவர்களைப் பாராட்டி அவர்களின் நல்ல செயல்பாடுகளை ப் பயன்படுத்திக்கொள்ளுதல் மனித இனத்துக்குத் தேவையானது என்பதை சொல்லவேண்டுவதில்லை. இப்படிக் கடமை தவறாதோரின்
பட்டியலில் சனிக்கிரகம் முன் நிற்கின்றது. கிரகம் என்ற சொல்லை  முன் இவண் விளக்கியுள்ளோம்.

படைத்த சிவனாரையே பற்றிக்கொண்டு தன் கடமையை ஆற்றியதால்,  சனிக்கு ஈஸ்வரப் பட்டம் என்பார்கள். ஈஸ்வரன் என்ற சொல்லுக்கு விளக்கமும்  இங்குக் காணலாம்.

அவற்றுக்கான தனி இடுகைகளைக் காண்க.

சனி என்பவனே ஒரு தனித்தன்மை வாய்ந்தவன்.   ஆதலின்
தனி என்ற சொல்லினின்று சனி என்ற கோட்பெயர் அமைக்கப்பெற்றது.  தகரத்துக்குச் சகரம்  ஈடாகுமிடங்கள்
தமிழில் உண்டு. தங்கு > சங்கு என்பது காண்க.  தன் என்பதன்
பன்மையாகிய தம் என்பதும் தம்முடன் பிறரும் கூடியிருத்தலைக்  குறிப்பது  மறத்தலாகாது. வேறு சில மொழிகளில் த என்பது ச என்று ஒலிக்கப்பெறுதலும் உண்டு. ஒத்மான் என்பது ஒஸ்மான்  எனப்படுதல் காண்க. உலக மொழிகளை ஆராய்ந்தால் இவ்வுண்மை புலப்படும்.  யாப்பில் த என்னும் எழுத்துக்குச் ச மோனையாகிவருதலும் உண்டு.

சனி மெதுவாக நகரும் கிரகம் என்பர்.  அதனால்  அவனுக்கு
"மந்தன்"  என்ற பெயரும் சொல்வர்.   மந்தமாவது, விரைவுக்
குறைவு. சனி பிடித்துள்ளதாகக் கூறப்படும் காலங்களில் விரைவாக எதையும் நீங்கள் செய்து முடிக்க இயலாது என்பர்.  ஓர்  இராசி வீட்டைக் கடக்க இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்வான் சனி. இதைச் சோதனை செய்ய, சனி பிடித்த காலக்கட்டத்தைத் தேர்ந்தெடுத்து உங்களுடைய முக்கிய வேலையை மேற்கொள்ளுங்கள். தடை, தாமதம் இருக்கின்றனவா என்று  அறிந்து மகிழலாம்.

குப்பைத் தொட்டி. குப்பை போடுதல் தொடர்பாக ஏதேனும் தகராறுகள்,  அழைப்பாணை வந்தால், சனி எந்த இராசியில் இருந்து என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று ஆய்வு செய்வது நலம்.


பாவம் என்ற சொல், தமிழ்ச்சொல்லே......

பாவம் என்ற சொல், தமிழ்ச்சொல்லே ஆகும். தமிழர்களும் பாவபுண்ணியம் பார்த்தவர்கள்தாம்.  எந்தக் காலக்கட்டத்திலும் எல்லோரும் நாத்திகர்கள் அல்லர்; சிலர் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்திருப்பது சாத்தியமே.

வினைச்சொல் பாவுதல் என்பதே. பாவுதல் என்பதன் பொருளாவன:

1 தாண்டுதல்
2 நடுதல்
3 பரப்புதல்
4 பரம்புதல்
5 பற்றுதல்
6 --
7 வேர் வைத்தல்
8 விரித்தல்
9 பரவுதல்
10 வியாபித்தல்
11 படர்தல்
12 விதைத்தல்
13 தளவரிசை இடுதல்.

விதைப்பதுபோலும் உள்ளிடப்பட்டுப் பாவம் பற்றிக்கொள்கிறது. ஒருவன் துணிந்து ஒரு பாவத்தைச் செய்தபின், தன் உணர்வுகளை
நிலை நிறுத்த முடியாதவன், பின்பற்றிப் பாவச்செயலில் ஈடுபட்டு
விடுகிறான். நல்லவை இப்படி இவ்வளவு  வேகமாகவும் தீவிரமாகவும்
பரவுவதில்ல. திருடுவதில் பொருள்வரவு இருக்கிறது. ஆகவே அது
வேகமாகப் பரவும். யாரும் பார்க்காமல் இருப்பதும் ஒரு காரணம்.
காவல்துறை அறியாததும் ஒரு காரணம். இன்னும் பல. பொருளை
இழந்தவன் மிரட்டினால் பணிந்துவிடுகிறான்....  ஆனால் பொருளை
அறத்திற்கு உதவு என்று  சொல்லிப்பாருங்கள்.  " கரவு உள்ள, உள்ளம் உருகும்" என்றார் ஆசிரியர் திருவள்ளுவனார். கொடுக்க‌ முன்வருவார் ஒருசிலர். எடுப்பாரே அதிகம்.



பாவம் விதைக்கப் படுகிறது ; பற்றுகிறது;  உள்பற்றி ( இதுதான் உத்பற்றி ) விரிகிறது. பாவிகள் மிகுதியாவர்; நல்லோர் குறைவர்.

பாவம் என்றவுடன், கடவுளைத் தொடர்பு படுத்தவேண்டாம். அவர்
கேட்டாலும் கேட்காவிட்டாலும், இருந்தாலும் இல்லாவிட்டாலும்
பாவம் பாவமே. நீதியரசர் இருந்தால்தான் குற்றம் என்பது தவறு.
குற்றம் முதலில் மெய்ப்பிக்கப்படும் நிறைவு நிலையை அடைகிறது.
பின்னர்தான் காவல்துறையும் நீதிபதியும் வருகின்றனர்.    நோய் இருந்தால் மருத்துவர் வரவேண்டும் என்பதில்லை; அவரிடம் போகுமுன்பே  இறந்தோர் பலர்.  பாவம் செய்தால் செய்து முடித்துச்
செய்தவன் உள்ளழிந்துபோகிறான்.  அவன்  ஆன்மா அழிவு நிலையை
எய்துகிறது. உங்கள் ஆன்மா அழிவுற, கடவுளுக்கு என்ன தொடர்பு?
தெயவ மேடைக்குச் செல்ல, தகுதி இழந்துவிடுகிறீர். எல்லாம் உங்களுக்கு நடக்கிறது; கடவுள் எப்போதும்போல் இருப்பவர். நீதியரசர்போல் பின்வந்து கேட்கிறார். பாவமானது உடலையும் ஆன்மாவையும் குமுகத்தையும் நாட்டையும் அழித்தபின்,  அடுத்தது என்பது அடுத்தது; நேரடித் தொடர்பு இல்லாதது.

இப்படி எழுதினால் சொல்லாராச்சியாக இருக்காது ஆகையால்
இனி,   பாவம் தமிழ் என்பதை விளக்குவோம்.

விதைக்கப்பட்டு, உள்பற்றி விரிவது பாவம்.

பாவுதல் தமிழ். அது பிற மொழிகளால் ஏற்கப்பட்டது தமிழின்
பெருமையாகும்.

முன்னரே உணர்வுகள் களத்தில் ஓர் இடுகையில் கூறியிருந்தேன்.
இது ஒருவகையில் மறுபதிவு ஆகும்.





திங்கள், 1 மே, 2017

துறவு மேற்கொள்ளாமலே ஆசை தீர்ந்துவிடும். ......

மகிழ்சியும்  துன்பமும் மாறிமாறி வருகின்றன.

எதில் மகிழ்ந்தோமோ,  அது கொண்டே துன்பமும் வந்துவிடுகின்றது.  துன்பம்
என்பது தனியே வருவதில்லை.

ஒரு சொந்தக்காரப் பையன் என்னுடன் மகிழுந்தில் பயணிக்க
வேண்டும் என்று மிக்க ஆசையுடன் என்னோடு வந்தவன்.

ஓரிடத்தில் மகிழுந்தை நிறுத்தியபோது கொஞ்ச தொலைவில்
ஒருவன் எதோ ஒரு தின்பண்டத்தை விற்றுக்கொண்டிருந்தான்.

என்னுடன் வந்த பையனுக்கு அதை வாங்கித் தின்னவேண்டும்
என்ற தாங்க முடியாத ஆசை. ஆசையை எப்படி அடக்குவது?

இதற்காக புத்தர்மாதிரி துறவு மேற்கொள்ள வேண்டுமா என்ன
அக்காள் வாங்கிக்கொடுப்பாள் என்று பையன் எதிர்பார்க்கிறான்.

உடனே அவனிடம் ஒரு பத்துவெள்ளியைக் கொடுத்து, அதை
வாங்கிச் சாப்பிடு என்று சொன்னேன். துறவு மேற்கொள்ளாமலே ஆசை தீர்ந்துவிடும்.

அவனைப் பார்க்கவேண்டுமே!  வண்டியிலிருந்து இறங்கி, காசைக் கையில் பிடித்துக்கொண்டு  தாவிக்கொண்டும் குதித்துக்கொண்டும் அங்கே ஓடினான்.

அதைப் பார்த்த மன நிறைவுடன் நான் வேறு சிந்தனையில்
ஆழ்ந்துவிட்டேன்.

சிறிது நேரத்தில் பையன் அழுதுகொண்டு வந்தான். "என்ன. என்ன, யாரும் அடித்துவிட்டார்களா......."

"பத்துவெள்ளியைக் காணோம்"  என்று அழுதான்.

"சீ!  அழாதே...... அக்காள் இருக்கிறேன். " என்றபடி என் பையை
எடுத்து, இன்னொரு பத்துவெள்ளியைக் கையில் கொடுத்து, "ஆடக் கூடாது, குதிக்கக் கூடாது, கவனத்துடன் நடந்து போ. சாலையில் பல உந்துவண்டிகளும் மனிதர்களும் போகிறார்கள்.
யாருக்கும் இடைஞ்சல் உண்டாகாமல்  போய் வாங்கிச் சாப்பிடு. விழுந்துபோன காசு போகட்டும். இந்தக் காசு காணாமற் போய்விடாமல் பார்த்துக்கொள்..."  என்று சொல்லி அனுப்பினேன்.

ஒழுங்காகப் போய் வாங்கிக்கொண்டு வந்து, என் எதிரிலேயே
சாப்பிட்டு முடித்தான்.  "கவலைப் படாதே.....எதையும் சாதிப்பதுதான் முதன்மையானது என்று  திடமுறுத்தினேன்.

மகிழ்வும் துன்பமும் ஒரு பத்துவெள்ளிக்குள்ளேயே சுற்றிவருகிறது.  அதுதான் நாம் வாழும் மனித வாழ்க்கை. தனியாக ஏதும் துன்பம் தோன்றுவதில்லை. எல்லாம் உன்னிலிருந்தே உள்பற்றி வருகிறது.  (உள்பற்றி > உற்பத்தி ).

அரசியல் மேதை திரு லீ குவான் அவர்கள் கூறிய ஒரு
சீனக் கதை நினைவில் வந்து மோதுகின்றது. ஒரு சீனச் சிற்றூரான்  தன் மகனுக்குக் குதிரை வாங்கிக் கொடுத்த கதை. ஒரு குதிரையை வைத்தே இன்பமுன் துன்பமும் மாறிமாறிச் சுழல்கின்றன என்பதை அவர் பட்டியலிட்டுக் காட்டினார். அதை இன்னொரு நாள் அறிந்து இன்புற்றிடுவோம்.

will edit.
This story is from my diary in November 2014.  At that time I also analysed the word munthAnAL.
We shall discuss in another post. Pl stay tuned.






ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

மேதினத்தை நெஞ்சினுள்ளில் மேனிலையில் வைக்க!

மேதினத்தை  நெஞ்சினுள்ளில் மேனிலையில் வைக்க!
மென்மையோடி யைபிலாத மிகையுழைப்பு மேவி,
சோதனையில் சோர்ந்திழிந்த காலந்தன்னை மாற்றிச்
சூழுநன்மை  தொழிலாளர் ஆழ்ந்தடைந்த  நாளே
யாதுநீவிர் செய்தபோதும் யாண்டும்யாண்டும் நன்றி
என்றுசொல்வீர் ஏதெனினும்  அவர்க்குநன்மை செய்வீர்.
போதுமென்ற  பொன்மனத்தைp பூதலத்தார் கற்கப்
போகவேண்டும் அவர்களாலே புசித்துவாழ்கி றோமே.



பனம்பாரனார்

இவர் தம் இயற்பெயர் அறிகிலேம்

இந்தப் பெயரே மிக்க அழகான பெயர்.  அதாவது பனை மரங்கள் மிகுந்த பரந்த நிலப்பகுதியினின்றும் போந்தவர் என்று பொருள்படுகின்றது. காரணப்பெயர்,
இவர் தொல்காப்பிய நூலுக்கு ஒரு பாயிரம் தந்துள்ளார்.  பாயிரம் எனின் முன்னுரைபோல் தரப்படும் ஒரு பாடல். தொல்காப்பியத்துக்கு நாம் போய் அப்படி ஒரு பாடலை எழுதமுடியாது, தொல்காப்பியரை அறிந்த இன்னொரு புலவர் ,  அவருடன் படித்த இன்னொரு புலவர்தான் அதைச் செய்யக்கூடும். யார்யார் பாயிரம் தரலாம் என்பதற்கு இலக்கணம் இருக்கின்றது,

பர > பரத்தல்.  விரிவாதல்.
பரம் : கடவுள்,  எங்கும் பரந்திருப்பவன்,
பரம்பொருள் :  கடவுள்>
பரம்>  பரன்.

சிற >  சீர் என்று முதனிலை நீண்டு பெயராகும்.  ரகர றகர வேறுபாடு
இங்கு தள்ளுபடி,

பனை பழம் : பனம்பழம் போல பனை பார் =  பனம்பார் ஆனது,
அன் விகுதி சேர்ப்பின் பனம்பாரன்1   ஆகும்,

1. Error rectified.   Reason for error unknown.  Original draft did not have this error.


சனி, 29 ஏப்ரல், 2017

கரப்பான்பூச்சி

கரப்பான்பூச்சிகளையும் கடவுள்தான் படைத்தார்.  ஆனால் ஏன் படைத்தார் என்று புரியவில்லை. வீடுகட்குள்  வந்தேறி பலவிதப் பொருள்கேடுகளையும் விளவிக்கின்றன. இவற்றை அவர் படைக்காமல்
இருந்திருந்தாலும் ஒன்றும் மோசமில்லை என்கிறார்கள்.

இரு பெண்கள், அவர்களில் ஒருவர் ஒரு பிள்ளையைத் தூக்கிக்கொண்டு
மருத்துவரின் கடைக்குச் சென்றுகொண்டிருந்தனர். பிள்ளை அழுது கத்திக்கொண்டிருந்ததால், அதை எப்படி அமைதியாக்குவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. சட்டென்று ஓர்  ஓரப் பொந்திலிருந்து
ஒரு கரப்பான்பூச்சி அங்கு வந்துவிட்டது. அந்தப் பெண்களில் ஒருவர், உடனே: " பார், கரப்பான் பூச்சி வந்துவிட்டது, நீ இன்னும் கத்தினால்
வந்து கடிக்கும்" என்றார். உடனே பிள்ளை அடங்கிவிட்டது. இதைக்
கவனித்துக்கொண்டிருந்த யான், " கடவுள் ஏன் கரப்பான் பூச்சியைப்
படைத்தார்  என்று இப்போது புரிந்துவிட்டது"  என்று அருகிலிருந்த‌
தோழியிடம் சொன்னேன். இதுதான் காரணமாக இருந்தாலும் இருக்கலாம்.

நிற்க, கரத்தல் என்றால் ஒளித்தல். கரப்பு என்பது ஒளிந்திருத்தல்
என்று பொருள்தரும். இந்தப் பூச்சிகள் பெரும்பாலும் ஒளிந்துகொண்டு
இருளில் வாழ்பவை. இரையை, நீங்கள் உறங்கச்சென்றபின் வெளிவந்து அலைந்து  தேடும். ஆனுதல் என்பது நீங்குதல்
என்று பொருள்தரும். கரப்பு = ஒளிந்திருந்து, ஆன் = நீங்கிவரும், பூச்சி =~  என்பது பொருத்தமாக உள்ளது.

கரப்பான் என்று ஒரு தோல்நோய் வகையும் உள்ளது; ஆனால் இப்பூச்சிக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.

வேண்டாதவற்றைத் தின்று அப்புறப்படுத்த இவற்றைப் படைத்தான்போலும்.  ஆனால் வேண்டியவற்றையும் இவை கெடுத்துவிடுகின்றன.



வெள்ளி, 28 ஏப்ரல், 2017

உரொட்டிக் கடைகள்


பழங்காலத்தில் (அதாவது இரண்டாம் உலகப் போரின் முந்திய காலத்தில் ) உரொட்டிக் கடைகள் வைத்திருந்தவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தானியர்கள் என்று தெரிகிறது. சிங்கப்பூரில் அவர்கள் நடத்திய‌  சுடுமனைகள்(bakeries)பலவிடங்களில் முன்னிருந்திருப்பினும் இப்போது அவை மூடப்ப்பட்டு அவ்விடங்கள் வேறு கடைகளாகவோ அடுக்குமாடி வீடுகளாகவோ மாறிவிட்டன. அவர்களில் பலர், பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டனர் அல்லது அவர்களின் பின்னோர் வேறு தொழிலர்கள்
ஆகிவிட்டனர்.

ஜொகூர்பாருவில் ஜாலான் டோபி என்னும் வீதியில் இன்னும் ஒரு கடை இருக்கிறது. இங்கு இன்னும் பழைய காலப் பாணியில் உரொட்டிகள் மற்றும் கறியுப்பிகள் (CURRYPUFFS) சுட்டு விற்கிறார்கள். யாம் சைவ‌ உணவினியாதலின், வெறும் உரொட்டியை இங்கிருந்து வாங்கியதுண்டு.

உரொட்டி சுடும் தொழில் இப்போது பெரிய குழும்பினர்களில் companies கைகளில் சென்றுவிட்டபடியால் பாக்கிஸ்தானியர் கடைகள் ஒருசில‌ மலேசியாவின் நகரங்களில் ஆங்காங்கு இருக்கலாம். இவர்கள் விட்டுப்போன இத்தொழிலைச் சில சீனர்கள் தொடர்ந்து வருகின்றனர். 

உரட்டி என்பது ஒருவகை அப்பமாகும். இதிலிருந்து திரிந்து ரொட்டி என்ற சொல் அமைந்தது என்பதை 2009க்குப் பின் வெளியிட்டு விளக்கமும் கொடுத்திருந்தோம்.1


ஓர் உருவாக அட்டு எடுத்தலால் அது உரு+ அடு + இ = உரட்டி ஆனது. 2 அடு என்பது இகரத்தின்முன் இரட்டித்தது. அட்டாலும் என்றால் சுட்டாலும் என்று
பொருள். அட்டு = சுட்டு (எச்சவினை). ஓர் உருவாகப் பிசைந்துகொண்டு சுடுதட்டில் ஒட்டி வேகவைத்து எடுப்பதாலும் உரு+ஒட்டி = உரொட்டி என்றாகி, தலையிழந்து ரொட்டி என்று வழங்கிற்று. இது பின் பிறமொழிகளிலும் பரவியது தமிழின் திறத்தை நமக்குக் காட்டுவதாகும். சொற்களை அமைக்க ஏற்ற எளிதான மொழி தமிழே ஆகும்.


சொல்லமைக்க வகர யகர உடம்படுமெய்கள் தேவையில்லை யாயின.


சொல்லமைந்த விதம் இங்ஙனமாக, பிரட் என்ற ஆங்கிலச்சொல், புரு (வடித்தெடுத்தல்) என்பதிலிருந்து வந்ததாக ஆய்வாளர் கருதுகின்றனர்.
ஐரோப்பிய மொழிகள் பலவினும், பர, ப்ரு என்றுதான் உரொட்டியின் பெயர்
தொடங்குகிறது.


புரத்தல் என்ற தமிழ்ச்சொல்லும் புர என்றபடியே தொடங்குகிறது. புரட்டுதல்
என்ற சொல்லும் புர என்றே தொடங்குகிறது. அவ்வராய்ச்சியாளர் இவற்றை
அறியாமையால், இவற்றைக் கருத்தில் கொண்டிலர். பலவகை அப்பங்களையும் புரட்டிப்போட்டுத்தான் சுடவேண்டியுள்ளது. இதிலிருந்தும் புரு என்ற மூலச்சொல் முளைத்திருக்கலாம் என்பதை அவர்கள் ஆராயவில்லை.

புரட்டா என்ற சொல்லும் இங்ஙனம் அமைந்ததே. பரோடா என்ற பாக்கிஸ்தான்
நகரத்தில், புரட்டா என்ற ரொட்டி இருந்ததில்லை என்று அறிந்த பஞ்சாபியர்
கூறுவதனால் அது அங்கிருந்து வரவில்லை. புரட்டா என்பது பஞ்சாபியர்
உணவன்று என்று அவர்கள் கூறுவர். பரோடாவிலிருந்து வந்ததனால் அது
பரோடா என்று பெயர்பெற்றதெனில், அது இங்கு வருமுன் அதற்கு அங்கு
என்னபெயர்? இவ்வகை ரொட்டிகளை ஆக்கியவர்கள் நம் தென்னிந்திய‌ முஸ்லீம்களே. அதை அவர்கள் ஆக்கியவிடம் சிங்கப்பூர் மலேசியா ஆகும். இங்கிருந்து அது இந்தியாவிற்குப் பரவிற்று. ஆனால் சிங்கப்பூர் ஜுபிளி உணவகம் உண்டாக்கிய மரியம் ரொட்டி பரவாது போய்விட்டது. இறைச்சி பெரட்டல் (புரட்டல்), கோழி பெரட்டல் என்றெல்லாம் சிலர் உண்பதனால், புரட்டுதல் உணவுவகையுடன் தொடர்புடைய சொல்லே ஆகும்.

------------------------------

அடிக்குறிப்புகள் :

1.   அவை அழிவுண்டன. இரண்டு உலாவிப் பொருத்திகளில் மென்பொருள் நிபுணர்களைக் கொண்டு மாற்றங்கள் செய்து எங்கள் உலாவியுடன் இணைத்து, அவை ஒவ்வொரு முறையும் யாம் உலாவியைப் பயன்படுத்தும்போது பல இடுகைகளையும் அழித்துவிட்டன. இவைகள் எதிரிகளால் செய்யப்பட்ட தாக்குதல்கள். கணினிக்குள் இருந்தவையும் பல‌
அழிந்தன.

2.   மாவை உருட்டிச் சுட்டுச்  செய்யப்படுவதால்   உருட்டி > உரட்டி >  ரொட்டி
என்பது இன்னொரு விளக்கம் .

3    புரத்தல் -  பாதுகாத்தல்.  உடலைப் பாதுகாத்தல் . புரதச் சத்து  என்பதில்
புரத்தல்  என்னும் சொல்  காண்க . 

will review and reedit

வியாழன், 27 ஏப்ரல், 2017

இழந்தவை இருப்பவை ........

பண்டைத் தமிழர் சிறப்புகள் பலவுடையராக வாழ்ந்தனர். எனினும் எல்லாச் சிறப்புகளும் அவர்களிடம் தங்கிவிடவில்லை. இன்று அவர்களிடம் உள்ள சிறப்புகளில் கருதத்தக்கது யாது எனின், மொழி ஒன்றே என்று கூறின், அதுவே உண்மையாகும். பிற சிறப்புகள்
பலவும் கழிந்தன.


நம் சிறப்புகளிற் சிலவற்றைப் பிறர் பெற்றுக்கொண்டு அதைப் போற்றிவைத்திருந்தனராயின், நாம் அவற்றை இழந்துவிடினும் அவர்களிடமிருந்து அவற்றைத் தெரிந்துகொள்ளலும் வேண்டியவிடத்து மீண்டும் கொணர்தலும் கூடும். முற்றும் அழிந்தவற்றை எவ்வாற்றானும் மீளப்பெறுதல் இல்லை. புட்பக வானூர்தி இவற்றுள் ஒன்றாக இருக்கலாம்; எனினும் இப்போது அவற்றினும் நல்ல வானூர்திகள் கிட்டுவதால், அவற்றை மறந்துவிட வேண்டியதுதான். பண்டைப் போர்க்கருவிகள் இன்று பயனற்றவையாய்விட்டன.

காட்டில் வேட்டையாடச் செல்பவன் சுடுகருவிகள் இல்லையேல் சில ஆயுதங்களையாதல் எடுத்துச்செல்லவேண்டும். ஈட்டி முதலியவை   இன்று போர்க்கருவியாகப் பெரிதும் பயன்பாடு அற்றவையாய்விடினும்  வேட்டைக்காரனுக்குப் பயன் உடையதாய் இருக்கக்கூடும்.

ஈட்டி என்ற சொல் வடிவே பெரிதும் இன்று பலரும் அறிந்தது. இதன் அடிச்சொல் இடு என்பது. பண்டைக்காலத்தில் ஈட்டியை இடுதல் என்பது வழக்காய் இருந்தது தெரிகிறது. இடு > இட்டி என்று சொல் அமைந்தது. இது பின்னர் ஈட்டி என்று முதனிலை நீண்டது.

ஈட்டி ஓர் ஆயுதம். ஆய்வதற்குப் பயன்படுவது ஆயுதம். ஆய்தலாவது சொற்களைப் பகுத்தும் தொகுத்தும் சேர்த்தும் கோத்தும் செய்வதுபோன்று பிறபொருட்களுக்கும் செய்தல். இது ஆய்+ உது + அம் என்றவை சேர்ந்து ஆனது. அது, இது மற்றும் உது என்பன சேர்ந்து பல சொற்கள் அமைந்துள்ளன. உது எனின் முன் நிற்பது. இங்கு சொல்லாக்க‌ இடைநிலையாய் நின்றது.

ஆய்தம் என்பது ஓர் எழுத்தின் பெயர். இதுவும் ஆய் அதாவது ஆய்தல்
என்ற சொல்லடிப்படையில் எழுந்ததே ஆகும். ஆயின் ஆய்+ த் + அம் என்ற முறையில் அமைந்தது. த் எனினும் து எனினும் விளைவு
வேறுபடாது. ஒரே அடியிற் தோன்றினும் இச்சொற்கள் வேறுவேறு ஆகும்.

இழந்தவை   இருப்பவை

விவசாயம்

விவசாயி

இச்சொல்லை முன் விளக்கியிருந்தோம், அந்த இடுகை காணப்படவில்லை. ஆகவே மறுபதிவு செய்கிறோம்.

விவசாயமே சிறப்பான தொழில். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்.

விவசாயம்: வி=  விழுமிய;  வ:  வாழ்வினை; சா: சார்ந்திருப்போர். அம் என்பது விகுதி. இதில் வ என்பது வா: வாழ்வு என்பதன் குறுக்கம். வாழ்த்துதல் என்ற சொல் வழுத்துதல் என்றும் குறுகும். விவ என்ற‌
இலத்தீன் சொல், விவா; விவோ, விவோஸ் என்றும் திரிதலை உடையது ஆகும்.

விழுமிய வாழ்வினைச் சார்ந்திருப்போர் விவசாயிகள் ஆவர்

சிறந்த தலைவர் மோடி......

சிறந்ததொரு தலைவரிந்தி யாவிற் கென்றால்
செவ்வியநன் மகன்மோடி இவ்வா றுண்மை,
உரந்தருமா றுரைப்பார்கள் உலகிற் பல்லோர்!
ஒட்டலுறு உரைஇஃதே  வெட்டல் இல்லை!
வரந்தருவார் கடவுளென்றார் தந்தார் காணீர்.
வந்தபெரு விளக்கினையே காத்துக் கொள்வீர்.
நிரந்தரமே மக்களாட்சி;  நேர்மை போற்றி
நில்புகழைப் பாடுமணி மோடி தாமே.

பழையமொழி பண்பட்ட தமிழே என்றார்
பாலியத்தில் படிக்கவிலை; அறிந்தேன் இன்றே!
இழைநாக ரிகந்தனிலே ஒளிரக் கண்டேன்;
எல்லோரும் அறிவதிலே நலமே உண்டே.
விழைவுறவே பிறமொழிகள் அறிக நீங்கள்.
வேறுபண்பா டென்றாலும் விரும்பிக் காண்பீர்.
குழைபடராத் தெளிநீர்போல் மோடி கூற,
கோதிலதாய்க் காதுக்குள் ஒலித்த கீதம். 

 


டில்லி நகராண்மைத் தேர்தல்களிலும் மோடி பெரும்பான்மை பெற்றுள்ளார்.

புதன், 26 ஏப்ரல், 2017

சமாதி - சொல்லின் அமைப்பு

யாராவது ஒரு பெரிய ஆன்மிகத் தலைவர் மறைந்து விட்டால்,அவர் சமாதி
அடைந்தார் என்பர். சமாதி என்ற சொல்லின் அமைப்புப் பொருளை இப்போது
கண்டு இன்புறுவோம்.

சமாதி என்ற சொல்லின் இறுதியில் இருக்கும் சொல், ஆதி என்பது. இது
தமிழே ஆகும். ஆதல் என்ற வினையினின்று எழுந்தது. ஆதல் என்பது
ஆக்கம். உண்டாதல். எதற்கும் உண்டாதல் என்பதே தொடக்கம் ஆகும்.
ஆதி என்பது தொடக்கம் என்னும் பொருளது.  ஆவது ஆதி ஆதலால், அது
சொல்லினடிப்படையிலும் பொருளினடிப்படையிலும் தமிழாகிறது.

இச்சொல், பிற மொழிகளிலும் வழக்கிலிருப்பின், இது அச்சொல்லின் திறத்தை
நமக்குக் காட்டுகிறது. பிற நாட்டின் செய்பொருள், நம் நாட்டில் பயன்படுமாயின், அது அப்பிற நாட்டின் தொழில்திறன் காட்டுதல் போன்றதே
இதுவாம்.


இச்சொல், பிற மொழிகளிலும் வழக்கிலிருப்பின், இது அச்சொல்லின் திறத்தை
நமக்குக் காட்டுகிறது. பிற நாட்டின் செய்பொருள், நம் நாட்டில் பயன்படுமாயின், அது அப்பிற நாட்டின் தொழில்திறன் காட்டுதல் போன்றதே
இதுவாம். நம் சொல் பிறமொழியரால் பயன்படுத்தப்படுவது சொற்பொருள் திறம் உணர்த்துவது ஆகும்.


இனி, "சம" என்பதன் அமைப்பு அறிவோம்.  அமை > சமை. இது அம்+ஐ
என்று அமைந்தது.  அம் என்பதே அடி.        அம> சம > சமன்; சமம் என்றாகும். சமம், சமன் என்பன " நிகர் " என்ற பொருளது. 
(அம் என்பதிலிருந்து தொடங்கின்,  அம்> சம்> சம்+அம்> சமம் என்பதையே
சுருங்கக் காட்டினோம்.)

இனிச் சமாதி என்பது.  ஒருவன் பிறப்புக்கு முந்திய நிலையில் உடலின்றி
ஆன்மாகவே மட்டுமே இருந்தான். இவ்வுலகில் வாழ்ந்து அவன் ஆன்மா
நீங்கிய காலை, உடல் கைவிடப்பட்டு மீண்டும் ஆன்மா ஆகிவிடுகிறான்.
சமாதி என்பது முன்னிருந்த நிலைக்குச் சமமான நிலை ஆகும். உடலற்ற‌
நிலை அது.அதுவே "சமாதி".

இனி மத நூல்களும் பிறவும் கூறும் பொருள் வேறு. அவற்றை ஆங்குக்
கண்டு தெளிக.

 யோகக் கலையில், உயிருடன் இருக்கும்போதே, ஆன்மாவை உடலைவிட்டுப் பிரித்து மேல் எழுப்புதல் முதலியவை பற்றியும் அது பற்றி
அறிந்தார்வாய்க் கேட்டுணர்க.  அதுவும் உடலுடன் இல்லாத முன் நிலைக்குச்
செல்லுதல் என்று பொருள் தருதல் காண்க.






கெச்சிரிவால் ஆனவரைக் கேட்டார்கள் ஏன் தோற்றீர்?

கெச்சிரிவால் ஆனவரைக் கேட்டார்கள் ஏன் தோற்றீர்?
நச்சரிக்கப் பட்டத   னாலோதான் === மெச்சவென்று
சொன்னார்பார் எந்திரங்கள் சோடையென்று! இல்லையெனில்
வென்றார்யார் எம்மை   என!

கெச்சரிவால் -  தில்லி  முதல்வர் ;
எந்திரங்கள்  -  வாக்கு  எந்திரங்கள்.

இந்தப் பாடல், அண்மையில் நடந்த டில்லி நகரவைத் தேர்தல்கள்
பற்றியது. அதில் கெச்சிரிவால் (கெஜ்ஜிரிவால்) கட்சி தோற்றது.
இதற்குக் காரணம், வாக்கு இயந்திரங்களே; அவை சரியாகக்
கணிக்கவில்லை என்று சொல்லிவிட்டார் கெச்சிரிவால்! இவர்
சொல்வதை நிறுவ இவரிடம் ஆதாரங்கள் ஏதுமிருப்பதாகவும்
தெரியவில்லை.(தெரிவிக்கவில்லை).

Owvayaar statue in Governor Palace. பாட்டிஒளவை

பாட்டிஒளவை வாழ்ந்தகாலம் பாரில்நாமும் இல்லை,
பலநூற்று நல்லாண்டு பாய்ந்துகால ஆற்றில்
மீட்டலின்றி ஓடியபின் மெல்லநாமு தித்தோம்!
மீண்டுபாட்டி மேனிதோன்ற மேடைபோடு வோமா ?
மூட்டமிட்டார் சென்னையாளும் மூப்பில்காட்சி ஆள்நர்;
மூதறிவோர் போற்றுவித்ய சாகரென்னும் பேரோர்!
ஓட்டமுற்ற வண்டிபோலும் ஈட்டம்கூட்டி னார்கள்;
ஒப்பில்சிலை மனைமுகத்து நிற்பவழி நேர்ந்தே.


மூட்டம்  -  தொடக்கம்  (   மூட்டுதல் )
ஆள்நர்  -   ஆளுநர்  (   governor )
 (
ஈட்டம் = வலிமை;
கூட்டினார்கள் ‍=  சேர்த்தார்கள்;
நிற்ப = நிற்க.   to  install.
நேர்ந்தே = திட்டமிட்டே. (   having   undertaken.)



செவ்வாய், 25 ஏப்ரல், 2017

When "U" (oo) changes to "A"

உகரத்தில் தொடங்கிய பல சொற்கள், பின்னாளில் அகரத் தொடக்கமாகிவிட்டன. எது முந்தி? என்று முடிவு செய்வதற்கு, சொல்லின் தொடக்க நிலையை ஆய்வு செய்ய வேண்டும்.

அம்மா என்ற சொல், உம்மா என்றும் தமிழரல்லாத வேறு மொழியினரிடையே
வழங்குகிறது. "அம்" என்ற அடிச்சொல். சீன மொழியில் வயதில் மூத்த‌ பாட்டிபோன்ற மதிப்பிற்குரியரை உணர்த்துகிறது. தமிழ் சீனம் முதலிய மொழிகளில் சொல் "அம்" என்றே தொடங்குவதால், அம் என்பதே மூலச்சொல்
என்று முடிக்கலாம்.

தமிழில் "அம்மை" என்பதே இலக்கிய வடிவம் எனினும், விளிவடிவில் ( அழைக்கும் போது) அம்மா என்று ஆகாரம் பெற்று முடிகிறது. சீனமொழிச் சொல்லும் " அம்‍~" என்றே ஒலிக்கப்பெறுகிறது. அம்மாவைக் குறிக்க மலாய்
மொழியில் "ஈபு" என்ற ஒரு சொல்லும் உள்ளது. இது உரிய இடத்தில் "தலைமை" என்றும் பொருள்படும். பெண்கள் தலைமை தாங்கிய ஒரு காலத்தை இவ்வழக்கு நன்கு குறிக்கிறது.

உடங்கு என்பதிலும் அடங்கு என்பதிலும் உள்ள ஒற்றுமையையும் அறிந்துகொள்ளுங்கள்.

உடங்கு: கூடிநிற்றல்.
அடங்கு: இதுவும் ஒன்றில் இன்னொன்று கூடி உள்பதிவு ஆவதைக் குறிக்கக்கூடும். சொல் பயன்பா ட்டைப் பொறுத்து இப்பொருள் போதரும்.

அம்மை என்பது உம்மை என்றும் திரிந்து பொருள் மாறாமைபோல் இதுவும் கொள்ளப்படும் இடனும் உண்டு என்பதறிக.

உகல் என்பது கழலுதலைக் குறிக்கும். அகல் என்பது ஓரளவு பொருள் ஒற்றுமை உடையது. இரண்டும் அகலுதற் கருத்தினவாகும்.

உகளுதல் என்பது தாவுதல்; அகலுதல் என்பது நீங்குதற் பொதுக்கருத்து.

இவற்றை நன்கு ஆராய்ந்து, கருத்தொருமை வெளிப்படும் சொற்களையும் கருத்தணிமை வெளிப்படும் சொற்களையும் பட்டிய லிட்டுக்கொள்ளுங்கள்.


திங்கள், 24 ஏப்ரல், 2017

ஆஷ்டுக்குட்டி என்பதிலிருந்து (சமஸ்கிருதம்)

ஆட்டுக்குட்டி என்பதை ஆஷ்டுக்குட்டி என்று எழுதினால் தமிழ் இலக்கணியர்
ஏற்றுக்கொள்ளாத ஓர் ஒலியை நுழைப்பதாகப் பொருள்.  அதனால் ஆஷ்டுக்குட்டி என்பது அயற்சொல்லாகிவிடாது. ஒலியை மட்டுமே வைத்து
ஒன்றை அயலென்று கூறலாகாதென்பதற்கு இஃது  ஒரு  நல்ல எடுத்துக்காட்டாக‌ இருந்துவருகிறது. சட்டையை மட்டுமே வைத்து நம் வீட்டுப் பையனை அடுத்த‌ வீட்டான்  என்று கூறிவிடுதல் முடியாதன்றோ?

ஆடு என்பதன் அடிச்சொல் அடு என்பது.   அடு என்றால், ஒன்றாக உரசிக்கொண்டு அடுத்தடுத்துச் செல்லும் விலங்கினைக் குறிக்க, தமிழர்
மேற்கொண்ட சொல்லுக்குரிய அடிச்சொல் ஆகும். அடுத்தல் : அடு > ஆடு
என்று முதனிலை திரிந்த தொழிற்பெயரானது. தொழிலைக் குறிக்கும் இது
அத் தொழிற்குரிய விலங்கைக்குறித்தது ஆகுபெயர். இப்படிச் சொல்லாமல்
ஒரு தொழிலுக்கு இட்டபெயர், அத்  தொழிலைப் புரியும் விலங்குக்கும் பொருளுக்கும் பயன்படுத்தலாம், அது மொழியில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால்!!  என்று  முடிக்கலாம்.இது முன் சொன்னதையே  இன்னொரு விதமாய்ச் சொல்வதுதான்.

நாம் நினைப்பதுபோல் இல்லாமல்,  அடு என்ற அடிச்சொல்லையே கொண்டு
அஜ என்று பெயராக்கி, சமஸ்கிருதத்தில் பயன்படுத்தினர்.

அடு > அஜ (சமஸ்கிருதம்).  பொருள்:  ஆடு என்னும் விலங்கு.

ஆஷ்டுக்குட்டி என்பதிலிருந்து அதை மேற்கொள்ளாவிடினும், அடு   என்பதிலிருந்து   அஜ  என்று மேற்கொண்டமை, சிறப்பான செயல்பாடு ஆகும்


அடு >  அட > அஜ .
அடு > அட >  அடர் ..


ஆட்டுக்குட்டி என்பதிலிருந்து சொல்லைத் திரித்தால் அது திறனின்மையைக்
காட் டலாம்.. அடியை ஆராயவேண்டும். அடிச்சொல் அடு என்பது. அடு>அட>
அஜ. சொல்லாக்கும் பண்பறிந்த பெரும்புலவர்கள் இவர்கள்.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

தாசு என்பது தா (=கொடு) என்பதிலிருந்து..............

தாசன் என்ற சொல், மக்களுக்குப் பழக்கப்பட்ட சொல்தான். பல திரைக்கவிஞர்களும் இலக்கியகவிஞர்களும் இதனைத் தன் எழுத்துப்புனைப்பெயரின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக,  காளிதாசன், பாரதிதாசன், கண்ணதாசன், கம்பதாசன் எனப்பல காணலாம். ஜேசுதாசன் என்ற கிறித்துவப் பெயரும் உள்ளது.

என் சிற்றப்பனின் பெயர் தேவதாசன் என்பது. அன் விகுதியில் முடிந்த தேவதாசன் என்ற சொல், தேவதாசு (தேவதாஸ்) என்பதினும் சற்று
வேறுபட்டதுபோன்ற நினைப்பை ஏற்படுத்துகின்றது. இலட்சுமண தாஸ், ராமையாதாஸ் என்பனவும் உள்ளன.

தாசன் என்பதன் பெண்பால் தாசி எனலாம்; ஆனால் இது சொல் இலக்கணத்துக்குச் சரியாக இருக்கலாம். பொருள்வேறுபாடு
இச்சொற்களைத் தொலைவில் வைக்கின்றது.  தேவதாசி
என்பதோ  ஒரு குலத்தினரைக் குறிப்பதாகிறது.

கவிஞர்கள்" தாசன்" என்று குறித்துக்கொள்வது, இலக்கிய உலகில் பெரும்பான்மை, எடுத்துக்காட்டு: துளசிதாசர்.

தாசு என்ற சொல், நம் பழைய நூல்களிலும் உள்ளது. சுதாசு என்று  பெயரிலும் வரும். திரஸ்தாஸ்யு, திவோதாஸா முதலிய வேதங்களில்
உள்ளவை.

தாசு என்றால் அடியன் என்று பொருள்  என்பர்.  அடிமைகள் தாஸ்யு எனப்பட்டனர் என்பர்.  ஆனால் அசுரர்கள் என்றும் கூறப்பட்ட இவர்கள்
அரசர்களாக இருந்துள்ளபடியால், அடிமை, அடியர் என்பது முற்றும் பொருந்துவதாய்த் தோன்றாமை காண்க.

ஆரியர் என்பது வேறு. பிராமணர் என்பது வேறு. இப்போது பிராமணர் என்பது ஒரு  சாதிப்பெயர்.

ஆர்ய   என்பது ஓர் இனம் என்பது நிறுவப்படவில்லை. பிராமணர் என்பது
பூசுரத் தொழிலுடையார் பல்வேறு பிரிவினரைக் குறிக்கிறது. இவர்கள் பல பிரிவுகள்   தம்முள் உடைய தொழிலினர் ஆவர். பல்வேறு மொழி பேசுவோர்.

தாசு என்பது தமிழ்ச்சொல்லான தா (=கொடு) என்பதிலிருந்து வந்ததென்பதைச்
சில காலத்தின்முன் வெளியிட்டோம். உழைப்பையோ, பொருளையோ, பிறவற்றையோ கொடுப்போர் தாசு. தாசர் எனப்பட்டனர். ஆதரவு கொடுத்தோர்
எனவும் பொருள்கூறுதல் கூடும்.  ஆதரவு, ஆதாரம், ஆதாயம் என்கிற சொற்கள் ஆக்கொடைகளைத் தெளிவுபடுத்துபவை. இது ஆக்கொடையையும்
குறிக்கும். கொடை பலவகை.  தானம் என்ற சொல்லும்  (தா+ன் +அம்) என்பது தரப்படுதலைக் குறிக்கும்.  இதில் 0ன் என்பது  இன் என்பதன் தலைக்குறை ஆகும். தா+(இ)ன்+அம் ஆகும். தா என்பது பிறமொழிகளிலும் பரவியுள்ள
 தமிழ்ச்சொல்.


will edit.











சனி, 22 ஏப்ரல், 2017

கழுத்தூறி > கஸ்தூரி.

கஸ்தூரி என்பது ஒரு வகை நறுமணப்பொருள். இது ஒரு மானின் கழுத்திலிருந்து ஊறிவருவதாக முன்னர் நம்பப்பட்டதாகும். கழுத்தூறி என்ற‌
சொல்லிலிருந்து கஸ்தூரி என்ற சொல் அமைந்தது. இச்சொல்லில் ழு என்பது
ஸ் என்று மாற்றப்பட்டது,

இந்த நம்பிக்கையைச் சுட்டிய இணைய அகரவரிசைக் குறிப்பு  காணமுடியவில்லை, திருத்தப்பட்டிருக்கலாம்.
எமது பழைய இடுகைகளும் அழிந்தன.

எனினும் கழுத்தூறி >  கஸ்தூரி.

எமது பழைய இடுகையின் பகர்ப்பு வைத்திருப்போர் அன்புகூர்ந்து அனுப்பிவைக்கவும்.

posting feature may have been made difficult.  will edit later.

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

சிங்கைநகராம் இழைப்பதெலாம் வென்றி

அடுக்குமாடி வீட்டினிலே  சிங்கைநகர் மேவி
அமைதியாக வீற்றிருந்தேம் அங்குபல குப்பை
எடுக்கும்வேலை ஆற்றுகிற பளுவுந்து  வந்தே
ஏற்றபடி  அழுக்கவற்றை ஏற்றியகன் றார்கள்
நடுப்பகலோ காலையதோ  மாலயதோ என்று
நாடுவதும் இல்லையது தூய்மையொன்று நோக்கம்!
விடுப்பினிலே வேலையரும் விலகிநிற்பதுண்டோ ?
வினைசெயலே தலைக்கடனே வேறுளதோ   வியப்பேம்

உலகினிலே தூய்மையதாம் உற்றஒரு   கடனாய்
உழைப்பதுசிங் கைநகராம் இழைப்பதெலாம் வென்றி.

தூய்மை வாழ்க

குறிப்புகள்:

இருந்தேம்  ( இருந்தோம்  வியந்தோம்  :  ~ஓம் என்பதினும்  ~ஏம்  என்று  முடிவது  பொருத்தம் )

பளு வுந்து  :  லாரி .

வென்றி =  வெற்றி  
இச்சொல் வென்றி என்றும் வரும்.

 

வியாழன், 20 ஏப்ரல், 2017

பன்னீரா ? எடப்பாடியா?

உயரப் பறந்தது தேன்சிட்டு;
உயர்ந்து சென்றது வான்முட்ட!
அயர்ந்தன மற்றப் பறவைகளே.
அரசனும் ஆனேன் நானென்றது.

தமிழகத் தரசோ யாரென்பதை
தாமிகப் பறந்து கூவுமவர்
அமையும் பன்னீர் தெளிப்பவரோ?
அவர்முன் அமர்ந்த பாடியரோ?

இன்னும் சின்னாள் பொறுத்திருந்தால்
எதற்கும் விடையும் கிடைத்துவிடும்.
மன்னர்  இவரென் றறிந்தபடி
மாலை இலைநீர் அருந்திடுவீர்.

இலைநீர் ‍  : கொழுந்து இலைநீர், (தேயிலை நீர்)
















 

அக அத்தி அகத்தியர்

அத்தி மரம்தான் பெரும்பாலும் பாம்புகள் முட்டையிடும் இடமென்று
பாம்புபற்றித் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். இதுபற்றித் தெரிந்தவர்கள்தாம் சொல்லவேண்டும்.

அகத்தியரின் வீட்டுக்கருகிலே ஓர் அத்திமரம் இருந்திருந்ததென்பாரும்
உண்டு. இதற்குத் தனிப்பட்ட ஆதாரம் ஏதுமில்லை.  அகத்தியர் என்ற‌
சொல்லை அடிப்படையாக வைத்தே இது சொல்லப்படுகிறது.

அகத்தியர் உண்மையில் "அக அத்தியர்" என்றனர் இவர்கள். அவர்
வீட்டிற்கருகிலே ஓர் அத்திமரமாம்.

மக்கள் அதை அவ்வீட்டுக்குரிய அத்தி என்ற பொருளில், அக அத்தி
என்றனர்.  அவ்வீட்டில் வாழ்ந்த குள்ளமுனி, அகத்தியர் எனப்பட்டார்.

எதுவும் இருக்கலாம். சில ஆயிரம் ஆண்டுகளின் முன் நடந்ததை
எப்படி அறிவது?  நேற்று நடந்ததற்கே ஆதாரம் கிடைக்காமல்
மனிதர்கள் திண்டாடுகிறார்கள்!   

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

முன்னிலை பெற்ற தொழில்கள்

மனித நாகரிகத்திலே முன்னிலை பெற்ற தொழில்கள் சில. நாம் பேச‌
விழைவது மனிதன் காட்டினனாக வாழ்ந்து, மரங்களின்மேல் குடியிருந்த காலத்தைப் பற்றியது. அப்போது அவன் வேட்டுவனாக இருந்தான். மரத்தில் கிடைத்த்வற்றை உண்டதுடன், விலங்குகளையும் வேட்டையாடித் தின்றுவிட்டு,இரவில் மரங்களில் வீடு அமைத்துக் குடியிருந்தான்.

பலவித இடர்களையும் விட்டுப் போய் வைகுவதனால் அவன் தங்கியது
"வீடு" எனப்பட்டது. குந்த ஓர் இடம் வேண்டாமோ?  மரத்திலவன் வைத்ததே (அமைத்ததே) அவனுக்கு "வை குந்தம்" ஆனது. அவன் பத்திரமாகக்
குந்திக்கொள்ளும்படி வைத்த இடம் : வைகுந்தம். அவன் இடர்களிலிருந்து வீடுபெற அவன் கும்பிட்ட சாமியும் வைகுந்தத்திலேயே இருந்துகொண்டார்.

வேட்டுவ வாழ்வை விட்டு நீங்கி, ஓரிடத்துத் தங்கி, பயிர்த்தொழில்
மேற்கொண்டு  , சில விலங்குகளை வீட்டின் புறத்துக்  கொட்டகையில் இருத்தி வளர்த்துப் பால், தயிர், மோர் முதலிய நுகரத்தொடங்கியது
பிற்காலத்து நாகரிகம் ஆகும்.  இக்காலங்களில் அவனுக்கு, மாடு, ஆடு, நாய் பூனை முதலிய நட்புடையவை ஆயின.


ஆதாரம் ( ஆக்களைத் தருதல்),    ஆதரவு ஆதாயம், முதலிய சொற்கள் அவன் மாடுசார்ந்த ஒரு நாகரிகத்தினன் என்பதை
நன்கு விளக்குவன ஆகும்.  அவன்றன் ஆவுறவை "ஆபோகம்" என்ற‌
சொல் விளக்கும்.  ஒரு மனிதன் போய்த் தேடும் சுகங்கள் "போகம்"
எனப்பட்டது.  அவன் ஆவினோடு கூடி வாழ்ந்த வாழ்வு "ஆபோகம்"
என்று சிறப்புப்பெற்றது.

பண்டமாற்றில் ஆவை விற்க, அது "ஆதாயம்" தந்தது.  ஆ‍ பசு;
தா =  தருதல். தாயம்: தருதல். தா +அம் = தாயம் ‍= தருதல். யகர‌
உடம்படு மெய்,

மனிதன் எத்தனை ஆக்களை உடையவனாய் இருந்தான் என்பதைக் கொண்டு அவன் செல்வனா, அல்லனா என்றபாலது தீர்மானிக்கப்பட்டது.மாடு என்ற தமிழ்ச்சொல்லுக்குச் செல்வம் என்ற‌
பொருள் இன்னும் மாற்றமுறாமல் இருக்கிறது. "மாடல்ல மற்றையவை" என்ற திருக்குறள் தொடரால் இது நன்கு புரியும்.

புதியோனாகக் குடிபுகுந்தோனுக்கும் இடர் அடைந்தோனுக்கும் தந்து
உதவத்தக்கது  ஆக்களே.  இதுவே "ஆதரவு"  ஆனது. ஆவைத் தருவதே ஆதரவு. அவனுக்கு வேண்டிய பால், தயிர் முதலிய தேவைகளை ஆக்களே தந்தன. ஆவின்றித் தரவில்லை.  ஆ தருவதே ஆதாரம்.

நாளடைவில் இச்சொற்களில் ஆவின்பங்கு  மறக்கப்பட்டு,  அவை
பொதுப்பொருளில் வழங்கின. மாடு என்பதே செல்வமானது.

ஏர்த்தொழிலுக்கு உதவியது எருது ஆனது..  எரு‍=  ஏர்.  எரு> எருமை.

எருமை மிகுந்த ஊர் எருமையூர்:>  மையூர் > மைசூர்.  தலைக்குறையும் திரிபும் ஆகும். ய>ச திரிபும் காண்க.  மை = மெய்,  ()உடல்..

இங்ஙனம் ஆ நாகரிகம் சிறந்த இடங்களில் ஏறு தழுவுதல் ஒரு
வீரவிளையாட்டானதும் பொருத்தமே.




திங்கள், 17 ஏப்ரல், 2017

கட்சிக ளுக்கு காசு முடை!!

கட்சிக  ளுக்குத் தமிழ்நாட்டிலே
காசு முடையென்று யார்சொன்னது?
பட்சிக ளுக்கிரை இல்லையென்று
பாரினிற் சொன்னால் அதுவுண்மையே.
இச்சை இலையெனப் பாடிவிட்டார்
இத்தனை கோடி புதுப்பணமே
நச்சுக் கடைக்கட்டு வந்ததென்ன?
நாடு நகரம் அசந்தனவே



பட்சி :  பறவை.
புள் > புட்சி > பட்சி.
இழுச்சை > இச்சை.  ஆசை.

இவை பின்னர் விளக்கப்பெறும்.

.






 

யானை கட்ட ஆலானம் வேண்டும்.

ஆலானம் என்ற சொல் இப்போது இயல்பான வழக்கில் வருவதில்லை என்றாலும்  ஆனை (யானை)ப் பாகர்கள் அறிந்த சொல். பிறருக்கு ஆனையினுடன் வேலைத்தொடர்பு ஒன்றும் இருப்பதில்லை ஆகையால் அவர்கள் அறிந்திரார்.

யானை கட்டும் கயிற்றுக்கு ஆலானம் என்று பெயர்.மெதுவாக‌
முயற்சி செய்து யானைகளைக் கட்டிவைப்பவர்கள் பாகர்களே.

யானை கட்டும்போது கயிற்றைக் கொஞ்சம் அகலவிட்டுக்
கட்டவேண்டும், அது பெரிதாகையால் கொஞ்சம் நடமாட‌
இடம்விட்டுக் கட்டுவர். ஆகையால் ஆலானம் என்ற சொல்லில்
முன் நிற்பது "ஆல்" என்பது.

ஆல் என்பது அகல் என்ற சொல்லின்  திரிபு.

அடுத்த சொல் ஆனை என்பது. இது ஐகாரம் கெட்டு. விகுதி
முன் "ஆன்" என்று  நின்றுவிட்டது.

ஆகவே ஆல்+ஆன்+ அம். இறுதி அம் என்பது விகுதி. இது
"ஆலானம்" ஆகிறது.

அரசரின் காலங்களில், யானைகள் மிகுதியான இருந்து,
யானைப் படையில் சேவை புரிந்தன. அப்போது இந்தச் சொல்
புழக்கதில் இருந்திருக்கும். தேவையான சொல்லாகவும்
இருந்திருக்கும். காலம் மாறி, பழைய அரசர்காலமும் போய்,
யானைகளை விலங்கு காட்சிசாலைகளில் காண நேர்கின்ற‌
இக்காலத்தில், இது பழம்பாடல்களில் வரும். அப்போது பொருளை
உணரலாம்.

புதிய சொற்களைப்  படைப்போர்,  இதில் கையாண்ட முறையைக் கைக்கொள்ளலாமே.  அதற்காக இதை அறிந்துகொள்ளுங்கள் .

யானை கட்ட ஆலானம் வேண்டும்.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

"ஞாலம்." எப்படி வந்தது?

ஞாலம்.

ஞாலம் என்பதற்கு உலகம் என்பது பொருள்.

இந்தச் சொல் எப்படி வந்தது என்பதைப் பார்ப்போம்.

ஞாலுதல் என்பது தொங்குதல் என்றும் பொருள்தரும். இதிலிருந்து
உலகம் என்று பொருள்படும் சொல் ஏன் வந்தது?

சிலர் உலகம் உருண்டையானது அல்லது வட்டவடிவம் உடையது என்று நினைத்தது போலவே வேறுசிலர் அது அண்டவெளியில்
தொங்கிக்கொண்டிருக்கிறது என்று நினைத்தார்கள். அதனால்
ஞால்+ அம்= ஞாலம் என்று ஒரு சொல்லால் உலகத்தைக் குறித்தனர்.

ஞாலம் என்பது வழக்கில் உள்ள சொல்லாகும்,

நீலம் (  நீலவானம் ) என்று ஒரு பாட்டெடுத்தால், அடுத்து
ஞாலம் ( ஞாலமீதில் ) என்று எழுதப் பொருத்தமான சொல்லாகும்.

ஞால என்பது தொங்க என்று பொருள்தரும்.


-------------------------


==============

ஞாலுதல் என்பது நாலுதல் என்றும் திரியும். நாலுதலும்
அதே பொருளை உடையது. தொங்குதல் என்பதே பொருள்.
நாலுதல் என்பது நாலல் என்றும் வரும். இந்த நாலுதலில்
உள்ள நால் என்ற அடி சி விகுதி பெற்று  நாற்சி என்றும் வரும்.
சி என்னும் விகுதி தொழிற்பெயரில் வருதற்கு இதுவும் ஓர் உதாரணம். (உது+ஆர்+அணம்). நாலுதல் தன்வினை; அது பிறவினையாக நாற்றுதல் என்று ஆகும். (  நால்+து+தல்).எனின்
தொங்கவிடுதல்.

நானிலம் என்பது பூமியைக் குறிக்கும். இதற்கு,  ஐந்து வகை நிலங்களில் பாலை நீங்கிய பிற நான்குமே சிறப்புடையது என்பதால் இவற்றை உள்ளடக்கி " நானிலம் " என்ற சொல் அமைந்தது என்பர்.
(  அறிஞர் க. ப. சந்தோஷம் ( மகிழ்நன் ) ).  எனினும் நால்+ நிலம் என்பது தொங்கு நிலம் என்றும் பொருள்கொள்ளும் என்பதறிக. இப்படி
நோக்கின், ஞாலம் என்பதே அதற்கும் பொருள் ஆகும்.

பூணூல் என்பது தோளிலிருந்து தொங்குநூலாதலால், அதற்கு நானூல்
என்றும் பெயர்.

நச்சினார்க்கினியர் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய காலத்தில்
மூன்று ஆரிய வேதங்களே  (ஆரிய, சிறந்தோர்; அறிவாளிகள் ). நான்காவது இன்னும் எழுதப்படவில்லை. அல்லது புனையப்படவில்லை.  எனினும் நானூலாரால் பயலப்பட்டமையின்
நான்மறை என்றனர்.  எனினும் குலை முதலியன ஒன்றாய்த் தொங்குவதுடையது.  தொகு (தொகை நூல் ) என்பது இடைவிரிந்து
தொங்கு ஆகும்.  பின்னர் நான்காகி   எண்ணிக்கை  நிறைவு பெற்றது.




‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍



சனி, 15 ஏப்ரல், 2017

ஆலானம் கொண்டே அடித்துப் பிணைத்தாலும்

ஆலானம் கொண்டே  அடித்துப் பிணைத்தாலும்
கோலானைத் தான்திருப்பிக் குத்தவரும் ‍‍‍==== கேளாக்
கொரிய வடக்கினர்க்குக் கோதில் அமைதி
தெரியுவழி தேர்ந்து செயல்.


ஆலானம்: இச்சொல்லின் விளக்கம் இங்கு வெளிவரும் . 
இது யானை காட்டும் கயிறு.

கோலான்:  கோல் பிடித்திருப்போன்.

கொரிய வடக்கினர் : வடகொரியர்.

கோதில்: குற்றம் இல்லாத.

பே+ து + அம் = பேதம்

பெயர்தல் என்றால் பொருள் பலவாகும்.    ஆடல், எடுபடல், திரும்பல்,பேர்தல், பிறழ்தல், வேறுபடல், சிதைவுறல், விடுதல், மீளுதல், மாறுதல், அசையிடுதல் எனப் பல்பொருள் ஒருசொல் ஆகிறது
இது.

பெயர்த்தல் எனில் வேறுபடுத்தல், போக்குதல்,  நிலைமாறச் செய்தல், பிரித்தல்,  கொடுத்தல், செலுத்துதல், சிதைத்தல், புரட்டுதல், கிளப்புதல்
என்றும் பொருள்.

பேரன் என்பது உண்மையில் "பெயரன்" என்பதினின்றும்  போந்தது  .  பெயர் என்ற பகுதி பேர் என்று நின்று அன் விகுதி பெற்றது. பேத்தி என்பதோ,  பே+தி = பேத்தி என்றானது.  எனவே,      பெயர் > பேர் > பே
என்று திரிவதைத் தெள்ளிதில் தெரியலாம்.

பேதம் என்பது வேறொன்றாவதைக் குறிப்பது.  மாறுபடற் கருத்தாகும்.

பே+ து + அம் = பேதம்.  து ‍விகுதி . அம் என்பதும்  விகுதி.
விகுதிமேல் விகுதி என்றோ, இடைநின்ற விகுதியை இடைநிலை என்றும்  இறுதி விகுதியை விகுதி என்றும் கூறினும் இழுக்கொன்றும்
இலது.

ஆகவே பேதம் நல்ல தமிழே.

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

உலகம்

மூத்தம்மா காலத்தில் இல்லாத முன்னேற்றங்கள்!
தாத்தாவின் காலத்தில் இல்லாத தடுமாற்றங்கள்!
முன்னென்றே ஒன்றுதான் இருந்துவிட்டால்
பின்னென்றே ஒன்றும் இருந்துவிடுமே!
இருந்தாலும் இவ்வுலகம்
சுழன்றுகொண்டுதான் இருக்கிறது.....
உலகம் சுற்றித்
தொடங்கின இடத்துக்கே
அடங்கிவந்து அமைந்ததுபோல‌
காரியங்கள் சில‌
தொடங்கிய இடத்துக்கே வந்துவிடுகின்றன.
சில தொடங்குவதே இல்லை...
சாதனைகள்
கொசு  கடிப்பதும்  சளி பிடிப்பதும் ......

உலகம்