சனி, 7 நவம்பர், 2026

மது என்ற சொல்.

முன்னுரை: 

ஒரு சொற்பொழிவில் பேசுகிறவர் ஒவ்வொரு சொல்லையும் முறைப்படி உச்சரிப்பதற்கு, உரிய நேர அளவினை எடுத்துக்கொள்ளலாம். பாட்டில்போல நீட்டவோ குறுக்கவோ அவர்க்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதில்லை. இக்காலத்தில் கவிதைகளில் நாம் இந்த நேர அளவுகளைக் கவனிப்பதில்லை தொல்காப்பிய எழுத்ததிகாரம் தமிழ் எழுத்துக்களுக்கு உரிய கால அளவுகளை முறைப்படி தெரிவிக்கின்றது. நீண்டு ஒலிக்கும் முறையை அளபெடை  என்று சொல்வர்.

தமிழ் ஒரு காலத்தில் உரை நடையே இல்லாத மொழியாகத் தோன்றியது.  உரைநடை என்பது செய்யுளுக்குப் பொருள் சொல்லுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பின் காலத்தில் அது வளர்ச்சி பெற்று இன்றுள்ள நிலையை எட்டிற்று.

முதற்குறை, இடைக்குறை, கடைக்குறைச் சொற்கள்

இன்று நாம் குறைச்சொற்களை அதிகம் பயன்படுத்துவதில்லை.  கவிதைகள் பெரும்பாலும் மாத்திரை அளவுகளைக் கவனிக்கமலே எழுதப்பெறுகின்றன. யாப்பு இலக்கணம்  கற்காமலே கவிதை எழுதுவதுதான் இன்றை முறையாகும்.

இவற்றை எல்லாம் ஒப்புக்கொள்தல் போலவே, நாமும் செயல்படுதல் இயல்பு ஆகிவிட்டது.

என்னில் என்பதன் தொகுப்பே எனில் என்பது;  தன்னில் என்பதன் தொகுப்பே தனில் என்பது என்பதைச் சொன்னால், ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினால் ஆதாரங்களைக் காட்டவேண்டும் என்று வாத்தியார் வேலை செய்யும் பெண் சொல்கின்றாள்.

இப்போது மது என்ற சொல்லை ஆய்வோம்.  மயங்குவது  அல்லது மயக்குவது என்ற சொல்லைச் சுருக்கினால் ம(யக்குவ)து  என்ற சொல் மது என்று ஆகிவிடும். இதுவும் இடைக்குறை அல்லது தொகுப்புதான். நாட்பட்ட சிறங்கை உடலின் பகுதியாகவே கருதிக்கொள்வது போல,  இதை முழுச்சொல்லாகவே கவனிக்கவேண்டும்.  தமிழாகவோ சமஸ்கிருதமாகவோ கருதலாம்.

சம ஒலியுடைய மொழியாகத் தோன்றியதுதான் சம+ க(த்)து+ அம் >  சமகதம் > சம்( ஸ் ) கதம் >  சமஸ்கிருதம்..  கதம் > கிருதம்  ஆகும்.  மெது > மிருது ஆனதுபோல். சிசு > சிறுசு  ஆனதும்  அடங்கும். கரு> கிருஷ் ஆனது காணவும். தமிழில் உது என்பதிலிருந்து உதிர்(தல்) பலர் அறியாத திரிபு. முது > முதிர் அதில் அடங்கும். அதிர், முதிர் என்பன அருது, முதிரு என்று வரின் ரகர முறைமாற்று. குத்து > குதிர் என்பதில் முறைமாற்று உண்டு. இதைக் குத்து> குது> குதிர் என்றும் விளக்கலாம். குழப்படியாகத் தெரிந்தால் நன்கு கற்க, தெளியும்.

மது > மதர்த்தல் (வினை)  அறிந்துகொள்ளக் காலமாகும். குது > குதிர் விளக்க இனிது.

தெற்கு ஒலியமைப்பை உடையது சமஸ்கிருதம் என்பதை சுனில் குமார் சட்டர்ஜி கண்டுசொன்னது  அவர் திறமையாகும். வடக்கில் எளிதில் வழக்குடையதானதால்,  வடமொழி என்றனர்! தோன்றியது தெற்கில் என்பதே உண்மை.  இதைக் கால்டுவெல் கண்டுகொள்ளவில்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

செவ்வாய், 3 நவம்பர், 2026

அருச்சுனன்

 இன்று இயற்பெயராக வழங்கும் ''அருச்சுனன்''  என்ற சொல்லைக் கவனிப்போம்.

நல்ல பல செயல்களுக்கும் ஊற்றாக இருக்கும் ஒருவனைச் சுனையுடன் ஒப்பிடலாம்.  ஒரு சுனையினின்று நல்ல நீர் ஊறி வருவதைப்போலவே, சிறந்த மனிதன் ஒருவனிடமிருந்து நல்ல செயல்களும் எண்ணங்களும் ஊற்றுப்போல் ஊறி வெளிப்படும்.  தெளிவும் அழகும் போற்றும் இச் செயல்களும் எண்ணங்களும் வெளிப்படும்  மனிதனாக அருச்சுனன் மகாபாரதத்தில் கவர்கின்றான். இவன் பெயர் அருஞ்சுனை  என்ற தமிழ்ப்பெயரிலிருந்து, அருச்சுனன்> அருச்சுனா>  அர்ஜுனா என்று அறியப் பொருத்தமுடையதாகிறது.

மகாபாரதக் கதை,  வடநாட்டில் நடைபெற்றதாகக் கருதுவதற்குத் தொன்றுதொட்டு ஆசிரியர் சிலர் வழிசெய்திருந்த போதிலும்,  கண்ணனின் நீலநிறம்  அவன் தென்னாட்டுத் தெய்வமாக இருந்து வடக்கில் எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளான் என்றே அறியத் தோன்றுகின்றது.  இப்படி மதங்களும் அதன்கண் காணும் நிகழ்வுகளும் பயன்பாட்டின் காரணமாக, இடம் மாறிச் சமய வரலாறுகளில் தோற்றம் தருதல் கூடும்.  கிறிஸ்துவ மதத்தில் உரோமாபுரிக்கு ஓர் ஒளி கிடைத்திருந்தாலும்,  அது தோன்றியது இசுரேலில்தான். நிகழ்விடங்கள் எளிதில் இவ்வாறு மாறிக்கிட்டுதல் கூடும். இதனால் இழப்புகள் ஏதுமில்லை. இராமகாதை முக்கிய  நிகழ்விடம் வடக்காயினும், தென்னாட்டினை முற்றிலும் கழற்றிவிட முடியவில்லை.

மகாபாரதச் சொற்கள் பலவற்றைத் தமிழுடன் பொருத்திப் பார்த்துப் பொருள் கூறியுள்ளோம்.  ஓரிடத்தில் நடந்ததை மறைத்து வேறோர் இடத்தில் நடந்ததாகக் காட்டுவது கதைசொல்வோருக்குப் புதிது அன்று.  கதை தரும் படிப்பினை முதன்மையே அன்றி, இடம் அன்று.  இதிற் சூழச்சி ஏதும் இல்லை.

சிலம்பு அதிகாரம் சிலப்பதிகாரம் என்றாயது போலுமே அருஞ்சுனையன் என்பது அருச்சுனா என்று வலி மிக்கு வந்தது. வலி எனில் வல்லினம்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

பகிர்வுரிமை




சனி, 31 அக்டோபர், 2026

நிரூபித்தல்

 இச்சொல்லை இப்போது ஆய்வுசெய்வோம்.

யார் ஆய்வாளன் என்பது:

நாம் இங்கு மூலச்சொற்கள், அடிச்சொற்கள், இன்ன பிற சொற்களின் பகவுகளைக் கொண்டே ஆய்ந்து கூறுகிறோம். நாம் அடிச்சொற்களை ஆராயாமல் அல்லது ஆராய்ந்திருந்தால் அதை வெளியிடாமல் தம் பதவிகளை மட்டும் ஆதாரமாக வைத்து வெளிப்படுத்திய முடிவுகளை அடிப்படையாக வைத்து எதையும் கூறுவதில்லை. இன்னொருவன் சொன்னதைச் சொல்லிக்கொண்டிருப்பவன் எவ்வளவு உயரத்தில் இருப்பவனாயினும் அவன் ஆய்வாளன் அல்லன்.

சொல்லின் பகவுகள் அல்லது பகுதிச்சொற்கள்:

இச்சொல்லின் முதற் பகவு:  நிறு  என்பது.  இது நிறுவுதல் என்ற சொல்லின் அடிச்சொல் தான். நிறுவுதல் என்பதற்கும் நிரூபித்தல் என்பதற்கும் இடையில் பொருண்மையில் எந்த வேறுபாடும் இல்லை. நிறுவுதல் என்றால் ஒன்றை ஆய்வின் அல்லது விசாரணயின் மூலமக நிலைநிறுத்துதல்.  மெய்ப்பித்தல் எனினுமாம்.

இதனை  நிரூபித்தல் .  நிறு + உருவித்தல் என்று தமிழிற் பிரித்துப் பொருள் சொல்லவேண்டும்.  உருவித்தல் - ரூபித்தல் என்பவற்றில் பின்னது தலைகழன்ற ஒரு சொல்.  உருவித்தல் என்பதில் வரும் உகரம் வெட்டப்பட்டுச் சொல் அமைந்திருப்பதால்,  நாம் உருவித்தல் என்ற சொல்லையே  நிறுவு என்பதனுடன் இணைத்து இச்சொல்லை விளக்குகின்றோம்.

இதனுடன் பொருளொருமை உடைய பிற தனித்தமிழ்ச் சொற்கள்,  எண்பித்தல், மெய்ப்பித்தல் என்பனவாகும். இக்கருத்துக்களைப் பிற சொற்களால் விரித்தும்  எழுதலாம் என்று அறிக.

சால்வுறு,  நிறுவுதல்- -பண்ணுதல் முதலியவை.

சால்வுறுத்துதல் என்பதையும் ஏற்புழிப் பயன்படுத்தலாம். இச்சொல்லை கந்தபுராணத்தில் கண்டுபிடித்துள்ளனர். (அவைபுகு.34). ''முத்தின் சால்வுறு கண்டசரம்'' என்றுவரும். ''முத்தும் பதித்து  மெய்ப்பிக்கப்பட்ட கண்டமாலை '' எனக்கொள்க.  பொன்மாலை அன்றென்றால் முத்தை எப்படிப்பதிப்பார்கள்? என்று கேள்வி வருதலால, வேறு காரணம் வேண்டாமல் அது பொன்னாலான கண்டமாலை தான்.  நிரூபணம் (proof) எவ்வாறு அமைகிறது என்பது கண்டுகொள்க. இதை நிருபணம் என்றும் எழுதுவர். இச்சொல் நிறுவுதலைப் பண்ணுதல் என்ற வழக்கில் வந்தமைந்தது. இதில் வரும்  பணம் என்பது பண்ணுதல் அடியாக அமைந்த சொல்:  பண்ணு> பண் ( வினைச்சொல்) + அம் > பணம் என்று இறுதிப் பகுதி அமைகிறது.  பண்> பண்ணு;  பண்+ அம் என்று வரினும்  பணம் என்று வருதல், பண்ணுதல் என்ற வினையில் வருதலாம். நிரூபணம் என்பது இருவினைக் கூட்டு.

அறிக மகிழக.

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை.