இச்சொல்லை இப்போது ஆய்வுசெய்வோம்.
யார் ஆய்வாளன் என்பது:
நாம் இங்கு மூலச்சொற்கள், அடிச்சொற்கள், இன்ன பிற சொற்களின் பகவுகளைக் கொண்டே ஆய்ந்து கூறுகிறோம். நாம் அடிச்சொற்களை ஆராயாமல் அல்லது ஆராய்ந்திருந்தால் அதை வெளியிடாமல் தம் பதவிகளை மட்டும் ஆதாரமாக வைத்து வெளிப்படுத்திய முடிவுகளை அடிப்படையாக வைத்து எதையும் கூறுவதில்லை. இன்னொருவன் சொன்னதைச் சொல்லிக்கொண்டிருப்பவன் எவ்வளவு உயரத்தில் இருப்பவனாயினும் அவன் ஆய்வாளன் அல்லன்.
சொல்லின் பகவுகள் அல்லது பகுதிச்சொற்கள்:
இச்சொல்லின் முதற் பகவு: நிறு என்பது. இது நிறுவுதல் என்ற சொல்லின் அடிச்சொல் தான். நிறுவுதல் என்பதற்கும் நிரூபித்தல் என்பதற்கும் இடையில் பொருண்மையில் எந்த வேறுபாடும் இல்லை. நிறுவுதல் என்றால் ஒன்றை ஆய்வின் அல்லது விசாரணயின் மூலமக நிலைநிறுத்துதல். மெய்ப்பித்தல் எனினுமாம்.
இதனை நிரூபித்தல் . நிறு + உருவித்தல் என்று தமிழிற் பிரித்துப் பொருள் சொல்லவேண்டும். உருவித்தல் - ரூபித்தல் என்பவற்றில் பின்னது தலைகழன்ற ஒரு சொல். உருவித்தல் என்பதில் வரும் உகரம் வெட்டப்பட்டுச் சொல் அமைந்திருப்பதால், நாம் உருவித்தல் என்ற சொல்லையே நிறுவு என்பதனுடன் இணைத்து இச்சொல்லை விளக்குகின்றோம்.
இதனுடன் பொருளொருமை உடைய பிற தனித்தமிழ்ச் சொற்கள், எண்பித்தல், மெய்ப்பித்தல் என்பனவாகும். இக்கருத்துக்களைப் பிற சொற்களால் விரித்தும் எழுதலாம் என்று அறிக.
சால்வுறு, நிறுவுதல்- -பண்ணுதல் முதலியவை.
சால்வுறுத்துதல் என்பதையும் ஏற்புழிப் பயன்படுத்தலாம். இச்சொல்லை கந்தபுராணத்தில் கண்டுபிடித்துள்ளனர். (அவைபுகு.34). ''முத்தின் சால்வுறு கண்டசரம்'' என்றுவரும். ''முத்தும் பதித்து மெய்ப்பிக்கப்பட்ட கண்டமாலை '' எனக்கொள்க. பொன்மாலை அன்றென்றால் முத்தை எப்படிப்பதிப்பார்கள்? என்று கேள்வி வருதலால, வேறு காரணம் வேண்டாமல் அது பொன்னாலான கண்டமாலை தான். நிரூபணம் (proof) எவ்வாறு அமைகிறது என்பது கண்டுகொள்க. இதை நிருபணம் என்றும் எழுதுவர். இச்சொல் நிறுவுதலைப் பண்ணுதல் என்ற வழக்கில் வந்தமைந்தது. இதில் வரும் பணம் என்பது பண்ணுதல் அடியாக அமைந்த சொல்: பண்ணு> பண் ( வினைச்சொல்) + அம் > பணம் என்று இறுதிப் பகுதி அமைகிறது. பண்> பண்ணு; பண்+ அம் என்று வரினும் பணம் என்று வருதல், பண்ணுதல் என்ற வினையில் வருதலாம். நிரூபணம் என்பது இருவினைக் கூட்டு.
அறிக மகிழக.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை.