ஞாயிறு, 18 மே, 2025

குரோதம் சொல்

 குறுகிய மனமப்பான்மையினால் மக்களிடையே ஏற்படும் மாறுபாடான நடப்புகளைக் காட்டுவதற்கு ஒரு சொல் தேவைப்பட்டது.  இந்தத் தேவை  சமஸ்கிருதம் தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் தேவை என்று உணரப்பட்டிருக்கலாம்.  இதை அறுதியிட்டுச் சொல்வதற்கு அந்த வேளையில் நாம் அங்கு இல்லை.

குறு + ஓது + அம்  >  குரோதம் என்று சொல் அமைந்தது.

வல்லின றுகரம் புணர்க்கப்பட்டு ரோ ஆயிற்று.

இது சாறு > சாராயம் என்ற சொல்லின் மற்றம் போலுமே ஆகும்..  சாறாயம் என்னாமல் சாராயம் என்றே வந்தது அறிக.

விரோதம் என்ற சொல்லுக்குக் கூறியவை ஈண்டும் பொருந்தும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

உங்கள் அன்பான கவனத்திற்கு


FOR YOUR KIND ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.



சனி, 17 மே, 2025

விரோதி என்ற சொல்.

 இந்தச் சொல் தமிழில் வழக்குடைய  ( என்றால் பயன்பாடு உடைய)  சொல்லாகும்.  எல்லாத் தமிழறிந்த மனிதரும் அறிந்த சொல்.  இது ஒரு பொதுச்சொல் தான்.  தமிழுக்கும் சமஸ்கிருதம் என்று சொல்லப்படும் சந்த மொழிக்கும் பொதுவான சொல்.

சமஸ்கிருதம் என்பது சந்த அசைகளால் ஆன மொழி என்று அறிந்து அதற்குச் சந்தாசா என்றொரு பெயரும் இருந்தது. இந்த மொழிக்குப் பல பெயர்கள் வழங்கியுள்ளன. அவற்றைக் கூறும் நூலகளின் மூலம் அறிந்துகொள்க.

விரோதி என்பவன் ஓர் எதிரி என்று சொல்லலாம்.

வெறு, ஓது என்ற இரண்டு சொற்களால் அமைந்த சொல் இதுவாகும்.

வெறு ஓது இ >  வெறோதி > விரோதி என்று தமிழ் மூலம் உடைய சொல்.

சொல் அமைந்தவுடன் றகரம் ரகரம் ஆகிவிடும். 

எடுத்துக்காட்டு:

சாறு >  சாறு ஆய அம் >  சாராயம் என்றாகும்.  

வல்லெழுத்து று என்பது இடையின எழுத்தாகியது அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்,

FOR YOUR KIND ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.





வெள்ளி, 16 மே, 2025

அப்பாவி சொல்

அப்பாவி என்றால் ஒரு பாவமும் அறியாத ஆள் என்பது பொருளாகும். இஃது எவ்வாறு அமைந்தது என்று காண்போம்.

அப்பாவி என்பதில் உள்ள அகரம் ஓர் கடைக்றை  ஆகும். இதன் முழுச்சொல்  "அல் " என்பதே.  அல் பாவி என்றால் பாவி அல்லாதவன்  அல்லது ~வள் என்பதாம்.  பாவி என்பது நீங்கள் அறிந்த சொல்.  பாவம் >பாவி. இ - செய்வோன்..  செய்வோள் இரண்டிற்கும் பொது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

படிப்பீர் பகிர்வீர்


ப்


ப்