வியாழன், 15 மே, 2025

ஆகம என்பது இடைக்குறைந்து ஆம எனவாவது: ஆமநாயம்.

ஞாயம்  என்ற சொல்,  நியாயம் என்பதன் திரிபாக எண்ணப்படுகிறது.  ஆனால் ஞாயம் மேலும் திரிந்து நாயம் என்று எழுதப்பட்டால்,  அவை மரபுகளுக்கு இணங்காத பட்டி வழக்கு என்று எண்ணத் தோன்றும்.  ஆனால் இதைப் பாருங்கள்:

வினைச்சொல்:  நயத்தல்.  தொடர்புள்ள பெயர்ச்சொல்:  நயம்.

நய + அம் >  நாயம். இங்கு  முதனிலை நீண்டு திரிந்து  அம் விகுதி பெற்றது. அம் என்பது அமைப்புக் குறிக்கும் விகுதி. விகுதிகட்குப் பொருள் இல்லாமலும் சொல்லை மட்டும் அமைக்க வருவதுமுண்டு.  ஆனால் இங்குப் பொருள் காண முடிகின்றது.

இதுபோல் அமைந்த இன்னொரு சொல்:

வினைச்சொல்:  மயங்கு-(தல்.)

அடிச்சொல்:  மய.   கு என்பது வினையாக்க விகுதி.

மய + அம் > மாயம்.   

கண்டோரை மயங்கச் செய்வது.  ( இதுவோ?  அதுவோ? என்று.

மாய்தல் ( அறிவை மாய்த்தல் ) என்பதாலும்  மாய்+ அம் > மாயம் என்று வரும் என்பதால்,  இஃது இருபிறப்பி அல்லது பல்பிறப்பி  ஆகும்.

மய என்பது மாயம் என்று வரலாகும் என்பதை இது காட்டுவதால்,  நயம் என்றபாலதும் நாயம்  என்று திரிதலுமாகும் என்று உணர்க.

இனி,  ஆகம என்ற சொல்லும்  ஆம என்ற திரிந்தது.  ஆனால் இது தனியே வராமல் நாயம் என்பதனோடுதான் வரும்.  அப்போது ஆகம நாயம் அல்லது ஆகம ஞாயம் என்று கொள்ளவேண்டும்.

இவற்றை நன் கு கற்றுக்கொண்டு வேண்டியவர்களுக்கும் தெரிவியுங்கள்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

உங்கள் அன்பான கவனத்திற்கு


FOR YOUR KIND ATTENTION PLEASE


If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.




நம்புதல் -- என்ன?

 பிறர் கொண்டுள்ள ஒரு கருத்தை ஒருவனோ ஒரு கூட்டமோ தனக்குள் அல்லது தமக்குள் மேற்கொள்ளுவது தான் "நம்புதல்" எனப்படுகிறது.

 இச் சொல் நாம்> நம் என்ற சொல்லினின்று அமைகிறது. மிக்க எளிதாக ஒரு "பு" விகுதிகொண்டு இது அமைக்கப் படுகிறது.

முற்காலத்தில் நான் > நன் என்றும் நாம்>நம் என்றும் சொற்கள் குறுகி வழங்கின.  நெடில் வடிவங்களைவிட குறில் தொடக்கத்தவையே இச் சொல்லாக்கத்தில் பொருந்தி வருபவை . பொருட் பொருத்தமும் உடையாவை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்ந்து கொள்ளுங்கள்.




ம்


ன்


ம்ர்

ம்



செவ்வாய், 13 மே, 2025

சாசுவதம் அல்லது சாஸ்வதம் என்ற சொல். தொடர்வரு கடைப்பிடிகள்

 ஒன்று எதுவாயினும் என்றுமுள்ள தென்று சொல்ல இயல்வதானால் அது மனிதன் இறந்த பின்னும் இருக்கும் மனிதர்களால் பின்பற்றி வரத் தக்கதாகவும்  உண்மையில் பின்பற்றப்படுவதாகவும் இருக்கவேண்டும்.  என்றும் பற்றப் படுவது என்பதற்குச்  சமஸ்கிருதம்  அல்லது சங்கத மொழியில்  "சாசுவதம்" என்று சொல்வர். இதைத் தொடர்வரு கடைப்பிடிகள் என்று இங்கு சொல்கிறோம்.

சா -  இறந்த பின்னும்;

சுவ --  சுயமாக அல்லது தானே தொடர்வருகையாய்

து -  மாற்றமின்றித் தொடர்வது  ஆகிய;

அம்  -  அமைப்பு 

இவ்வாறு விளக்க,  சாசுவதம் என்பது நன்கு புரிந்துணர்வைத் தரும் கடைப்பிடிப்பு என்பதைச் சரியாக விளக்கமுடிகிறது.

சொ >  சு >  சுய  அல்லது சுவ.  இந்தச்சொல் வரும் சொல்லுக்கு ஏற்ப,  சுய என்றோ சுவ என்றோ வரும்.  சுவாதீனம் என்ற சொல்லில் சுவ என்பதே வந்தது.  ஏற்ற வடிவம் தேர்ந்துகொண்டு சொல்லை அமைக்கவேண்டும்.

சொ - சொந்தமாகவே, வ - வந்து கொண்டிருப்பது. இது "சொவ" > சுவ> சுய. சொவ என்பது சொய என்றுமாகும். இது உடம்படுமெய் மாற்றம். இதில் தமிழ் - சம்ஸ்கிருதம் ஒன்றுபாட்டை  உணர்க.

இதையும் படித்தறிந்து ஒப்பீடு செய்துகொள்ளுங்கள்:

சம்பிரதாயம்  https://sivamaalaa.blogspot.com/2023/07/blog-post_75.html

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

உங்கள் அன்பான கவனத்திற்கு


FOR YOUR KIND  ATTENTION


If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post for sharing among friends and students.

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகைக்குப் பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.