நாம் தமிழரும் தமிழுலகும் பயன்பெற வேண்டுமென்பதற்காகவே எழுதுகிறோம். ஆகவே இங்கு விதிக்கப்பட்டுள்ள பதிப்புரிமையை இறத்து செய்துவிட்டால் மேலும் பலர் படிக்கவும் பகிர்ந்துகொள்ளவும் வசதியாகும் என்று சொல்லப்படுகிறது. விரைவில் ஒரு முடிவு மேற்கொள்ளப்படும்,
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
புதன், 26 பிப்ரவரி, 2025
செவ்வாய், 25 பிப்ரவரி, 2025
சிறுத்தை என்ற விலங்குப் பெயர்
சில புலி வகைகளுடன் ஒப்பிடும் போது சிறுத்தை சற்று சிறிதாகவே உள்ளது. இதனால் இந்தப் பெயர் இவ்விலங்குக்கு ஏற்பட்டுள்ளது என்று முன்னர் விளக்கப்பட்டது.
ஆனால் இப்பெயர் கடுமையாகச் சீறுவதனாலும் ஏற்பட்டது என்று காரணமுள்ளது. அப்படியானால் :
சீறுதல் - சீறு > சீறு + தை > சிறுத்தை என்று குறுதலும் ஏற்புடையதே ஆகும். இதற்கு ஏற்புடைய சொல்லமைப்பு விதியாவது:
சா> சாவு > சாவம் ( சாவு+ அம்) > சவம் என்றும் குறுகி அமைதல் போன்றதே ஆகும். இது. தோண்டியது போல இருப்பது தொண்டை என்று குறுகுதலும் காணலாகும். ஆதலின் இவ்விலங்குப் பெயர்: இருபிறப்பி ஆகின்றது என்பதையும் அறியவேண்டும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
அடுத்த புதிய இடுகை: சாரங்கபாணி என்ற சொல்லமைப்பு.Thursday 1242 afternoon will be published.. படித்து மகிழுங்கள்.
திங்கள், 24 பிப்ரவரி, 2025
பஜனை என்னும் சொல்
- பா. பாட்டு, பாடு என்ற சொற்கள் பகரத்தில் தொடங்குவன.. பா என்ற ஓரெழுத்து மட்டுமே எல்லா வடிவங்களிலும் தோன்றுகின்றது. இதே போல் தான் பஜன் பஜனை என்ற சொற்களிலும் பகரமே தோன்றுகிறது. டு என்பது ஒரு வினையாக்க விகுதி. ஓடு, ஆடு, பாடு, தேடு, இடு, இடு என்ற பல சொற்களில் வருவது டுகர விகுதி: இது வினையாக்க விகுதியாகும். இதன் அடிச்சொல் எதுவென்றால் அது பா என்பதுதான். இது பரவுதல் கருத்தினால் ஏற்பட்ட சொல். ஒரு பாவில், பல கருத்துகள் அல்லது தொடர்புபட்ட செய்திகள் பரப்பப் படுகிறது. அல்லது பரப்பி வைக்கப்படுகிறது.. எழுத்துகளும் பரவி நிற்கின்றன. எத்தனை சீர்கள் இருக்கலாம் என்ற கணக்கும் உள்ளது.
பஜ, பஜரே முதலிய வடிவங்களிலும் பகரமே வருகிறது. சீர்கள் ஒன்றுடன் இன்னொன்று தொட்டு நிற்கின்றன. அடுத்து அடுத்து வருவதால் பா+ அடு என்றும் விரித்துச்சொல்லுதல் கூடும். ஆனால் முன் காலத்தில் படிக்கும்போது இராகம் போட்டுத்தான் படித்தார்கள். இப்போது பாடிப் படிப்பதற்கு வெட்கப் படும் நிலை உள்ளது.
பரவுதல் என்பதும் படருதல் என்பதும் தோற்ற உறவுமுறை உள்ளவை. படர்> பஜர் என்று தொடர்பு காணலாம். படர் > பஜர் என்பதும் காண்க. ஒரு பாவில் சொற்கள் படர்கின்றன என்பதும் காண்க.
ரகர டகரத் தொடர்பை, மடி> மரி என்பதிற் காணலாம்.
எந்தச் சொல் பயன்பட்டிருந்தாலும், பாடு> பாடன் > படன் > பஜன் என்பது உறுதி.
வா என்ற சொல், இறந்தகாலத்தில் வந்தான், வந்தாள் என்று குறுகுவதைக் காணலாம். பெயராய் அமைகையிலும், சாவு> சவம் என்றும் தோண்டு > தொண்டை என்று குறுக்கமடைவது காணலாம். ஈர்த்தலில் வந்த சொல் இருதயம் என்ற வடசொல். ஈர்> இர்> இருது அ அம் > இருதயம் என்று உண்டானதுதான். இரத்தத்தை இழுத்து வெளியிடும் ஈர் அல்., ஈர்தயம் > இருதயம்.
ஏனைத் தென்மாநில மொழிகளில் பாடுபவன் என்பதற்க்கு ஈடான சொற்களையும் ஒப்புநோக்கி யுள்ளோம். " Badavanaru என்ற சொல்வடிவம் காணப்படுகிறது. இது "பாடுபவனார்" என்பதற்குச் ஒப்பானதாக இருக்கிறது என்பதை அறிக.
பஜன் என்ற சொல்லை அறிந்துகொண்டீர்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.