ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

நிகண்டு என்ற சொல்.

 சொற்களின் பொருளை நிறுத்துக் காணவேண்டும். அல்லது சிந்தனை பலவாறு ஓடி வழிந்து விடாமல் நிற்பித்துக் காணவேண்டும். யாம் நிறு, நிற்பி என்றசொற்களை இங்குப் பயன்படுத்துவதற்குக் காரணி,  இந்த இருசொற்களினின்றும் இது விளக்கமுறுகிறது என்பதுதான். கண்டு என்ற வினை எச்சம் இறுதி முடிபு கொள்ளுதல் என்பதை வலியுறுத்துகிறது. பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை என்று சொற்களிலும் எல்லாமோ அல்லது சிலமட்டுமோ வரலாம்.

நிறு த்திக் கண்டு கொள்ளுதல்>   நிறு கண்டு >  நிகண்டு என்றாகும். இங்கு  ஒரு வினைச்சொல்லும் அதனோடு ஒரு வினைஎச்சமும் கூட்டி இச்சொல் புனையப்பட்டுள்ளது.  இப்படிச் சொல்வது எளிய முறையாகும்.  சமஸ்கிருதத்தில் மற்றும் பாலி மொழியில் வினை, இன்னும் எச்சங்களிலிருந்தும் சொற்கள் புனைவுறும்.

இன்னொரு முறையில்:

நில் என்ற சொல்லில்  இரண்டு எழுத்துக்கள். இதில் கடைசி எழுத்துக் குறைந்தால் அதற்கு கடைக்குறை என்று பெயர்.  அடுத்த சொல் கண் என்னும் சொல். கண் என்ற சொன் முதலெழுத்து நீண்டுதான்  காண் என்றாகி வினையானது. சொற்களை நின்று காணுதல் அதாவது ஆராயாமல் செல்லாது  சற்று நின்று மொழிபொருள் காரணம் காணுதல். இதன் பொருள் விரித்தால், சென்றுவிடாமல் நின்று கண்கொள்ளப்படுவது என்றாகிறது.  கண்ணிற் கொள்ளுதலாது கண்டுகொள்ளுதல்.   முடிவில்:  நி + கண்  + து >  நிகண்டு ஆகும்.

வியாழன், 13 பிப்ரவரி, 2025

BAJARE MANASA

 The cats make a lot of noise. In the end they do end up with

 a lot of kittens. Then why make a lot of  noise. 

 A beautiful Sanskrit song begins like this: " Hei heart! 

You sing that song! "  BAJARE MANASE  ...........direct your 

energies to internal peace.  

ஆபத்து - முன்சொலா முடிபுகள்.

 முன் சொல்லப்படா முடிவுகள் இங்கு கவியில் வருவதுபோல் முன்சொலா என்று திரிபுசெய்து இட்டிருக்கிறோம். மகிழ்வு நமதே.

ஆக்களைப் பற்றிக்கொண்டு செல்வது ஒரு பண்டைப் போர்த்தொடக்கத் தந்திரமாகும்.  முதலில் பயிற்சிபெற்ற கள்ளர்களை அனுப்பி  மாடுகளைக் கவர்ந்து வரச்செய்வர்.  எதிரி நாட்டவன் வெகுண்டெழுவான். போர் தொடங்கிவிடும்.   ஆ பற்று என்பது ஆ பத்து ஆகி ஒரு சொல்லாய்  ஆபத்து என்றாகிவிட்டது. இதுவும் பொருத்தமே.

இந்தச் சொல் இவ்வாறு அமைவதாகச் சொல்வது,  முதன்மையான கண்டறிவு ஆன காரணத்தினால், இது முன்னர்க்  கூறினோம். இது மக்களிடை வழங்கி மொழியிற் புகுந்த ஒரு சொல். 

ஓரு புதுமையான நடப்பு நிகழ்வு மிக்க வலிமையுடன் வந்து தாக்கினால் அதைக் குறிப்பதற்கு ஒரு சொல் வேண்டுமே.

ஆ+ வல் + து >  ஆவற்று >    ஆவத்து > ஆபத்து ( வகரப் பகரத் திரிபு)

இவ்வாறும் இச்சொல் அமையும்.  ஆகையினால் இது ஒரு இருபிறப்பி அல்லது பல்பிறப்பிச் சொல்.

ஆவது ( ஆகக் கூடியது)   அற்றுப் போனாலும்  ஆபத்துத்தான். இது:

ஆ + அற்று > ஆ+ அத்து >  ஆவத்து >   ஆபத்து என்று ஆகும்.

அற்று என்ற எச்சம் அத்து என்று திரியும்.  இன்னோர் அத்து இருக்கிறது. அது வேறு.

இங்கு ஆ என்பது ஆதல் வினை.  இன்னொரு வடிவம்:  ஆகுதல்.  இதில் கு என்ற வினையாக்க விகுதி சேர்ந்துள்ளது.

பிற பின் காண்போம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.