மருந்துகளும் முடிந்துபோச்சு நம்மகடையிலே --- அம்மே
மாந்தர்களும் சோர்ந்துபோன கிருமிகளாலே!
இருந்திடப்பலர் நோய்விலக்க மருந்துதேடினார் ---- அதனால்
இன்றுலகின் மருந்தாலைகள் பெருதொகைகண்டார்.
இருந்தவர்கள் இறந்துபோனார் வருந்துகிறோம்நாம் ----ஆனால்
இறந்திடாமல் மருந்துகொண்டு சிறந்தவர்பல்லோர்!
திருந்துதொழில் வளர்ந்தசில நாமுமறிந்தோம் ---- கண்டாய்
அழிந்தசில தாமுமுண்டிப் பரந்த ஞாலமே
பல்லோர் - பலர்
ஞாலம் - உலகம்
பரந்த - விரிவான.
திருந்துதொழில் - நல்ல தொழில்கள்.
கண்டாய் - நமக்கும் தெரிகிறது என்பது.
தாமுமுண்டிப் - தாமும் உண்டு இப் (பரந்த)
முடிந்துபோச்சு - இங்கு முடிந்தனவே என்பதுதான் இலக்கணபடி வரும். இது பேச்சுவழக்குத் தழுவி, போச்சு எனப்பட்டது.
இப்படம் கடையில் மருந்துகள் குறைந்தன என்பதனைக் காட்டுகிறது. தேடிய மருந்து கிட்டவில்லை.