ஞாயிறு, 11 அக்டோபர், 2020

சீணித்தல்

 நன்றாக வளர்ந்துவந்துகொண்டிருந்த ஒரு குழந்தைக்கு,  அதன் வளர்ச்சி நிற்கவோ குறையவோ செய்யுமாயின் அது சீணித்துப் போய்விட்டதென்பார்கள். ஊர்ப்புறங்களில் "வசக்கெட்டு"ப் போய்விட்டது என்று சொல்வதுமுண்டு. இச்சொல்  (சீணித்தல் ) இவ்வாறு உருவாயிற்று:

நிற்றல் >  நித்தல். என்றாகும்.  -ற்ற என்பது -த்த என்று மாறுவது பெருவழக்கான திரிபு. ஓர் எடுத்துக்காட்டு:-

சிற்றம்பலம்

சித்தம்பரம்  லகரமும் ரகரமாய் மாறிற்று.

இச்சொல் இடைக்குறைந்து:

சிதம்பரம் ஆனது.1


இச்சொல்லின் உருவாக்கத்தை வேறுவிதமாகக் கூறுவோருமுண்டு. ஆயினும்

இதுவே சரியான சொல்லமைப்பு ஆகும்,


நித்தல் என்பது இவ்வாறமைய,3

சீர் + நித்தல் >   சீணித்தல்.

சீர்நித்தல் > சீணித்தல் >  க்ஷீணித்தல். என்றாம்.


இன்னோர் எடுத்துக்காட்டு:

சீர்த்தேவி >  சீதேவி > ஸ்ரீதேவி.

சீர் என்றது சீ என்றானது கடைக்குறை.

வாருங்கள் <  வார் + உம்+ கள் >  வா(  )+(  ) ம் + க(ள்) > வாங்க.

வார் > வா.  சீர் > சீ.

வாராய், நீ வாராய்.  வரு+ ஆய் என்பது வாராய்  ஆகும்.

வாரீர் வாரீர். என்பதும் காண்க.

 எடுத்துக்காட்டுகள் சில தரப்படும். இன்னும் வேண்டின் நம் இடுகைகள் பலவும் வாசித்துக் குறிப்புகளும் கொண்டு போதிக்கவும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

சீர்+வனைதல் > சீவனை > சீவனம் > ஜீவனம்.2

வனைதல் : செய்தல், அலங்கரித்தல்  என்பது.

வாழ்நாளைச் சீராக்கிக் கொள்ளுதல்.

சீர் நிற்றலே சீணித்தல் என்றாயிற்று அறிக, மகிழ்க.


குறிப்புகள்

1  பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை. பிறரும் கூறியுள்ளனர்.  எமது

ஆய்வும் இம்முடிவினதே.

2  உயிர் > யிர் > ஜீ.  > ஜீவன், ஜீவன.  இலங்கை ஞானப்பிரகாச அடிகளார்.

3 வற்றல் > வத்தல்.  வத்தச்சி என்ற பேச்சு வழக்கும் காண்க.

தொற்றல் > தொத்தல். ( தொற்றிக்கொண்டு நடப்பவன்).

உடற்குறை உடையோர்க்கு முன் காலங்களில் யாரும் அவ்வளவு இரக்கம்

காட்டுவதில்லை என்று அறிகிறோம்.


தட்டச்சுப்பிழைத் திருத்தம் பின்

வியாழன், 8 அக்டோபர், 2020

புட்பக விமானம்.

 புள் என்பது பறவை என்று பொருள்படும்.

புள் போல  மூக்கு, வால், பக்கங்கள் அமைவுண்ட ஒரு விமானம்தான்

புள் + பகம் + விமானம் >  புட்பக விமானம்.

பகம் எனின் பகுதி(கள்).

விழுமிய அளவுகளை உடைய ஊர்தி விமானம்.

விழு+ மானம் = விமானம் ( இங்கு ழு குறைந்தது).

விழுமிய = சிறந்த.

மானுதல் - ஒத்தல்

மானு + அம் = மானம்.  அளவு.

மானம் வரின், மானம் உடையவன் என்ற தொடர்களில்,

மானம் ஒரு பெருமை குறித்தது. சமுகத்தில் போற்றப்படும் அளவுடன்

தானும் அளவொத்து இருப்பதே மானம். அடிப்படைப் பொருள் அளவு என்பதே.

புஷ்பத்தினால் செய்யப்பெற்ற வானூர்தி பறக்காது. மலர்கள் அலங்காரம் ஆகலாம்.

புதன், 7 அக்டோபர், 2020

தூரமும் தொலைவும்

 முன் காலங்களில் தொலைவைக் கணக்கிட சில வழிகள் இருந்தன.  ஆனால் தொலைந்து போய்விட்ட ஒரு பொருள் எட்டாத தூரத்துக்குச் சென்றுவிட்டதாக எண்ணி அது தொலைவை அடைந்துவிட்டது என்றனர். ஆகவே தொலைவு என்ற சொல்லுக்கு  "தூரம்" என்ற பொருள் ஏற்பட்டது. பண்டை மனிதன் இவ்வாறு உணர்ந்துகொண்டது ஒரு வகையில் அவன் சிந்தனைத் திறனைக் காட்டுகிறது. ஒரு நாய்க்கு அதன் இயமானன் ( எஜமானன்)  தொலைவிற்போய்விடின் ஊளையிட்டுக் கேட்டுவந்திடுவான் என்று நம்பிக்கொண்டிருக்கும்.

தொலைவைக் கணிக்க முற்பட்டுவிட மாட்டாது

ஒருவன் துரத்தப்பட்டு தொலைவிற் சென்றுவிட்டால் துரத்தியவனுக்கும் துரத்தப்பட்டவனுக்கும் உள்ள இடைவெளி தூரம் எனப்பட்டது. தூரம் அல்லது தொலைவு என்பதை இப்படியும் அறிந்துகொண்டனர். துர > துரத்து.  துர + அம் = தூரம். முதனிலை நீண்டு விகுதிபெற்ற தொழிற்பெயர். இல்லற வாழ்வு வேண்டாமென்று ஒருவன் தானே தொலைவிற் சென்றுவிட்டால்,  அதுவும் துறவு என்றே சொல்லப்பட்டது. இவ்வாறு கூறவே.  துர> தூரம்,  துற > துறவு என்பனவற்றின் தொடர்பு இவற்றிலிருந்து தெளிவாகிறது.

துருவு என்ற வினைச்சொல்லும் ஒருபுறம் தொடங்கி மறுபுறம் துளைத்துச் செல்லுதலைக் குறிக்கும்.

துள் > துளை. ( ஐ )

துள் > துருவு.   துள்> துர.

இவற்றுள் உள்ள உறவினை ஆய்ந்து தெளிந்துகொள்ளுங்கள்.


தட்டச்சுப் பிறழ்வுகள் பின்.