முன் காலங்களில் தொலைவைக் கணக்கிட சில வழிகள் இருந்தன. ஆனால் தொலைந்து போய்விட்ட ஒரு பொருள் எட்டாத தூரத்துக்குச் சென்றுவிட்டதாக எண்ணி அது தொலைவை அடைந்துவிட்டது என்றனர். ஆகவே தொலைவு என்ற சொல்லுக்கு "தூரம்" என்ற பொருள் ஏற்பட்டது. பண்டை மனிதன் இவ்வாறு உணர்ந்துகொண்டது ஒரு வகையில் அவன் சிந்தனைத் திறனைக் காட்டுகிறது. ஒரு நாய்க்கு அதன் இயமானன் ( எஜமானன்) தொலைவிற்போய்விடின் ஊளையிட்டுக் கேட்டுவந்திடுவான் என்று நம்பிக்கொண்டிருக்கும்.
தொலைவைக் கணிக்க முற்பட்டுவிட மாட்டாது
ஒருவன் துரத்தப்பட்டு தொலைவிற் சென்றுவிட்டால் துரத்தியவனுக்கும் துரத்தப்பட்டவனுக்கும் உள்ள இடைவெளி தூரம் எனப்பட்டது. தூரம் அல்லது தொலைவு என்பதை இப்படியும் அறிந்துகொண்டனர். துர > துரத்து. துர + அம் = தூரம். முதனிலை நீண்டு விகுதிபெற்ற தொழிற்பெயர். இல்லற வாழ்வு வேண்டாமென்று ஒருவன் தானே தொலைவிற் சென்றுவிட்டால், அதுவும் துறவு என்றே சொல்லப்பட்டது. இவ்வாறு கூறவே. துர> தூரம், துற > துறவு என்பனவற்றின் தொடர்பு இவற்றிலிருந்து தெளிவாகிறது.
துருவு என்ற வினைச்சொல்லும் ஒருபுறம் தொடங்கி மறுபுறம் துளைத்துச் செல்லுதலைக் குறிக்கும்.
துள் > துளை. ( ஐ )
துள் > துருவு. துள்> துர.
இவற்றுள் உள்ள உறவினை ஆய்ந்து தெளிந்துகொள்ளுங்கள்.
தட்டச்சுப் பிறழ்வுகள் பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக