By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
திங்கள், 5 அக்டோபர், 2020
சாதி, தொழில் சில கற்பனை உதாரணங்கள். நெல்லர், கடலையர்.
சாதி (ஜாதி)களை வகுத்தவர்கள் அரசர்களா பூசாரிகளா என்பது ஒரு கேள்வி. இது அவ்வந்
நிலப்பகுதிகளில் இருந்த நிலைமைகட்கு ஏற்ப, அரசனாகவோ அல்லது பூசாரிகளாகவோ
இருக்கலாம். கோயிலுக்கு வழங்குவதற்காக ஒரு கூட்டத்தார் எப்போதும் கடலை என்னும்
கூலத்தையே கொணர்ந்து கொடுத்துக்கொண்டிருந்தனர். பூசாரியும் அதைப் பெற்றுக்கொண்டார்.
அம்மனுக்கும் அதை ஆக்கிப் படைத்துத் தாமும் தம் குடும்பத்தினரும் வீட்டிலும் ஆக்கி
உண்டு மகிழ்ந்தார். வந்து பணிந்த பிறருக்கும் வழங்கினார். நாளடைவில் இவர்கள் கடலை
கொடுத்தோர் என்பதனால் "கடலையர்" என்று குறிக்கப்பட்டனர். இப்படிக் குறிப்பது ஒரு
சுட்டும் வசதிக்காகத்தான் என்றாலும் அது ஒரு சார்பினரைக் குறிக்க வழங்கும்
சொல்லாகிவிட்டது. இதற்குக் காரணம், நெல் க ொடுத்தோரிடமிருந்து இவர்களைப் பிரித்துச்
சுட்ட ஒரு தேவை இருந்ததுதான். இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு ஒரே மாதிரி நிகழ்வுகள்
அமைந்துவிடின், கடலையர் என்பது ஒரு சாதியாகிவிடும். தொடங்கிய தொழிலானது,
பிறப்பினோடு ஒட்டிக்கொண்டு பிறப்பின் அடிப்படை உடையதாக மாறிவிடும். இவர்கள் என்ன
சார்பினர் எனின், "கடலையர்" சார்பினர் என்றாகிவிடும். சார்பு - சார்பினர்; சார்பு
(பு விகுதி) > சார்தி ( தி விகுதி). இது இடைக்குறைந்து சாதி ஆகிவிடும். ரகர
ஒற்றுக்கள் ( ர் ) மறைதல் பெருவரவு. எம் இடுகைகளைப் படிக்கும்போது
குறித்துக்கொள்ளுங்கள். ஏற்றுக்கொள்வதா அல்லது கூடாதா என்பதை முடிவில்
செய்துகொள்ளுங்கள். பிற்காலத்தினர் இந்தக் கடலையர் பிறப்பினால் அவ்வாறு ஆனார்கள்
என்று எண்ணுவது இயல்பான ஒரு விளைவுதான். சொல்லும் கடலையர் > கலையர் என்றோ,
கடலையர் > கடயர் என்றோ, கடலையர்> கயர் > கயரி என்றோ வந்து தொலையும்.
இலத்தீன் மொழியாயின் கயருஸ் என்று திரிந்திருக்கும். சீனமொழியாயின் "கைருங்"
என்றிருக்கும். மலாய் மொழியில் கய்ராங் என்பது ( சீமாங் போல ) தோன்றக்கூடும்.
அவனவன் வாய்க்கிசைய வருமாயினும் சில விதிகள் மேல் எடுபடலாம். நெல் கொடுத்தோர்
நெல்லர் என்று பெயர் பெறுவது இயல்பு. எப்படியும் இதெல்லாம் காலப்போக்கில் திரியும்.
நாக்கு என்னும் உறுப்பும் உதடுகளும் காரணம். பூசாரிக்குப் பதில் கடலை அரசன் அல்லது
அவனது அதிகாரிகளிடம் இறுக்கப்பெற்றிருப்பின், இதெலாம் அரசு தொடர்பான நிகழ்வுகளும்
விளைவுகளாகவும் ஏற்பட்டிருக்கும். நெல்லர் உயர்வும் கடலையர் தாழ்வும் எப்படி
வந்திருக்கும்? நெல்லுக்கு அதிக விலை அரசு க ொடுத்தால் நாளடைவில் உயர்வு தாழ்வு
ஏற்படும். சில நாடுகளில் உயர்வு தாழ்வு ஏற்படவில்லை. இது மக்களையும் மனப்பாங்கையும்
பொறுத்ததாகும். கடலை கொடுத்தோர் தங்கள் சாதிப்பெயரை கடலை + அர் என்று
பிரித்தறிதலின்றி, கடல் + ஐயர் என்று பிரித்து, கடலாடு பிரபுக்கள்1 என்று கூறி,
மேனிலை கூர்தல் கூடும். எவையாயினும் எளிமையாகுவதில்லை. நெல்லர் கடலையர் என்ற
சொற்கள் புனையப்படவில்லை என்று தெரிகிறது. அதனால் இல்லாத சொற்களைக் கொண்டு
உணர்விக்க இவ்விடுகை முனைந்துள் ளது. நெல்லரி என்ற சொல் உள்ளது. நெல்லரி தொழுவர்
என்ற தொடர் புறநானூற்றில் (209) வந்துள்ளது. நெல்லரி - கைப்பிடி நெல்கதிர். நெல்
உழவு தொடர்பான சொற்கள் பல வழக்கிழந்து வருகின்றன. இற்றை நாளில் இவற்றைக் காப்பதும்
கடினமே. முயற்சி செய்க. திருத்தம் பின்னர். குறிப்பு: 1. பெரு > பெருமை; பெரு
> பெருபு > பிரபு ( திரிசொல் ). ஆகுபெயராய் பெருமை உடையவரை (ஆளைக்)
குறிக்கும். edits and paragrahing have been lost. (error) after posting.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக