விருச்சிகம் என்பது யாழ்ப்பாணப் பகுதிகளில் விரிச்சிகம் என்று எழுதவும் சொல்லவும் படுதலுண்டு, விருச்சிகம் என்பதன் மூலம் விரிச்சிகம் என்பதே.
இதற்குக் காரணம் தேள் விரிந்தபடி இருப்பதுதான், கொடுக்கை விரித்துக்கொண்டு ( அதாவது பேச்சு வழக்கில் விரிச்சிக்கொண்டு) இருத்தலால் இது விரிச்சிகம் எனப் பெயர்பெற்றது.
தமிழ்ப் பேச்சுவழக்கிலிருந்து பல சொற்கள் அமைக்கப்பட்டிருத்தலை நாம் நம் முன் இடுகைகளில் விளக்கியுள்ளோம். அவை அறிந்தோர்க்கு ஈண்டு கூறுவது உணர எளிதாகும்.
யார் பேசியது என்று தெரியாமல் ஒரு சொல் காற்றில் விரிந்து வருமானால் அதனை விரிச்சி என்று தொல்காப்பியம் கூறுமென்பதை நீங்கள் அறிந்து வைத்திருத்தல் கூடும். (தொல் பொருள் 58). இது விரி என்ற பகுதியும் சி என்ற தொழிற்பெயர் விகுதியும் சேர்ந்த சொல். பயில் > பயிற்சி , என்பது காண்க. சிறுசிறு விதைகள் போலிருக்கும் அரிசி என்பதும் சி விகுதிச்சொல்லே ஆகும். இதனை அரி என்பதுமுண்டு. விரிச்சிகம் என்பது விரிச்சி என்பதிலிருந்து அமைந்திருக்கிறது எனப் பிறர் சொன்னாலும் அதற்கு மறுப்பு எழுப்போம்.
விரி+சி + கு +அம் என்பது அமைந்த விதம் எனலாம், இது பேச்சுவழக்குத் திரிபினோடு ஒத்துநிற்பதே ஆகும்.
விரி என்பதே அடிச்சொல் ; ஆதலின் விருச்சிகம் என்ற வடிவம் பின்னர் அமைந்த திரிபு என்று புரிந்துகொள்ளுதல் எளிதாம், பல தமிழ் கற்பிப்போர் தாம் நினைப்பதே சரியானது என்று எண்ணித் திருத்தித்திருத்தி இறுதியில் விரிச்சிகம் என்பது விருச்சிகம் என்று அமைந்திருத்தல் தெளிவு.
விருத்தியுரை என்ற சொல்லிலும் விரிவு குறிக்க வந்த விரி என்பதை விரு என்று திருத்தியிருத்தல் நன் கு புலனாகின்றது. விரித்தியுரை என்பதே அடிச்சொல்லுடன் பொருந்தியது ஆகும்.
எனவே விருத்தி, விருத்தியுரை என்பன திரிசொற்களாகின்றன.
விரு என்பது உண்மையில் விரி என்பதன் திரிபே.
விர் என்பது மூலமாகவே,
விர் > விரி. விரிச்சி. விரிச்சிகம்.
விர் > விரு.
விருத்தம் முதலியவை.
விருத்தப்பா முதலியவை நீண்டகாலம் கீழ்மட்டத்தில் வளர்ந்து பின்னர் அவைக்களத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கக் கூடும். கீழ்மட்டத்திலிருந்து அவை வெளிமொழிகளுக்கும் பரவி யிருக்க, அவ்வேளையில் தமிழிலக்கியத்தில் ஒருவாறு இடம்பெற்றிருத்தல் வியப்புக்குரியதன்று.
அது புதியது என்று சிலர் கூறுவதற்கும் ஆதாரமில்லை.
புதுக்கவிதை முதலியவற்றுக்கு இன்னும் இலக்கணம் இயற்றப்படவில்லை என்பதையும் திரைப்பாடல்களுக்கு யாரும் இதுகாறும் இலக்கணம் உரைக்கவில்லை என்பதையும் நோக்கின் இது நல்லபடியாகவே புரியும் என்று உணர்க. எம்மை இதுவரை எதுவும் எட்டவில்லை.
முடிவாக, விரித்துக்கொண்டிருப்பதனால் விரிச்சிகம் எனப்பட்டது என்பதை அறிந்து மகிழ்க. விரித்திகம் > விரிச்சிகம் என த - ச திரிபு அமைதலும் கொள்ளலாகும்.
திருத்தம் பின்பு.