சனி, 23 ஜூன், 2018

கொடுவா மீன்

https://bishyamala.wordpress.com/2018/06/23/கொடுவா-மீன்/

https://bishyamala.wordpress.com/2018/06/23/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d/

கொடுவா மீனைப் பற்றிய ஒரு சொல்லாய்வு இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

வியாழன், 21 ஜூன், 2018

அடிமேல் அடியடித்தால்

அடிமேல் அடியடித்தால் அம்மி நகருமென்றார்
கடிமேல் கடிகொடுத்தால் இம்மியே  னும்கிழியும் 
கடிநாய் அறிந்தவற்றைக் கள்வர்  அறிந்தவரே
ஒடிவார் தமையொடிக்க உள்ளுவார் வல்லவரே.

இ-ள்:

நம் மென்பொருள் கள்வர்கள் பற்றிய கவிதை இது.
இங்கு ுு   தரப்பட்டுள்ள பழமொழிகள் படி, அவர்கள் 
எல்லாம் அறிந்தவர்களே ஆவர்.  எத்தனையோ வகையில் 
இடையூறுகளை விளைவித்துக்கொண்டுள்ளனர். 
கடைசியாக அவர்கள் எம் எழுதிகளைச் செயலிழக்கச்
செய்துள்ளனர்.  எனவே முன்வரைவுகளும் சரிபார்த்தலும்
இயலாதவை ஆகின்றன.  

நாய்போல் கடித்துக்கொண்டிருந்தால் ஓர் இம்மியேனும்
கிழிய வேண்டுமே. அப்போது தசையைத் தின்றுவிடலாம்
என்று நாய்கள் நினைப்பதைக் கள்வர்களும்  தெரிந்துதான்
வைத்துள்ளனர்.  ஆனால் ஒடிந்துவிடக் கூடியவர்களை
ஒடித்துவிடுபவர் வல்லவர்தாம் என்று சொல்லவேண்டும்.

புதன், 20 ஜூன், 2018

எழுதி மென்பொருள் படுத்துக்கொண்டது.......

எம்  "சொல்"  எழுதி  எதையும் சேமிக்கமுடியாது  என்று போராடிக்கொண்டிருக்கிறது. தமியேம் யாது செய்வேம் இப்போது?

கணினியை நிறுத்தி வைக்குமுன் உங்களுக்குத் தெரிவிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.  அது கட்டுரையாக வராமல் ஒரு கவிதையாக வந்துவிட்டது. கண்டமாதிரி வரைந்துள்ளேம்,  கண்டுமகிழவும்.

சொல்லென்னும் எழுதிக்குச் சோர்வு தோன்றி

சூழ்ந்தெழுதும் அனைத்தையும் சேமிக் காமல்

ஒல்லேதான் குவித்திட்ட குப்பை மேட்டில்

ஒதுக்கியவை அழித்தற்கு முன்னிற் கின்ற

நல்லதலா நடப்பைத்தான் மேற்கொண் டாடி

நலிவிலெமைஅழுத்திற்றே என்செய்கோ யாம்?

வல்லவொரு கணினிசார் மேதை தன்னை

வரவழைக்கக் கலிதானும் வந்த தாமோ?


எழுதி :  எழுதும் மென்பொருள்
சொல்லென்னும் எழுதி:
The word processor known as  MS  WORD
 சோர்வு:  failing to function; giving error messages.
சூழ்ந்து : யோசித்து
ஒல்லே = விரைந்து
நலிவு :  துன்பம்
செய்கோ : செய்வேம்
கலி :  பேரிடர்