ஈழவர்
என்ற பெயருடைய கூட்டத்தினருக்கு
"இல்லத்துப்
பிள்ளைமார்(
( கள்)
என்பது மறுபெயர்..
இவர்களுக்கு நாடார்
என்ற பெயரும் உண்டு என்றும்
சிலர் நினைக்கின்றனர்.
இல்லம்
என்பது வீடு என்னும் பொருளது.
இது உண்மையில்
இடம் என்றும் பொருள்படும்.
அப்பொருளில் அது
இன்னும் தமிழில் வழங்குகிறது.
கண்ணில் கருமணி
இருக்கிறது என்ற வாக்கியத்தில்
இல் என்பது
இடம் குறிப்பதை அறியலாம்.
இல் என்பதே இன்
என்றும் திரியும்.
அதுவும் இடப்பொருளையே
உள்ளடக்கி நிற்கிறது.
"கண்ணின் கருமணி"
என்பதில் இன்
என்பது இடத்துரிமை காட்டுகிறது.
கண் என்னும்
இடத்திற்கு உரிய கருமணி என்று
அதனை விரிக்கலாம்.
இல் என்பதே
இழ் என்று மாறிற்று என்று
தெரிகிறது.
அப்படி மாறி ஒரு
விகுதியாகி,
தம்+
இழ் =
தமிழ் என்றானது
என்று கொள்ளலாம்.
அப்படியானால் தமிழ் என்ற சொல் தமது
இடத்து மொழி என்று பொருள்படும்,.
தமில்
என்பதே தமிழ் என்று திரிந்தது
என்பது அறிஞர் கமில் சுவலபெல்
அவர்களுடைய
கருத்து.
இதுவே தேவனேயப்
பாவாணரின் கருத்துமாகும்.
தமிழ்
என்ற சொல்லுக்கு மணிக்கணக்கில்
பொருள்சொல்லும் திறமை உடையவர்
பெரும்புலவர் கிருபானந்த
வாரியார் அடிகள்.
அவர் பொழிவைக்
கேட்டுப் பாரதிதாசனார்
பெருமகிழ்வு எய்தினார்,
பாராட்டினார் என்ப.
ஆய்வாளர் பிறரும்
பல்வேறு சொல்விளக்கங்களை
முன்வைத்துள்ளனர்.
ஆனால் அவை முன்
கூறப்பட்ட கருத்துகள்.
எனவே சுவலபெல் -
பாவாணர் கருத்து
நமக்கு இற்றை முடிபு என்று
கொள்ளவேண்டும்.
காரணம் முன் கருத்துகள்
ஏற்புடையவாகக் கருதப்படவில்லை.
இல் என்பதே
இழ் என்று திரிந்தது ஆகையினால்
இழ்> ஈழ்
> ஈழம்
என்றும் இழ் >
ஈழவர் என்றும்
திரிந்தது என்று கொள்ளவேண்டும்.
எனவே ஈழம் எனின்
வாழ்விடம் என்றும்,
ஈழவர் எனின் இடத்தவர்
என்றுக் பொருள்படும்.
இழ் > ஈ ழ் முதனிலைத் திரிபு .
இல் என்பதில் திரிந்த இன் என்னும் இடைச்சொல், இந்தோ ஐரோப்பிய மொழிகளிலும் பரவி வழங்குகிறது. இடப்பொருளே குறிக்கிறது. ஆங்கிலத்தில் இன் என்பது இடம் காட்டும் இடைச்சொல் ஆகிறது. (in)
இல் என்ற
சொல் இகரச் சுட்டடியாகத்
தோன்றியது.
ஆகவே தமிழாகும்.
சுட்டடிச்
சொற்கள் சீன மொழியிலும் உள.
ஈ என்பது இவன்,
இவள் என்பதாகும்.
இய (ia) என்ற மலாய்ச்
சொல்லும் அதிலிருந்து திரிந்த
டிய (dia) என்பதும் இதன் வளர்ச்சியாம்.
ஆஃபிரிக்காவலிருந்து
இடம்பெயர்ந்த சீனர்கள்,
தெற்காசியா வழியாக
தென்கிழக்காசியா வந்து
அதன்பின் சீனாவில் தங்கினர்
என்று மாந்த வளர்ச்சி நூல்
கூறுகிறது. 1
ஆகவே
சுட்டடிச் சொற்கள் இம்மொழிகளில்
காணப்படுதல் இயற்கையே ஆகும்.
இப்போது:
இல்லத்துப்
பிள்ளைமார் =
இடத்து மக்கள்.
ஈழவர் =
இடத்து மக்கள்
தமிழ்
(இழ்)
- இடத்து மொழி.
ஈழம் =
வாழ்விடம்.
என்றபொருளாகின்றன.
நீங்கள் மறுப்புரை வழங்கலாம் .
---------------------------------------------------------------------------------------------
According to the newspaper, a research team led by Jin Li (金力 ) of Fudan University in Shanghai .
But Jin and his fellow researchers found that early humans belonged to different species, of which only the East African species developed into modern humans. About 100,000 years ago, some of those humans began to leave Africa, with some people moving to China via South and Southeast Asia, Li said. (There were other contacts as well )