புதன், 11 மே, 2016

very good rain வந்தமழையில் பசுமை

தூங்கிப் போன இலைகள் சோர்வு நீங்கிப் போனவே
வான்கறுத்து  வந்தமழையில் பசுமை காணவே.

சாலை பெற்ற பொழிவில்  தரையில் ஆவி மேவுமே
ஏழைத் தவளை எழுந்து கத்தி உயரத் தாவுமே

காயும் புல்லில் திவலை துள்ளக் கட்டெ   றும்புகள்
மேய எண்ணி வரிகளூரும் உணவு நம்புமே.

தண்மை அறையில் தங்கிச் சோர்ந்த கவின்கு மாரிகள்
உண்மை தானோ என்றுவானை வாழ்த்திக் கூறினார்.

ஆறு குளங்கள்  சேறு நீங்கி  நீரின் பெருக்கிலே
யாரும் நோக்கி மகிழும் வண்ணம் நடை  சிறக்கவே.



போனவே -  போயினவே   (யிகரம்  தொக்கது).
காயும்  -  மழையின்றிக் காயும். 
 திவலை - பின் வந்த மழையினால்  நீர்த்துளிகள் 
வரிகள் ஊரும் - வரிசைகளாய்  ஊரும் 
உணவு நம்புமே  - உணவு வரும் என்று நம்புமே.
தண்மை airconditioned   -  referred,
நடை - நீரின் ஓட்டம் .(நீரின் பெருக்கால் ஏற்பட்ட நடை )


செவ்வாய், 10 மே, 2016

இராமன் ஆண்டாலென்ன‌ இராவணன் ஆண்டாலென்ன;

இராமன் ஆண்டாலென்ன‌
இராவணன் ஆண்டாலென்ன;
வராதது ஒன்றும் வரப்போவதில்லை;
வருவது என்றும்  வந்தே தீரும்.

\எனவே பலர் சொன்னபோதிலும்
மனமோ அதைக் கேட்கவில்லையே!

பிலிப்பைன்சில் பொதுத் தேர்தல்  அதைக்
களிப்போடல்லவோ கவனித்துக்கொண்டிருக்கிறோம்!
பலிப்பவை இனித் தேர்தல் வாக்குறுதிகள் ஆம்,

வளரும் பொருளியல் உலகிற்கு\
ஹிலரி கிளின்டன் ஏற்ற தலைவரென்று
மலராவோ எம் தோட்டத்துப் பூக்கள் இனி?\\\

அந்தக் கவலையும் கூட எனது
சொந்தக் கவலையாகிவிட்டதே மனத்தில்.

போனால் போகட்டும் போடா என்றனர்
போனது போகட்டுமே
வருவது வரட்டுமே
பிறங்கொளி மேனிப்  பூமியின் மன்றில்
உறங்கிடு    வோம் ஒரு கவலையு மின்றி.

அனைத்தும் வாழ்க....

திங்கள், 9 மே, 2016

ஏன் நான் பிறக்கவில்லை

ஏன் நான் பிறக்கவில்லை ‍‍ === என்
இயற்றமிழ் ஏய்ந்திடு இன்புகழ் காலத்தில்



பல்புகழ் நாட்டியவன் ‍‍‍== இயற்
பைந்தமிழ் ஓங்கிய கல்விதொல் காப்பியன்
வெல்தரு மண்திருவோன் === அவை 1
விளங்க வழங்கு நலங்கெழு நாட்களில் (  ஏன் 

தெள்ளு தமிழ்முனிவன்  ‍‍=== ஒரு
தெய்வப் புலவனென் றிவ்வுல கேத்திடும்
வள்ளுவன் செய்திருவாம் === குறள்
வந்துதிர்ந் திட்டபொன் செந்தமிழ் வேளையில்  (ஏன் 

பாண்டி நெடுஞ்செழியன் ‍‍=== முன்
பாவலர் மேலவர் மாங்குடி யார்புனை3 
ஈண்டிய4 பாடல்களை ==== பாட  
 இருசெவி கேட்கவும்
 கண்களும் காணவும்  (ஏன் 

Notes:
1.அவை =  சபை ,மன்றம்
2.வென்று தந்த நிலத்தின் திருவினை உடைபோன் ‍ நிலந்தரு திருவிற் பாண்டியன்:  
3பாண்டியன் நெடுஞ்செழியன் அவைக்களத் தலைமைப்புலவர் மாங்குடி மருதனார்,
4 ஈண்டிய -  மிகுந்த ,  நிறைந்த 

This does not appear in proper format on my screen,  Hope your screen view is acceptable.Edit probs