வியாழன், 15 மே, 2014

வெற்றிலை (தொடர்ச்சி ) வேறு பெயர்கள்.

இது பற்றி முன் எழுதியதை இங்குக் காணலாம் "

http://sivamaalaa.blogspot.com/2014/05/vetrilai.html

வெற்றிலைக்கு வெற்றிலை என்பது தவிர வேறு பெயர்கள் உண்டா என்பதும் அறியத் தக்கது .

கொஞ்சம் சருகு போடுவதற்குக் கிடைக்குமா என்று கேட்பதுண்டாம்.  சருகு  என்பது காய்ந்த இலையைக் குறிப்பதுடன் வெற்றிலையையும் முன்காலத்தில் குறித்துள்ளது.  இது காய்ந்த இலையைக் குறித்ததால் முன் காலத்தில் காய்ந்த வெற்றிலைகள்தாம் கிடைத்தனவோ என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது. இதற்கான விடைகள் இப்போது  உடன் கிடைக்குமென்று தெரியவில்லை ,

சருகு என்ற  சொல்லுடன் sireh  என்ற வெற்றிலை குறிக்கும் மலாய்ச் சொல்  ஓரளவு  ஒலி ஒற்றுமை உடையது. சருகு என்பதில் "கு" என்பது சொல்லாக்க விகுதி.  மீதமுள்ள "சரு"  என்பது சிரே    ஆவது  எளிதாம்.

வெற்றிலைக் கொடி   குறிக்க  "சருகுக் கொடி" என்று  கேள்விப் பட்டதில்லை.   சருகு இலை,  சருகுக்  காம்பு என்ற வழக்குகள் இல்லை என்று நினைக்க வேண்டியுள்ளது.

வெற்றிலைக்  கொடி என்று "இலையை "   விட முடியாத நிலை மொழியில் இருப்பதால், மரபுக்கு மாறாய் சொல் அமைதல் காண, வெற்றிலை வெளி நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது என்று சொன்னால், அது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

வேம்பு ‍  வேப்பிலை ‍  வேப்பெண்ணெய்.

வேப்பிலை மரம் அன்று.  தவறு.

வெற்றிலை ‍  வெற்றிலைச் கொடி  வெற்றிலை காம்பு.  இலையைச் சொல்லித்தான் கொடி காம்புகளைச் சொல்லவேண்டியுள்ளது.

வெறு + இலை = வெற்றிலை.  வெறுச் கொடி, வெறுக் காம்பு என்ற வழக்குகள் இல்லை.

வெற்றி + இலை என்பது வெற்றிலை என்று மருவிற்றென்பர். திருமணப் பேச்சுகளில் வெற்றிக்கு அடையாளமாக, வெற்றிலை ‍பாக்கு மாற்றிக்கொள்ளும் காரணத்தால். இந்த வழக்கம் மலாய் மக்களிடமும் உள்ளது.

தைவான் முதலிய இடங்களிலும் தென்கிழக்காசிய பிற நாடுகளிலும் வெற்றிலைப் புழக்கம் உண்டு.  சீன அம்மனுக்கு வெற்றிலை படைப்பதுண்டு.

வெற்றிலை ‍ நல்லெண்ணெய் உருக்கி உண்டால் மரணம் ஏற்படுமென்கிறார்கள்.
 வெற்றிலை விடமாகிவிடும்.  சித்த வைத்தியர்களைக் கேட்டறியவும்.

 will edit later

    

மக்களாட்சி மலர் நாடு

மக்களாட்சி மலர் நாடு  என்றபெயர் வேண்டும்
மக்களிடம் அதிகாரம் தந்தபுகழ் வேண்டும்!
தக்கதொரு தலையமைச்சர் அவர்களுக்கு வேண்டும்
தமக்குரியர் மேலெவரும் கைவைத்தால் குற்றம்.
பக்கலொரு படைத்தலைவர் துணை நிற்றல் வேண்டும்
பணிகளிலே அவர் மூக்கை நுழைத்தாலோ கூச்சம்!
மிக்கவொரு முறைமன்றம் அதைச்செய்தல் வேண்டும்
மேலிறுதி அதிகாரம் அவர்களுக்கே வேண்டும்


மேலெவரும்   -   மேல்  எவரும்.   பக்கலொரு  --  பக்கல் ஒரு  :  பக்கத்தில்  ஒரு மிக்கவொரு -   அதிகாரம்  மிகுந்த .    .முறை மன்றம் -  நீதி  மன்றம் .   மேலிறுதி  -   supreme.  .



another council name

இனி, அம்பலம் என்பதை ஆய்வு செய்வோம்.

இந்தச் சொல்லில் இறுதியாய் நிற்பது "அம்" என்னும் விகுதி.  இதைப் பிரித்து எடுத்துவிட்டால், மீதமிருப்பது அம்பல் என்பது.

அம்பல் என்று ஒரு சொல் உண்டெனினும், அது மலரும் நிலையில் அல்லது அதற்குச் சற்று முந்திய நிலையில் உள்ள  மொட்டினைக் குறிக்கிறது.  அது வேறு சொல்.

இங்கு நாம் கருதும் சொல், அம்+ பல் என்று பிரியும்.

இவற்றுள் பல் என்பதைப் பார்ப்போம். பல் என்பது பன்மை அல்லது பலர் என்று பொருள்தரும் சொல்.

கூடுவோர்  பலர் என்பதே இதனால் பெறப்படுவது. ஆகவே ஊருக்குள் பலர் கூடும் இடமாயிற்று. அறையில் நடந்தது அம்பலத்துக்கு வருவதா என்று கேட்கப்படுவதிலிருந்தும்,  "அம்பலமாயிற்று" என்ற வழக்கிலிருந்தும் பலர் கூடி ஒன்றை அறியுமிடம் என்ற பொருள் அறியப்படும்.

முன் நிற்கும் அம் என்பதில்  "அ" என்ற சுட்டு உள்ளது. "அந்தப் பலர்கூடும் இடம்"  என்பது பொருள்.  அப் பல் என்று வல்லெழுத்தாக வரற்பாலது அம்பல்  என்று மெலிவுற்றது. சித்து> சித்தன், சித்து > சிந்தனை என்று மெலிதல்போன்றதே இது. இப்ப்டி மெலிந்து வரும் சொற்களின் பட்டியல் ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள் .

அன்றியும் முன் நிற்றல் உரிய  "அம்" என்பது அழகும் குறிக்குமாதலின், அம் இருபொருள் தருவதென்பதும்  ஆம்.

இறுதி அம், சொல்லாக்க விகுதி.

அவை என்பது சுட்டில் வளர்ந்த சொல்லாதல் போலும் இதுவும் சுட்டடிப் பிறப்புச் சொல்லே. 

இதற்குப் பிற பொருள் பின் வளர்ந்தவை.  அவற்றுள் "கோயில் " என்பதும் அடங்கும்.