திங்கள், 21 ஏப்ரல், 2014

தேவை & தேள்வை

தேவை என்ற சொல்லைச் சிலர் தேள்வை என்றே சொல்வர்.

இவற்றின் தொடர்பினை ஆய்வு செய்வோம்.

நீள் என்ற சொல்,  நீடு எனறும் தோன்றும்.

நீள் + அம் =  நீளம்;

நீடு + அம் =  நீட்டம்.

நீள் =  நீடு.  நீளுதல் ‍    நீடுதல்.   நீள் >  நீடு.

எனவே,  தேள்  >  தேடு.   

தேவை என்பதில் வை என்பது விகுதி. --- மூலம்  தே என்பது.

தே >  தேள் > தேடு.

தே+ வை = தேவை.

தேள் + வை = தேள்வை.

எனவெ, தேள் எனபதில்   ளகர  ஒற்று  குறைந்திருக்கலாம். தே என்றாகியிருக்கலாம்.

அல்லது தே என்பது ள் பெற்று நீண்டிருக்கலாம்.

எனவே,  தேள்வை என்பதும் ஏற்றுக்கொள்ளற்பாலதென்போம். 

பேய்விரட்டும் மந்திரச்சொல்

பின்னல்பாய்  தேங்காய்கள் இவற்றை வைத்துப்
பேய்விரட்டும் மந்திரச்சொல் பிசகா நிற்ப‌
முன்னிவரும் வானூர்தி முயன்றார் காண
முனிவுகொண்ட மக்கள்சிலர் முழுவீச் சாக
என்ன இது! ஏய்ப்பதென எதிர்ப்புக் கொண்டார்
எங்கு சென்று வீழ்ந்ததுவோ எழில்வா  னூர்தி,
அன்னநிகழ் வோடிவரும் அயர்ந்தார் என்றே
அனைவரும்ஓய்ந்  திருந்தார் இவ்  அழகு நாட்டில். 

சின்னாட்கள் முன்பாகச் சிங்கு (1)  மாண்ட‌
செல்வழியே சேர்சாலை இடத்தில் பேய்கள்
இன்னும்தாம் இருப்பவையே என்று கூறி
இவர்மீண்டும் மந்திரம் செய்  நிகழ்வில் நின்றார்
மின்னொளிபோல் புகழ்கூட்டும் செய்கை ஈண்டு
மீள இவர் ஆகாதே என்பர் பல்லோர்
பன்னுமொரு செய்திதனைப் படித்து  நீங்கள்
பாரில்மந்   திரவாதத் துண்மை சொல்வீர்.  


Raja Bomoh spouting mumbo-jumbo again

Magic to chase away spirits

Note:  Recently there was a road accident in which a famous lawyer Kirpal Singh(1)  died.  Now a bomoh (Malay magician) claims that the accident was caused by spirits which he wanted to drive way with his magic.
The poem is on this topic  To get a clearer picture, you may wish to also read the news at the link above.


On a related topic:
http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_18.html




ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

வருத்தகம் II

இத்தகைய (வரு-  வர  -  வர்  )    என்ற முதலசைகளின் மாற்றமும் மிகவும் தேவையானதே   ஆகும்.   காரணம்  "வரத்து > வரத்தகம்" என்ற நிலையில்
அஃது  பொருள் ஊருக்குள் வருதலையே  குறிக்கும் இயல்பு உடையதாய்த் தோன்றுவதே

அதை .  "வர் "   என்று மாற்றினால்  பொருள் உள்வரவும் வெளிச்செல்கையும்  
ஆகிய இருவழி நிகழ்வுகளையும் குறித்ததாக அமையக்கூடும்.  சொல்லைப் பயன்படுத்துவோர் இச்சொல்லின் பொருள்   உள்வரு  பண்டங்களுக்கே உரியது போன்ற உணர்வினை   எளிதில் மறந்து மனத்  தடை யாதும் இன்றிப் பயன்படுத்தும் வழி கோலப்படும்
.
மேலும்   வரு> வர்  என்னும் திரிபு பேச்சில் இல்லாததன்று   "வர்ரியா ",   "வர்ரான்"  ,   "வர்ராள் "  "வர்ராங்க"   என்று மடை  திறந்தன்ன திரிபுகள் உள்ளனவே.

வர்த்தகம் என்பது ஓர் அழகிய தமிழ்ச்சொல். ஆய்ந்துணர அது தெளிவாம்.