வெள்ளி, 4 ஏப்ரல், 2014

தமிழ் - சமஸ்கிருத நூல்கள் கூறுவது - குமரி பற்றி

குமரிக்  கண்டத்தில் வாழ்ந்ந்து  பின் கடல்கோள் காரணமாக நாவலந்தீவில் (India)  குடியேறிவிட்ட விலங்குகட்கும்  ஆப்பிரிக்க்க் கண்டத்தில் வாழ்ந்த விலங்குகட்கும் தொடர்புண்மையால்  குமரி பற்றித் தமிழ் - சமஸ்கிருத நூல்கள் கூறுவது வன்மை யடைகிறது.. 
இஃது மேலும் ஆராய்ந்து ஆறியத்தக்கது. இந்தியச்  சிங்கங்கட்கும்  (அரிமாக்கள்) ஆப்ரிக்கச்  சிங்கங்கட்கும்  உள்ள அரத்தத்  தொடர்பு  இப்போது  அறிவியல் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளதுபிற்காணும்  செய்தியின் மூலம்  தெளியக்  கிடக்கின்றது.


Extinct Barbary Lions of Africa Could be Back to Life SoonAn extinct species of lions of North Africa may soon be resurrected as scientists have found the animals' close genetic links in Indian lions. DNA tests have revealed that Indian lions are closely related to Barbary lions, according to a new research published in the journal BMC Evolutionary…

தட்சிணை etc

தாட்கணியம்  என்பது   தாட்சணியம்  (தாக்ஷண்யம்)  என்றாயது கண்டோம்.  க <> ச என்பன  ஒன்றுக்கொன்று பதில்நிற்பு (substitution)  மேற்கொள்ளத் தக்கன என்பதையும் இத்தகைய  திரிபு ஏனை   மொழிகளிலு முண்டென்பதையும் கூறினேன்.  இப்போது உங்களுக்குத் தெரிந்த சொற்களிலிருந்து சில உதாரணங்கள் காட்ட முனைகின்றேன். ( உதாரணம் :  உது ‍= முன் நிற்பது.  ஆர் ‍=  நிறை(வு). அணம் =  தொழிற்பெயர் விகுதி.  அது இது உது என்பன சுட்டுக்கள்.)

தக்க இணை >  தக்கிணை  >  தட்சிணை.  (தக்சிணை,  தக்ஷிணை),

தக்க பரிசு அல்லது கொடை என்று பொருள்.   எ-டு   :  குரு தட்சிணை,  வர தட்சிணை.

ந‌குதல்  =  ஒளிவிடல் .There are also other meanings.

நகு +திரம் = நக்கத்திரம் >   நட்சத்திரம்.

பகு +அம்  =  பக்கம்  > பட்சம்   (பக்ஷம்)

மொழி முதலாகவும்  வரும்.( அதாவது சொல்லின் முதலெழுத்தும் இப்ப‌டி மாறலாம்.)

சேரல்  >  சேரலம்  >  கேரளம்.

 மலையாளிகள்   வேறு திரிபுகளைக்  காட்டுவதுண்டு.

வியாழன், 3 ஏப்ரல், 2014

தாட்சணியம்

தாட்சணியம் என்ற பதத்திற்கு நேரான ஒரு சொல் இந்தோ ஐரோப்பிய மொழிகளில் வழங்குகிறதா என்று தேடிப் பிடிக்கவேண்டும். சொல்லையும் சொல்லின் ஒலியமைப்பையும் நோக்க அது முற்றிலும் இந்தியச் சொல் என்பது புரியும்.

இதில் ஒரே எழுத்துமட்டுமே திரிந்து நிற்கின்றது.  க என்ற எழுத்து ச என்று மாறியுள்ளது.

இப்போது தாட்கணியம் என்று பிற்செலவு (  reverse     ) மேற்கொள்வோம்.

இதைப் பிரித்தால்  தாள் + கு + அணி + அம் என்றாகும்.

அம்மையின்  அல்லது தேவியின் தாள்களுக்கு ( இணையடிகட்கு) அணியாக  ‍  அழகாக விளங்குவது  எது ?   அது இரக்கமே ஆகும்.  எந்தக்  காலணியை அவளுக்குப் பூட்டினும்,  அவ்வணி பற்றனுக்கு (இறைப்பற்றாளனுக்கு அல்லது  பகதனுக்கு ) வழங்கப்படும்  இரக்கத்தை அடிப்படையாகக்  கொண்ட அருளையே குறிப்பதாகும்.

இங்ஙனம், தாட்கணியம் >   தாட்சணியம் என  இச்சொல்லுக்கு தயை  செய்தல்  என்ற பொருள் எற்பட்டது.

ககரம் சகரம் ஒன்றுக்கொன்று  மாறாக  நிற்கவல்லவை. பல உலக மொழிகளில்  க ‍ > ச திரிபு பெருவரவு ஆகும்


Notes:

அணியம் -  may also be interpreted as "readiness"  - i.e., readiness to come to help. .