திங்கள், 31 மார்ச், 2014

மேனன் மேனோன் சொல்லாக்கங்கள்

மேல் என்பதினின்று மேனன் வரை என்பதில் சொல்லாக்கங்கள் சிலவற்றைக் கண்டோம். மேனோன்  என்பதுமதே!

கேரளம் (<சேரலம் ) சற்று விரிந்த கடலெல்லை கொண்ட  நாடு  (இப்போது  மாநிலம்).  அரபு தேயத்திலிருந்து வந்த வணிகர் குழுக்களிடத்து வேலைக்கமர்ந்த உள் நாட்டினரைக்  கண்காணிக்க . மேல்பார்க்க மற்றும் கணக்கெழுத  எழுதப் படிக்கத் தெரிந்த  உள் நாட்டினரே நேமிக்கப் பட்டனர். இவர்கள்  (ஒவ்வொருவரும் )   மேலோன்  என்றழைக்கப் பட்டனர்.   இச்சொல்லே மேனோன் என்று முறைப்படி திரிந்தது.

லகர னகரத் திரிபுகள் இயல்பானவை.  (என் பல இடுகைகளையும் படித்து இன்புறுங் காலை ஒரு குறிப்புப் புத்தகத்தில் பட்டியலிட்டுக் கொண்டால் பின் ஐயம் எழாது.)

மேனன் என்பது மேலன் என்பதன் திரிபே.

மேனன் என்பது பின் ஒரு சாதியாய் முகிழ்த்து எழுந்தது.  ஒவ்வொரு தொழிலில்  ஈடுபட்ட குழுவினரும் ஒரு சாதியினராய் மாறியது இந்தியாவெங்கும் காணலாகும் ஒன்று.    பஞ்சாபு மானிலத்தில் தண்ணீர் தூக்கி வீடு வீடாகக் கொண்டு கொடுத்தவர்கள் தண்ணீர் தூக்கிச் சாதி யானது போல.   (water carriers)

மெனா என்பது ஒரு  சமஸ்கிருதச் சொல்.  இது பெண்,   பெண்விலங்கு    மற்றும்  பேச்சு என்றெல்லாம்   பொருள் தரக்கூடியது.   இதிலிருந்து சொல் அமைய வாய்ப்பில்லை . இதை விவரிக்க (விரித்து வரிகள் செய்ய) முற்படவில்லை.












ஞாயிறு, 30 மார்ச், 2014

மேலிலிருந்து மேனோன்வரை

இப்போது "மேல்" என்பதனோடு தொடர்புடைய சில சொற்களைக் கவனித்தின்புறுவோம் வாருங்கள்.
மே   >  மேல்,   அல்லது   மேல் > மே
மே ‍>  மேகம்  (வானத்தில் மேலே ஊர்ந்து செல்வது).  (மே+கு+அம்).

பழந்தமிழ் நூல்களில் இது பெரிதும் வழக்குப்பெறாதொழிந்தது  எனினும் பேச்சு மொழியில் இன்றுகாறும் நிலவுகிறது. தமிழினோடு தொடர்புடைய பிற அண்டை மொழிகளிலும் வழங்குவதாகும்மே என்ற அடிச்சொல் இருக்கும்போது அது தமிழன்று என்று எங்ஙனம் தீர்மானித்தனர் தமிழாசிரியர்நமக்குக் கிடைத்த தமிழ் நூல்கள் (சங்க இலக்கியங்கள் முதலியவை ) சிலவேசில ங்கப்  புலவர் பேரால் ஒன்றிரண்டே பாடல்கள் கிடைத்துள்ளன.
வாழ்நாள் முழுமைக்கும்  இரண்டே பாடல்கள் தாம் பாடினாரா? ‍‍என்றால்    ஆயிரம்    இரண்டாயிரம்  பாடியிருப்பார்நம்  கைக்கு வந்தவை  இரண்டுதாம் என்றுதான்  பதில் சொல்ல வேண்டியிருக்கும்.    பல ஒழிந்தன.

எனவே எழுதப்பட்ட நூல்களில்  இல்லாதவை தமிழன்று  என்று எளிதில் முடிவு கட்டமுடியாது.

சில   பேச்சு வழக்குச் சொற்கள் -- 


மேல் என்பது பேச்சில் உடம்பையும் குறிக்கும்.

"மேலிலெல்லாம் கொப்புளமாக உள்ளது" என்பர்இதில் மேல் = உடம்பு.

மேல் > (மேலி ) > மேனி.   லகரம்  னகரமாய் மாறும்மேலி என்ற இடைப்பட்ட  சொல் மறைந்தது.

மேனி மினுக்கி =  >  மேனாமினுக்கி.

மேல என்ற சொல் தொல்காப்பியத்தில் மேன என்று வந்துள்ளது.

மேலோன் ‍  >  மேனோன்

இனி மேனோன்,(1) மேனன் பற்றி அடுத்த இடுகையில்  தொடர்வோம்.

editing is reserved.





வெட்டப்படுமுன் விலகிச்செல்ல‌..............

வெட்டப்படுமுன் விலகிச்செல்ல‌
கட்டிக்கொண்டவளுக்குக் கருத்துவர வில்லையோ!
வெட்டப்படுவதும் உன்னாலென்றால்
விழை சொர்க்கமும் அதுவேயென்று
வேண்டிக்கொண்டு நின்றவளோ?

ஆயிரம் ஆண்டுகளின் முன்னே
அரிய மணச்சடங்குகள் நிறுவினரே!
ஆயிரம் ஒடிவிட்டதாலே
அந்த உட்பயிர் வாடிவருகிறதோ?
புதுமை வதங்கிவிட்டதோ!

திருமணமே வேண்டாமை
தெளிந்த பாதையோ...!

சேர்ந்தால் வாழாமையேல்
பிரிந்தால் பிழைத்தோடிவிட‌
வழியதோ! விழிவைப்ப்பாய் தங்காய்.

Written last year after a murder incident. where the husband, who married her according to rites and lived with her happily for a while finished her off...............shocking relatives and friends and the country at large!