வியாழன், 20 மார்ச், 2014

சாதித்தல்

"நிலை பெறச் செய்தல்" என்பது,   உண்மையில் கீழே விழுந்துவிட்டதை  நிமிர்த்தி நிற்கச் செய்தல் என்ற செயலினின்று எழுந்த சொல்லாக்கமாகும்."  அடுத்து,   ஒருவர் நிற்கச்  செய்த ஒன்றை இன்னொருவர்  வந்து பிடுங்கி எறிந்துவிடுதல் கூடுமாதலால்,  அங்ஙனம் நிகழாமல் காத்தலையும் ""நிலைபெறச் செய்தல்"  என்னும் தொடர் தழுவிக் குறித்தது என்பது சொல்லாமலே புரியும்.  கருத்துகள் விரிந்து சென்றாலும், ஒரு முதல்தொடரே நின்று அவ்விரிவுகளையும் உள்ளடக்கிக் குறித்தல்  எல்லா மொழிகளிலும் காணக்கிடைக்கும் ஒரு நிகழ்வாகும்.  இங்ஙனம் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் ஒரு சொல்லுக்குப்   பலகாலும்  வந்தணைவதை  ஆய்ந்து    அறிந்துகொள்ளலாம் . இதுவேயன்றிக்  ,  கண்ணாற்  காணப்படாத,   பருப்பொருள் அல்லாதவற்றையும்  சொற்கள் அல்லது தொடர்கள் பொருள் விரிந்து குறிக்கலாம்.  "காதலை நிலைபெறச் செய்தல் "  என்ற தொடரில் கண் காணாத  மனவுணர்வு சுட்டப்படுகிறது.  விழப்  போகும் மரம்போல. அல்லது சுவர் போல பருப்பொருள்கள் யாதும் ஈண்டு  தென்படவில்லை. Meaning has been extended to cover the abstract.

இனிச் சாதித்தல் என்பது காண்போம். இந்தச் சொல் "சாய்த்தல் " என்ற கருத்தின் அடிப்படையில் எழுந்த சொல்.  " நீங்கள் கேட்டதை நாங்கள் செய்து முடித்துவிட்டோம் " என்பவனைப் பார்த்து:  " என்ன அப்படிச்  சாய்த்து விட்டாய்?" என்று கேட்பதில்லையா?  ஒன்றை நிலைபெறுவித்தல் ஒரு வெற்றிச்செயல்.  சாய்ப்பதும்  அப்படியே.

சாய்க்க முடியாத மரத்தைச் சாய்ப்பதுவும் ஒரு பெருவெற்றிதான்.  இதைச் சாய்க்க இயலாது என்று பார்த்துக்கொண்டிருந்தவன் தான்  அந்நிகழ்வுக்கு  உரிய நீதிபதி.  சாய்த்தல் என்பது நிலைபெறுவித்தலுக்கு எதிர்மாறான செயல் திறன் ஆகும்.

சாய்த்தல் >  சாய்தித்தல் >  சாதித்தல்

எனவே மரம் வெட்டுத் தொழிலினின்றும்  நாம் ஒரு சொல்லைப் பெற்றோம் என்று மகிழ்வோம்.  தொழிலாளர் வாழ்க. 

ஒப்பீடு :

சாய்  > சாதித்தல் 
வாய்  >  வாதித்தல் 
அதிகம் வாதம் செய்வோனை  சில வேளைகளில்  நிரம்ப வாயுள்ளவன் என்பர்.
("ரொம்ப  வாயி ")  வாதித்தல்  -   வாயடியாக வந்த சொல்லே ஆகும்


வல்லினத்திற்கு முந்திய யகர ஒற்றுக்கள் மறைதல் பேச்சுமொழி  இயல்பே.

ஒப்பீடு:


உய்  > உய்த்தல்.
உய்(த்தல் )  >  உய்த்தி  >  உத்தி   (உய்த்துணர்வு பற்றிய  கொள்கை).   யகர ஒற்று மறைந்தது.

இடைக்குறை  இதுவாகும்..

புதன், 19 மார்ச், 2014

மூன்று துணுக்குப் பாடல்கள்

கலைகள் அனைத்திலுமே  ---  வரும்
கருத்தில் புதுமையும் வேண்டும்;
இலையில் புதுச்சுவை ஊண்  --- எனில்
ஏற்க மனத்தடை உண்டோ?


(இது ஏறத்தாழ பத்தாண்டுகளின் முன் எழுதப்பட்டது. மீதமுள்ள பாடல்களைக் காணவில்லை. எனவே இந்த வரிகள் மட்டும் இங்கே........)

-------------------------------------------------------------------------------------------

எதிரியென்று  யாரைச்சொல்வோம்?  -----  இன்றே
எதிரிஎன்பார்  நாளை  உதவு நண்பர் ;
உதறி எவர்  தம்மைவிடுப்போம்?  ---- இந்த
உலகத்தில் நிலையாய்க் கெட்டவர்யார்?

(இதுவும் சில ஆண்டுகளின் முன் எழுதியது.  தொடரவில்லை.)


------------------------------------------------------------------------------------------

கிழடு ஆன போதும் --- இன்னும்
பல்லில் ஒன்றும் பழுதில்லை!
தோலும் சுருங்க வில்லை --- பூனைக்கு
வாலும் அடங்கவில்லை.

(பாவம் .  நான் எழுதிக் கொஞ்ச நாளில் அது உந்து வண்டியில் அடிபட்டு
இறந்துவிட்டது.  கவலை......)


செவ்வாய், 18 மார்ச், 2014

Life and the Gita

The following is said to have been extracted from Bhagavat Gita,  from various verses. The author of this rendering is unknown. If the reader knows,  may we invite the reader to state his name ..  We  thank the author:


Life is a challenge  -   meet it
Life is a gift   - accept it
Life is a adventure  dare it
Life is a sorrow -  overcome it
Life is a tragedy  -  face it
Life is a duty -  perform it
Life is a game -  play it
Life is a mystery  - unfold it
Lift is a song  - sing it
Life is an  opportunity - take it
Life is a journey -  complete it
Life is a promise - fulfill it
Life is a love - enjoy it
Life is beauty  - praise it
Life is a spirit - release it
Life is a struggle - fight it
Life is a puzzle - solve it
Life is a goal - achieve it