நீரின்றி வாடிடும் ஏழைத் தமிழரை
நீதானே காப்பற்ற வேண்டும் -- வலிந்த
போரொன் றவர்கள் பொறுக்கமாட் டார்மேல்
புகுத்தலை நீமாற்ற வேண்டும்.
வான்குண்டு வீச்சுக்கு வாழ்வு பறிபோகா
வண்ணமே நீயருள வேண்டும் -- அவர்க்கு
ஊண்பண்டு போலக் கிடைத்திட உன்னருள்
அல்லாது வேறென்ன வேண்டும்?
உடைமைகள் யாவும் இடையே களைந்தவர்
ஒயாத போராட்டம் வாழ்வில் -- கண்டு
படையவர் ஆற்றும் கொடுஞ்செயற்கு ஆளாய்ப்
படுந்துயர் நீபோக்க வேண்டும்.
சின்னஞ் சிறிய குழந்தைகள் மூப்பில்
செயலறி யாதவர் மக்கள் -- தம்மைக்
கண்ணுங் கருத்துமாய் முன்காத் தனையவர்
இன்றுசெய் பாதகம் யாதோ?
விரைந்தருள் நீயே புரிந்திடு தாயேநல்
வீரம் விளைத்திட்ட காளி --- அவர்கள்
குறைந்திட்ட வாழ்வின்னும் குன்றாமல் நீவா
நிறைந்திடச் செய்யிந்த நாழி!
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
ஞாயிறு, 11 ஜனவரி, 2009
வெள்ளி, 9 ஜனவரி, 2009
Problems for the new leader Obama
உலகத்தின் போர்கள் எல்லாம்
ஒபாமா ஓயச் செய்வார்;
சிலகத்தி தாம்போய்ச் சேரும்
செம்மையாய் உறைக்குள் என்று
பலபத்தி ரிகைகள், மேலோர்
பகர்ந்தனர் பதவி கொள்ள
நலமொத்து வருமுன் பேஇந்
நானில மெங்கும் வெம்போர்.
புகலப்போர் மட்டும் என்றால்
போகட்டும் என்போம் ஆங்கே
அகலப்பார் எங்கும் கெட்ட
ஆழ்பொரு ளியலால் வாடும்!
இகலுப்பி எதிரில் நின்ற
இன்னலை வென்றே விண்மீன்
மிகலொப்ப ஓபா மாவும்
மேலெழக் காண்போம் நன்றே.
ஒபாமா ஓயச் செய்வார்;
சிலகத்தி தாம்போய்ச் சேரும்
செம்மையாய் உறைக்குள் என்று
பலபத்தி ரிகைகள், மேலோர்
பகர்ந்தனர் பதவி கொள்ள
நலமொத்து வருமுன் பேஇந்
நானில மெங்கும் வெம்போர்.
புகலப்போர் மட்டும் என்றால்
போகட்டும் என்போம் ஆங்கே
அகலப்பார் எங்கும் கெட்ட
ஆழ்பொரு ளியலால் வாடும்!
இகலுப்பி எதிரில் நின்ற
இன்னலை வென்றே விண்மீன்
மிகலொப்ப ஓபா மாவும்
மேலெழக் காண்போம் நன்றே.
வியாழன், 8 ஜனவரி, 2009
பொருள் அழுத்தம் emphasis
சொல்லுங்கால் ஒரு கருத்துக்கு அழுத்தம் கொடுத்துச் சொல்லவேண்டுமானால், ஒவ்வொரு மொழியிலும் அதற்கு வெவ்வேறு வசதிகள் உள்ளன.
தமிழில் இவ்வழுத்தம் கொடுக்கும் முறை எங்ஙனம் கையாளப்படுகிறது என்று பார்ப்போம்.
காசியப்பன் சோறு தின்றான். (வாக்கியம்)
இதன் பொருள்: காசியப்பன் சோறு, குழம்பு, பச்சடி, துவையல் (இன்ன பிற ) என்பனவற்றை உண்டான் என்று பொருள். வெறுங்சோறு உண்டான் என்பது பொருளன்று.
காசியப்பன் சோற்றை உண்டான் (வாக்கியம்).
இதில் "சோற்றை" என்பது: அவன் சப்பாத்தி, இட்டிலி, உப்புமா (இன்ன பிற ) என்பனவற்றை உண்ணவில்லை, சோற்றையே உண்டான் என்றாவது, மற்றவற்றை உண்ணாமல் சோற்றை உண்டான் என்றாவது பொருள்படலாம்.
இங்கு "ஐ" உருபு வந்து, சோறு என்ற சொல்லின்மேல் ஓர் அழுத்தத்தை உண்டாக்கியிருக்கிறது என்று உணரலாம்.
சின்னா மதுரை போனான்.
இதில் மதுரை என்ற சொல்லின்பால் அழுத்தம் ஏதும் இல்லை. மதுரை போய், அங்கிருந்து சொந்த ஊருக்கு உந்துவண்டியில் போனான் என்று பொருள் விரிவடைய இடம் தருகிறது இந்த வாக்கியம்.
சின்னா மதுரைக்குப் போனான்.
இங்கு வேறு இடத்துக்கு அவன் போகவில்லை, மதுரையோடு அவனது இப்பயணம் முற்றுப்பெறுகிறது என்று பொருள்படலாம்.
வேற்றுமை உருபுகள் ஒருவகை் பொருள் அழுத்தத்தை இடம் நோக்கி உண்டாக்குகின்றன என்று தெரிகிறது.
கடல்கடந்த சீனர்.
இங்கு கடல்கடந்த என்பது ஆங்கிலத்தில் வரும் oversea என்பதற்கு இணையான பொருளைத் தருகிறது. அதாவது இந்தச் சீனர் சீனா நாட்டினர் அல்லர் என்று பொருள்தரும். (The Chinese diaspora!)
கடலைக் கடந்த சீனர்.
இங்கு: இரண்டு மூன்று சீனர்களிடையே இந்த ஒருவர் கடலைக் கடந்தார், மற்றவர்கள் கடக்கவில்லை என்று பொருள் தரலாம். அதாவது ஒருவர் மட்டும் படகேறி வந்தவராக இருக்கலாம்.
கடலைக் கடந்த செயலானது முன்மை (primacy or importance) பெறுகின்றது. It does not refer to a category of Chinese. It is a reference to action of sailing across probably from China.
சில வேளைகளில் அழுத்தத்தை ஏற்படுத்த உருபு மட்டும் போதாமை ஏற்படலாம். எடுத்துக்காட்டு:
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் இரகசியம் சொல்வேன்.
இங்கு மட்டும் என்ற சொல் பிறருக்கு இந்த இரகசியம் கூறப்படாது என்று பொருள் தருவதைக் காணலாம். இருமுறை அடுக்கி வந்து அழுத்தம் குுடிவிட்டது என்று தெரிகிறது.்
இதுபோன்ற பொருள் அழுத்தங்களை (emphasis) நீங்கள் உணர்ந்ததுண்டா?

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)