வியாழன், 8 ஜனவரி, 2009

பிரிதிவி அல்லது பிருதிவி

பிருதிவி


அவஸ்தான் மொழியில் "பெரது" என்றால் விரிவுடையது என்று பொருள்.

ஒன்றைப் பெரிது எனில், உருவத்தில் பெரிது, இடத்தில் பெரிது, சிந்தனையில் பெரிது என, இன்னும் பலவாறு "பெருமை" (பெரிது) விரிவடையும்.


பெரிது (தமிழ் ) : பெரது (அவஸ்தான்).

பெரிது, பெரிது, புவனம் பெரிது என்பது ஔவையின் பாட்டு வரி.

அவஸ்தான் மொழியில் , புவனம் ( நிலவுலகு) பெரிதென்று கூற, பெரது என்ற சொல் பயன்படும். (perethu: broad, wide like the earth).

பெரிது (தமிழ்) : பிரிதிவி அல்லது பிருதிவி (சங்கதம்). பிரிதிவி = நிலவுலகு. பிரிதிவி = நிலவுலகின் தலைவன்.

புவனம் பெரிதுதான். சங்கதத்தில் பிரிதிவி என்ற சொல் ஏற்பட்டதும் பொருத்தமே.


ஆராயத்தக்கவை:

காஸ்பியன் கடலுக்குக் கிழக்கிலான பார்தியா (Parthia) , பார்தாவ். [ தமிழ்: பெரு, பரிதி முதலியவை ]
ஈரானிய வட்டாரத்தில் ர்த். ர்ட் என்பன ல் என்று திரிதல்.
(e.g. sard became sal, zard→zal, vard→gol, sardar→salar etc.).



புதன், 31 டிசம்பர், 2008

2009 வாழ்த்து

ஈரா யிரத்தின் ஒன்பான் ஆண்டே வருக!
சீராய் இரக்கம் அன்போ டெல்லாம் தருக!
போரும் வெடியும் என்றும் எங்கும் விலகி,
யாரும் உயர்வும் இன்பம் யாவும் அடைக!!

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

செவ்வாய், 30 டிசம்பர், 2008

ஒருதலைக் காதல் ஒழிக.

ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க:

"எவரறிவார் யான்கொண்ட அன்புன்மேல் இங்கே
எதையறிவார் என்பற்றி ஏனோ் --- இவையொன்றும்
மானிடர் தானறியார் மாறாதுன் மேல்கொணர்ந்த
வானருட் காதலிறை வா."

என்று ஒரு வெண்பாவாக்கிவிடலாம். ஒருதலைக் காதல் இறைக்காதல் ஆகிறது.

"மானிடர் தானறியார் மாதவனுன் மீதிசைந்த
வானருட் காதலிறை வா."

எனினுமாம்.
ஒருதலைக் காதல் பாடலில் வரவேண்டும் என்றால்:

"மானிடர் தானறியார் மாறாதே ஓர்தலையாய்
யானிடர்க் காதல் படும்."

இலக்கியங்கள் பழித்த ஒருதலைக் காமம் ஒழிக.