வெள்ளி, 29 ஏப்ரல், 2022

சித்திரக் குள்ளனோ - சித்திரத்தில் கண்ணுற்ற குள்ளனோ?

 சித்திரக் குள்ளனென்ற சொற்றொடரைக்  கேள்விப்பட்டிருக்கிறோம். இப்பெயர் "சித்திரம்"  என்ற தமிழில் வழங்கும் சொல்லையும்  நம்முன் கொணர்ந்து நிறுத்துகிறது.

இதன்மூலம் நாம் நினைப்பது என்னவென்றால்,  இந்தக் குள்ளன் சித்திரத்தில் வரும் குள்ளன் போன்று சிறியவனாய் இருப்பான் என்பதுதான்.

ஆனால் சித்திரத்தில் வருபவன், நாம் காணும் சித்திரப் படிகளத்தினை விடப் பெரியவனாய் இருந்துவிட முடியாது.  இந்தச் சித்திரத்தினோடு ஒப்பிடும் வெளியிற் கண்டு நாம் வியந்த குள்ளனோவெனின்,  உருவப் பருமை, உயரம் என இன்ன எல்லாவற்றிலும் வேறுபட்டிருக்கக் கூடும். 

சித்திரக் குள்ளனென்போன் உண்மையில்  சிறுதிறக் குள்ளன் >  சிறுத்திரக்குள்ளன் > ( இது இடைக்குறைந்து )  சித்திரக் குள்ளன் ஆனது.

சிறுத்திருகிற குள்ளன் என்று வாக்கியமாய் வரும்..

இன்னும் சில கேளிக்கைகளயும் சுட்டிக் காட்டலாம் என்று நினைத்தேன். நேரத்தை மிச்சம் செய்வோம்.

சிறுத்தல் என்ற வினையையும் உள்ளிட்டு விளக்குதல் கூடும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

திங்கள், 25 ஏப்ரல், 2022

பயணத்தின் போது

(எழுசீர் விருத்தம்).


 மகிழுந்தில் போனாலும்  பேருந்தில்  போனாலும்

மகுடமுகி  தாக்காத  கவசமிட்டு,

நெகிழ்ந்துருகும் உறவுடனே உடன்செல்வ தென்றாலும்

நெட்டணிமை இல்லாத தொலைவு கொண்டும்

வகுதிண்மைத்  திட்டத்தில் நாட்டோடும் ஒன்றாகி

வருநோய்கள்  யாவினையும் வென்றுவாழ்வீர்

தொகுதியும தாவதென்(ன)  அடிப்படைகள் மிகச்சரியேல்

தூயநல  இன்வாழ்வும்   உமதாகுமே!


மகுடமுகி  -   கொரனா வைரஸ்

மகிழுந்து -   உந்துவண்டி 

பேருந்து  ----  பஸ்  என்னும் வாகனம்

நெட்டணிமை,   கிட்ட  இருப்பது,  தூர இருப்பது.  சரியான

இடைத்தொலைவு

தொகுதியுமதாவதென்ன -  நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் என்ன,

அடிப்படைகள் மிகச்சரியேல் -  நீங்கள் கடைப்பிடிப்பது சரி என்றால்

எல்லாம் சரியானால் இனிதாக வாழ்வீர்.


படத்தில் திரு மாசிலாமணி  ( எம் ஆய்வினர்)  பேருந்தில் பயணம் செய்கிறார்.




அறிக மகிழ

மெய்ப்பு:  பின்.


ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

க ண்ணாடியிற் கண்டெடுத்த கவி

 முகம்தவிர வெளியுருவைக் காட்டும் ஆனால்

மிகுமுருவும் அதிற்காட்டிச்  சார்பும்காட்டும்! 

மனிதன் கண்ட பொருள்களிலே மாப்பொருள் என்றால்

தனிமேன்மை கொண்டதுகண் ணாடி என்போம்

மகிழ்கொள்ளக் கவிபாடத் தமிழே   போல

முகிழ்த்துவரும் கருத்துகளை  முன்சொரி கின்ற

உலகமொழி  ஒன்றிரண்டு  உண்டே  என்பேன்

எலாம்தந்த  இப்படமும் களிப்பீர் கண்டே.




படத்தில் தோன்றுபவர்:  அ.மா. மணி

கவிதை தந்தவர்:  சிவமாலா.

படத்துடன் கவிதை சுவைத்துமகிழ்வீர்/

பண்பட்ட அறிவாளர் ஆவது எப்படி

செய்தியை  அறிந்துகொளப்  பறந்த சென்று

அறிந்தபின்பு  ஒருவாறு  அடங்கி நின்று 

மறுநாளில் எழுச்சிதரும்  செய்தி  இல்லை

என்பதனை  அறிந்ததபின்  எழுச்சி  குன்றி

ஒன்றுமிலை என்றபடி குன்றி நிற்போம்!

ஆர்வத்தை அடக்கிடவே  கற்றுக்கொண்டால்

உலகத்தில் நின்றாகும மனிதர்தம்மில்

பலகற்றுக் கொள்வாரை    நாமும் காண்போம்.

சீராகச் செலவேண்டும் வாழ்க்கை  ஓடம்!


ஆர்வமென்ற ஒன்றினையே கூட்டிக் கொள்ள,

கூட்டினது மிகுந்துவிடிற் குறைத்துக் கொள்ள, 

வேண்டியவா றமைந்திடவே ஈண்டு கொண்டால்

என்றுமின்றும் நன்றுகிட்டும் வாழ்வில்  சீரே.


சீரான வாழ்வினையே  காண்போம் நாமும்

செம்மையென்ப தொன்றுளதே வாழ்வுநன்றே.


ஆர்வத்தை மட்டுறுத்தக் கற்றுக்  கொள்வீர்

தீவிரங்கள் தாமேயாய்  உதிரந்து போமே.

நீரேஎன்   றென்றும்   இங்கிருக்க மாட்டீர்

இவ்வுலகம் பழமண்ணே மறந்தி டாமல்

செவ்வைதனை வாழ்வுதனில் ஒட்டி நிற்பீர்.


அறிக மகிழ்க.

மீள்பார்வை:  பின்.


சனி, 23 ஏப்ரல், 2022

காபிக்குத் தமிழ்ப்பெயர்.

 இன்னும்  ஒருவாழ்வு  இருந்தாலும்  நல்லதுதான்,

மன்னும்  புவியில்போல் பாலிட்ட -----  இன் தேறல்

நல்ல  குளம்பரி  என்போம்  அயலிலதை

வல்லாரோ  காபிஎன் பார்.

ஆயிரம் என்ற சொல்லின் அருமையும் அடைவும்.


ஆ என்று மனிதன் வாய்பிளந்து நோக்கும் பல பொருள்களும் உண்மையில் மிக்க விரிவுடையனவே.  இதனை மெல்லச் சிந்தித்து   ஓய்வாக இருந்து எண்ணி அறிந்தாலே  முடியும்.  எம் பரிந்துரை யாதெனின்  பெரிதும் தனியாய் இருந்து சிந்திக்க வேண்டும்.  தோன்றும் கருத்துக்களைப் படம்பிடிப்பதுபோல் எழுதி வைத்துக்கொண்டு சிந்தித்து முடிவு செய்யவேண்டும்..  

காயம் என்ற சொல் தொல்காப்பியர் கால முதல்கொண்டே தமிழில் உள்ளது.  காயம் என்றால்,  சூரியன்,  நிலா,  உடுக்கள் முதலியவை " காயும் இடம்.  அதன் விரிவை உணர்த்த,   அது பின்  ஆகாயம் என்று விரிக்கப்பட்டது.   ஆ + காயம் > ஆகாயம் என்பதுதான் சொல்.   ஆஹாய, என்பதில்லை.  ஆஹாய என்பது திரிபு  ஆகும்.

மேல் விரிந்த வானமான இடத்துக்கு   ஆ+ காய என்று பெயர் அமைந்தது போலவே,  கடலுக்கும்   ஆழி   என்று பெயர் வந்தது.    ஆ>  ஆழ் > ஆழ்தல் என்ற வினைச்சொல் தமிழில் மிக்க இயற்கையாக அமைந்த சொல்..


ஆயிரம் என்ற சொல்லைப் பண்டைத் தமிழர்கள் எப்படி அறிந்தனர் அல்லது அமைத்துக்கொண்டனர்?


தாமே அமைத்தற்குத் திறமோ அறிவோ முயற்சியோ இல்லாதவிடத்து, அல்லது அமைத்துப் பயனோ பயன்படு தருணங்களோ இல்லாதவிடத்து, அல்லது குழப்பம் ஏற்படும் என்ற அச்சம் நிலவுமிடத்து அமைக்கமாட்டார்கள். அங்கனம் இல்லையாயின் அமைத்திருப்பர்.


காட்டிலோ, கரையிலோ காலங்கழித்துக்கொண்டிருந்த முந்தியல் மாந்தனுக்கு, ஆயிரமென்பது ஒரு பெருந்தொகையே. பத்தும் நூறும் அறிந்தபின்பே அவன் ஆயிரத்தை எட்டமுடியும்.


ஒன்றை அறிந்து பழகியபின் இரண்டு அறிந்தகாலை அவன் அதைப் பெரிது என்று கருதினான். இரு என்ற சொல்லுக்கு இன்னும் பெரிது என்ற பொருள் தமிழில் இருக்கிறது.

இம்மாம்பெரிது  என்று கூறுகையில்  "ஈ"  வந்துவிடுகிறது..  இரு என்பது பெரிது என்று பொருள் தந்ததில் என்ன வியப்பு?  


ஒன்பதின் பின் பத்து என்பது பலவாகத் தெரிந்தது. அங்கனமே பொருள்படுஞ் சொல்லை அவன் அதற்கு ஏற்படுத்தினான்.


ஆயிரமென்பது ஆகப் பெரிதாகத் தோன்றிய எண்.
ஆ = வியப்பும் குறிக்கும் சொல். ஆக என்பது இறுதியும் குறிக்கும்.
இரு= பெரியது.
அம் : விகுதி.
இச்சொல்லின் பொருளும் “ ஆகப் பெரிது” என்பதுதான்.
ஆ+ இரு + அம் = ஆயிரம்.
ஆ என்று வியத்தகு பெரிதாய ஓர் எண்.
இலக்கம் கோடி என்பன கண்டகாலை, ஆயிரம் சிறிதாகிவிட்டது.


வெள்ளி, 22 ஏப்ரல், 2022

முக்கனி மொழிச்சாறு

 வேண்டிய  அனைத்தும்  தரும் வெள்ளிக்கிழமை 

செந்நாட்களிலே ஒரு பொன்னாள் ஒரு நன்னாள்

எனக்  கொண்டாடுவோம்.


மூன்று கனிகளும் முன் கொண்டு வைப்பீர் 

முத்தமிழ்ச்  சுவைகளும் அதில்கொண்டு சேர்ப்பீர்

மொழிச்சாறு  கனிச்சாறு  கலந்தோடும் ஆறு

மக்கள் உயிருள்ளில்  தித்திக்கும் தமிழாக  ,  இன்று  (வேண்டிய)


விண்ணிலும் மண்ணிலும் அழகென்று  கண்டார்

முருகென்று கண்டார்  இணையற்ற தென்றார்        (வேண்டிய)


அறிக மகிழ்வீர்/

புதன், 20 ஏப்ரல், 2022

வண்டியோட்டப் பயின்று மறந்தவர்கள்:

வண்டியோட்டப் பயிற்சிக்குப்  போகவேண்டிய பயின்ற ஓட்டுநர்கள்: 


https://theindependent.sg/netizens-call-porsche-driver-genius-for-parking-his-car-perpendicularly-on-parallel-parking-spot-in-bishan/


தான் பயின்ற கலை

பயன்பாட்டிலும் நடப்பிலும் இருக்கும்போதே

திறமை  கைநழுவிப் போய்விடுமோ?

கதி என்ற சொல்.

கதி என்ற சொல்.

இது மிகவும் எளிய சொல்.

கடந்து சொல்வது தான்  கட >  கடதி.

இது டகரம் குன்றி  கதி ஆகிறது.

அறிக மகிழ்ககத்கட்

மூளைக் குருதித் தெறித்தல் நோய்

 மூளைக்குள் செல்குருதி தெறித்தல்     என்ற

முன்னுரிமைக் கவனிப்பு நோயாகின்  றதே.

காளைபோல்  பலமுடையான்  ஒருத்த    னென்று

காரியப்  பற்றறாலுயர்த்திக் கழறும்  காலும்

நீளியவை      யாம்பிறவற்றோடு    இணைந்து ஓங்கி

நேர்படவே  வினைமுடிக்க  வேண்டும் வேண்டுமென்பார்

ஆளான  முதிரிச்சியினர்   உணவு காக்க!

அத்துடனே  கடுங்குணமும்  காக்க வேண்டும்.


மூளைக்குள் ஒரு குழலுக்குள் சென்றுகொண்டி ருக்கும்  இரத்தம், குழல் வெடித்து வெளிக்கொட்டினால் இது ஒரு நோய் ஆகிறது. இதைத்தான் இங்கு எழுதுகிறோம். செல்குருதி தெறித்தல் என்கின்றோம்.  குருதி - இரத்தம் (அரத்தம் எனினும் ஆகும்.)  

நீளியவை  இரத்தம் ஓடும் வழிகள். வினைமுடித்தல் - இங்கு மண்டைக்கு ள் நடைபெறுவதற்குள்ளனவற்றை முடித்தல், இது தானியயக்கமாக நடக்கும்.

இது நீண்ட நாளைய உணவுக்க்கோளாறுகளால் நடைபெறும் என்பர். காத்துக்கொள்க/ மருத்துவரைக் காண்க.

இது மருத்துவர்கட்கு உரியது.

யாவரும் கவனமாய் இருப்போம்.

மெய்ப்பு பின்

அறிக மகிழ்க.

மீண்டும் வந்து  காண்போம் நன்றி.


சிம்பு சிதம்பினின்று (இயற்பெயரன்று.)

 இன்று சிம்பு என்ற தமிழ்ச்சொல்லினை  ஆய்ந்து  அது எத்தகைய சொல் இன் தமிழ்ழ்ச் சொல் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.. தம் தமிழ் என்பதால் இனிய நம் தமிழ்ச்  சொற்களில் சிலவற்றையாவது நாம் நன் கு அறிந்திருக்கவேண்டும். எல்லாவற்றையும் நீங்கள் அறிந்துவைத்திருக்கவேண்டுமென்பதில்லை.  ஒன்றிரண்டு சொற்களில் அழகினைப்பற்றிய நாலிரண்டு கதைகளைத் தெரிந்திருந்தாலே 

இனிமையான தென்றல் வந்து தாலாட்டும்போது  

உங்கள்  மூச்சிலே  இனிமை தோன்றித் தவழுமே.


சிம்பு என்பது ஒரு இடைக்குறைச் சொல்.  இச்சொல்லின் முழுச்சொல்:  சிதம்பு என்பதுதான்.   இரும்பு முதலிய அடிபடும் கம்பாகும்போது அடியின் கடினமான வேகத்தால், இரும்பின் சில சிறு பகுதிகள் நூல்கள் போல் மென்மையும் சிதறுதலும் அடைந்து,  ஏறத்தாழ   ஒரு நூலைப்போல திண்மை உடையதாகி,  சிம்பு என்ற சொல்லப்படும்.  அந்த இரும்பு தடியிலிருந்து ஒரு  சிம்பைக் கிழித்து அல்லது பெயர்த்து எடுத்துவிட்டேன் என்பதைக் கேட்டிருக்கலாம்,  இச்சொல்லை ஞாபகம்1 வைத்துக்கொள்ளுங்கள்.

சிதம்பு  -  சிம்பு.  இதில் தகரம் மறைந்தது.

ஆனால் சிலம்பு என்ற சொல்லில்  லகரம் மறைந்தது.  அதை இயற்ப்பெயராய்க் கருதவேண்டும்,

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்







குறிப்பு:   

ஞாபகம் -   நாவகம் உள்ள சொல்தான் ஞாபகம் உள்ள சொல். தமிழ்த் திரிபு.  நான் > ஞான்  ( மலையாள - தமிழினமொழித் திரிபு.)

திங்கள், 18 ஏப்ரல், 2022

அகரம் இகரம் ஆதல் மற்றும் அங்கணம்

 அகரம் இகரம் ஆகும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்காலை,   எங்கெங்கு இந்தத்  திரிபுகள் ஏற்படக் காரணம் உண்டு, அதற்கான இடன்  எங்கு  என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். மற்றும் அவ்வாறு மொழியில் உள்ள இன்னொரு சொல்லையும் தெரிந்துகொள்ளுவது சிறப்பு ஆகும்.

இதழ் என்பது  அதழ் என்றும் வரும்.   இச்சொல் இவ்வாறு அதழம் என்று அமைந்த பின்பு,   இன்னொரு திரிபு ஏற்படுகிறது  அதழ் என்பது  நாம் வேறு வேலைகளில் கவனமாக இருக்கும்போது  "அதழம் " என்பதாகிப் பின் அதரம்  ஆகிறது.  அதரம் எப்படி அமைந்தது என்று  தெரியாதவர்களும் உள்ளனர்

இனி அங்கணம் என்ற சொல்லையும் கவனித்திவோம்/   இதில் அங்கு,   அண், அம் என்ற மூன்று சொற்கள் உள்ளன/ /

 இரண்டு. சுட்டடியில் வந்ததுள்ளன

அண் என்பது அண்மையில் அலலது பக்கத்தில் என்று பொருள்தரும்.   அங்கு என்பதும்   இடக்குறிப்பு என்றே கொளளலாம்,

தமிழ்ச்சொற்களே.

அறிக மகிழ்க/

மெய்ப்பு பின்.

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

Some posts are still waitimg for edit and publication. They will be cleared soon. Thank you. Some minor errors are also among them.

சனி, 9 ஏப்ரல், 2022

அமைதி, பருத்தி, உறுதி. விருத்தம்,

 பருத்தி  அமைதி. உறுதி  

சொற்கள் சிலவற்றில்  புணர்ச்சியிற் போல வலிமிகுந்து வருவதைக் காணலாம். சிலவற்றில் வலிமிகுவதில்லை.   வலி மிகுதல் என்றால் வல்லலெழுத்து மிகுந்து வருதல். 

பஞ்சு விளையும்போது,  அதிக இடத்தைக் எடுத்துக்கொள்ளுதல் "போல" ( பஞ்சு) பருத்து விரிந்து பறக்கத் தொடங்கிவிடுகிறது.  பருத்து விரிந்து பறத்தலினால்  அது பரு+ தி > பருத்தி என்று பெயர் பெற்றது. ஆனால் ஒரு தலையணை உறை போலும் சிறிய இடத்திற்குள் அதை அடக்கிவிடமுடியும். அது பின்னர் அடக்கப்படுவது, கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுவதில்லை.   ஆகவே பெயரமைப்பில் கவனிக்கப்படா  தொழிந்தது.

இங்கு நாம் சுட்டிக்காட்ட விழைந்தது யாதெனில்,  இச்சொல் இப்போது  "பருதி"  என்று  வழங்கவில்லை. இன்றுகாறும் இச்சொல் "பருத்தி" என்றே உள்ளது. சங்க இலக்கியத்தில் இச்சொல் பருதி என்று வழங்கி,   பரிதியைக் குறித்தபடியினால் , இச்சொல்  பருதி என்ற முற்பட அமைந்து பின்னர் ருகரம் ரிகரமாகி பரிதி என்று மாறி,  சூரியனைக் குறித்ததென்பது தெளிவு   ஆகும்.  இதில் நாம் கூறுவது, இச்சொல் பரிதி என்றான போதும்  வலிமிகவில்லை. பருதி என்றிருந்த  போதும் வலிமிக்கு வரவில்லை என்று உணர்க.

பருந்தலை  ( பருத்ததலை)  என்ற சொல்லில் ஒலி மெலிந்துள்ளது. மெலிந்து தலையின் பருமை குறிக்கிறது.  பருத்தலை என்று வருவதில்லை. பருத்த உடலுள்ள பறவை,  பருந்து ஆயிற்று. ஒலி மிகவில்லை.

பரிதி என்பதிலும் வலி மிகவில்லை.  ( பரித்தி அன்று).

அமைதி  என்பது அமைத்தி என்றாவதில்லை;  உறுதி உறுத்தி ஆவது இல்லை

சொல்லமைப்பு  மிக்கக் கவனமுடன் செய்யப்பட்டுத்   தமிழ்மொழியில் வந்துள்ளது என்பது இவற்றை நோக்குவார்க்குப் புலனாகும்.

விரித்தல் என்ற சொல்லுடன் தொடர்புடையதே விருத்தம் என்ற விருத்தப்பாவின் பெயர்.  விரித்தம் என்று அமைந்து பின் விருத்தம் ஆயிற்று என்க.  அகரம் இகரமாகும்.  அது பரிதி> < பருதி என்பதில் தெரிந்திருக்கவேண்டுமே.    மொழி முதலிலும் இஃது வரும்.  இதழ் -  அதழ் என்பதிலும் காண்க. விருத்தி என்பதும் அது.

You may ask us to explain  if it is difficult to understand.  Pl enter up your comment.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

அடுத்தநகர் செல்ல ஆலோசனை.

 என்னாகும்  ஏதாகும்  என்கின்ற  கவலை 

இருக்கின்ற சிங்கையர்க் கிருக்கின்ற  தாலே

பின்னாளில் நோய்வந்தால்  என்பட்டு  விழுவோம்

எனுஞ்சிந்த  னைவந்து  எழுந்திட்ட  தாலே

முன்போகும் வீரர்கள் போகட்டும் திரும்பி

முன்வந்து  சொன்னால்பின் எழுவோமே  செல்வோம்

என்பாலும் புதிதாக யாதொன்றும் வேண்டாம்,

இருப்பேனே  என்றிங்கே இருந்தோரே பல்லோர்.


உரை:  

என்னாகும்  ஏதாகும்  என்கின்ற  கவலை  ---  என்ன ஆகுமோ, எதிர்பாராதது எதுவும் நடந்துவிடுமோ என்ற மனக்கவற்சி

இருக்கின்ற சிங்கையர்க் கிருக்கின்ற  தாலே--- சிங்கையில் வாழ்நருக்கு ஏற்பட்டுவிட்ட தால்;

பின்னாளில் நோய்வந்தால்  என்பட்டு  விழுவோம்  --  இனிவரும் நாளில் நோய் வந்துவிட்டால் என்ன ஏற்பட்டு  நாம் போவோம் 

எனுஞ்சிந்த  னைவந்து  எழுந்திட்ட  தாலே ----  என்ற எண்ணம் வந்துவிட்டதாலும், 

முன்போகும் வீரர்கள் போகட்டும்---நமக்கு முன் போவோர்    செல்லட்டும்,


முன்வந்து  சொன்னால்பின் எழுவோமே  செல்வோம்  ------செய்திகளை முதலில் தெரிந்துகொள்வோம்   அப்புறம் போகலாம்,

என்பாலும் புதிதாக யாதொன்றும் வேண்டாம்,--- எனக்குப் புது இடைஞ்சல்கள் வேண்டாம்; 

இருப்பேனே  என்றிங்கே இருந்தோரே பல்லோர்--- நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்  இங்கு பலர் இருக்கிறார்கள்@  என்றபடி.

இருப்பேனே -  போகாதவர்  ஒவ்வொருவரும் சொல்வது

அடுத்த நகருக்குச் செல்லும் வழிகள் திறந்துள்ளன என்றார்க்கு, இப்போது அவசரமில்லை என்று கூறியது.

"ஒருகுரன்மை' ஏற்பட்டுவிடாமல் இருக்க,  அசைகள் வேறுபட வந்தன:  எ-டு:

தாலே - விழுவோம்,  கவலை - தாலே,  திரும்பி -  செல்வோம், என.

ஒருகுரன்மை  = monotony. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

@இச்சொல் திருத்தப்பட்டது

வியாழன், 7 ஏப்ரல், 2022

நகரில், ஒவ்வொரு ஆவின் தயிரையும் சுவைக்கலாமே!

 

வீட்டின்பின் கொட்டகை விதத்துக்கு நாலாகக்

கன்றுடன் ஆக்கள் நின்றால்

காட்டிடும் போதினில் வாய்த்திட்ட பெருமிதத்தை

கணக்கிடல் ஆவ தாமோ  1


ஒவ்வொரு தாய்ப்பசுவும் பால்தயிர் வெண்ணெயென்று

தரத்தர உண்டு மகிழ்வோம்,

ஒவ்வொரு ஆதந்த ஒவ்வொரு தயிருக்கும்

சுவையெனில் தனிச்சு வைதான்!   2


இந்நாளில் எங்குபோய் ஆவினை வளர்ப்பது.

இஃதொரு பெரிய நகரே,

பொன்னான தயிர்தன்னை ப் பல்கடைத் தொகுதியில்

போய்வாங்கி அருந்தத் தரமே. 3


ஒவ்வொரு குழும்பினரும் உருவாக்கி வெளியாக்கும்

ஒவ்வொரு தயிர் அடைப்பாவும்

வெவ்வேறு நம்மாடு என்றெண்ணி உண்டுவிடில்

மாடின்மை வருத்தாமை காண். 4



ஆக்கள் - பசுக்கள்

ஆவதாமோ  - இயலாது

குழும்பினர்  ( கம்பெனியார்)

பல்கடைத்தொகுதி ---  "ஸுப்பர்மார்க்கட்"

அருந்தத்தரம்-   அருந்த இயல்வதே

அடைப்பா -  டப்பா  (  அடைத்து வைக்கும் சிறு பாத்திரம் )

மாடின்மை  --  வீட்டில் கொட்டகையில் மாடு இல்லாமல் வாழ்தல்

பொன்னான தயிர் -  விரும்பப் படும் தயிர்.


தொடர்புடைய  இடுகைகள்:

டப்பா டப்பி

https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_43.html

இது ஒரு பல்பிறப்பிச் சொல்:

அடைப்பி   >  டப்பி எனினுமாம் (  அடப்பி  > டப்பி )

தடு >  தடுக்கர், இது இடைக்குறைந்து  "தக்கர்"/

தடுக்கை >  இது இடைக்குறைந்து  :  தக்கை

இறைவனின் பெயரான அரங்கன் என்பது ரங்கன் என்று மாறிற்று.

அறு + அம் + பு + அம் = அறம்பம் > றம்பம் > ரம்பம் என்று  திரிந்தது.

இறுதி அம் விகுதி.   இதர இடைநிலைகள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.










புதன், 6 ஏப்ரல், 2022

இயற்கை ஆற்றல் எதிர்கொள்ளும் காட்சி

 

நீலத்தைக் கரைத்துவிட்ட ஏரி நீரை

நிமிர்ந்துபனை தலையாட்டி வாழ்த்தும் ஓரம்

காலை மணல் சூரியனை வாவா என்று

கனிந்தவுயர் அன்பினொடும் ஏந்தும் கைகள்,

ஓலமிடும் காற்றுமெதிர் கொண்ட போது

ஊதிஊதித் தள்ளிவிட்டு ஞற்றும் கோபம்

ஞாலமிதில் அழகிதனின் ஓவக் காட்சி

நாளையினிக் கண்டுமகிழ் மீட்சி யுண்டோ?


கண்டுமகிழ் மீட்சி  -  மீண்டும் வந்து காணுதல்

ஓரம் -  கரை ஓரம்

உஞற்றும் -  மீண்டும் மீண்டும் முயலும்

தள்ளிவிட்டு உஞற்றும் > தள்ளிவிட்டு (உ)ஞற்றும்.

ஞாலம் - உலகம்

ஓவக் காட்சி  -  ஓவியம்போலும் காட்சி

சூடியன் >  சூரியன்;    சூட்டியன் > சூடியன் > சூரியன் எனினுமாம் எனில் இடைக்குறை.


அறிக மகிழ்க


மெய்ப்பு  பின்



செவ்வாய், 5 ஏப்ரல், 2022

விசை விசையன்

 இன்று "விசையன்"  என்ற சொல்லைக் கவனிக்குமுன்,  விசை என்ற சொல்லையும் கவனித்து,  தொடர்புடைய சில அலசியறிவோம்.

விரிதற் குறிக்கும் சொல்லே பின் விசை என்றுமானது.   மனிதனின் அறிவே விரிவடைந்து,   தானியங்கியாக இடப்பெயர்ச்சி செய்யுமளவுக்கு உலகின்கண் மாறியுள்ளது. உயர்ந்த நிலப்பகுதியினின்று தாழ்வான பகுதிக்கு ஒன்றை உருட்டிவிட்டால்,  மனித ஆற்றலுடன் புவியின் ஈர்ப்பாற்றலும் இணைந்து உருட்டிவிட்ட பொருள் ஓடுகின்றது. உருளும் பொருட்கு ஊட்டப்பெற்ற விசை தீருமளவு ஓடிப் பின் அது நின்று போகிறது.  இனியும் தூண்டினாலன்றி அது மேலியக்கம்  பெறுவதில்லை.

விர் என்பதை இப்போது அடிச்சொல்லாக வைத்துப் பிற அறிந்துகொள்வோம்.

விர் > விய்.   இது கர் > கை என்பதுபோன்றது.

அடிப்படைக் கருத்து விர் > விரிவு என்பதே.  

விர் > விய்   விய் > வியன். (விரிவு).

விய் + ஐ > வியை  (விரிவு).

வியை >  விசை.  

முதன்முதல் மனிதன் கண்டுகொண்ட விசை,  கையின் அசைவினால் உண்டாக்கிய விசைதான்.  விசை என்பதற்கு அடிப்படைப் பொருண்மை விரிவு என்பதுதான்.  ஓர் உந்துவண்டியைப்பார்த்தாலும்,  அது அவன் கையாற்றலின் விரிவுதான்.  முன் கையினால் சுற்றிக்கொண்டிருந்திருக்கலாம்.  பின்னர், சுற்றிக்கொண்டிருந்தால் அயர்ந்துவிடுவானாதலின்,  தான் சுற்றவேன்டியதின்றித் தானே அது  சுற்றும்படி ஏற்பாடு செய்துகொண்டான்.. இதன்மூலம் அவனுக்கு வேண்டிய ஓய்தல் கிட்டிற்று.

சோம்பலினால் விரிவு உண்டானமை போலவே, உழைப்பாலும் விரிவு ஏற்பட்டது. இப்போது விரிய உழைத்துப் பின் ஓய்வு கொள்ளலாம் ( சோம்பல்)  என்பதாக இருக்கும்.  ஓய்வு சோம்பலன்று,  ஆனால் சோம்பலில் ஒருசார் ஒற்றுமை உள்ளது. இரண்டிலும் இயக்கமின்மை உள்ளது.

விசை என்ற இயங்காற்றல் குறிக்கும் சொல்,  விரிவு என்று பொருள்பட்டதே.

உலகில் அரைத்தானியக்கமாகவும் முழுத் தானியக்கமு  மாகவும் காணப்படுவன அனைத்துப் பொருளும் கையாற்றலின் விரிவு என்பதே  ஆகும்.

கைப்பொருள்கள் விரிவு பட்டன என்பதன்றி,  பிறவும் விரிவு அடைந்தன.  மனிதன் தானுமே இவ்வாறு விரிவு கொண்டான்.  இவ்விரிவுகளிலெல்லாம் விரிவின் தன்மைகள் வேறுபடலாம்.  ஆனால் விரிவினைச் சிந்தித்து அறியவேண்டும்.

மனிதன் தானும் இவ்வாறு விரிந்துகொண்டான்.  அவன் ஆட்சி,  அரசு, ஆதிக்கம் என எல்லாமும் விரிந்தன.  அவன் நடையும் இயக்கமும் ஆற்றலும் விரிவு எய்தின.

இருப்பது எதுவும் இடம்கொண்டு விரியும்.  இவ்விரிவு பக்கவாட்டில் விரிதலும் நெட்டுவாக்கில் விரிதலும்  மேனோக்கி விரிதலும்  யாவும் இதனில் அடங்கும்.

விசை>  விசையன் > விசயன்>  விஜய.  ( விரிந்தோன்).

விசை:  இது ஆற்றலின் விரிவு.

விஜயன் தன் ஆதிக்கத்தை விரித்துக்கொண்டோன்.

இதில் "ஜ"  என்பது வெறும் மெருகூட்டலே.  உயர்த்தி, உசத்தி, ஒஸ்தி  ஆனதுபோல் மெருகுச்சொல்.  இதில் "வடவெழுத்து" என்பதைக் களைந்துவிட்டால் அது (மீதமுள்ள)  எழுத்தொடு புணர்ந்த சொல்லாகிவிடும். (தொல்.)

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

குறிப்பு:

மீள்பார்வை 07042022 0412

தலைப்பு மாறியுள்ளது. ஏனென்று தெரியவில்லை. 


 



திங்கள், 4 ஏப்ரல், 2022

நெகிழிப்பை ( பிளாஸ்டிக்) ஆதரவு

 







நெகிழிப்பை இதனாலே நேர்த்தியான துலகென்று

நேருரைகாண் உதிர்ப்பாரும் உளரே --- இங்கு

திகழும்சொல் இதுவென்று தீர்ப்பொன்று தீட்டாதார்

தெருளுரையில் இதுவொன்றும் உளதே..


வேண்டாத குப்பைதனை ப் பைக்குள்ளே நாமிட்டுக்

களைகின்ற போதேநோய் நுண்மி---அதைத்

தூண்டாத காற்றங்கு இல்லாத காரணியால்

தூங்கிவிடும் படிந்துள்ளின் அடைவே.


நாறுதலும் மேலெழுந்து நாசிகளைத் துளைத்தெடுக்கும்

நரகொன்று எழலங்கு இலதே----பாரும்,

வேறுபல முன்னறியாத் தேரவிடாப் புதுவலையில்

சிக்குவித்தல் இதுவொன்று தொலைவே.


( என்றாலும், அவற்றை ஒழுங்கான குப்பைத் தொட்டிகளில் இட்டு,  முறையாக அப்புறப்படுத்துங்கள்.  வீதிகள்,  நடைபாதைகள், திடல்கள்,  கடற்கரைகள் முதலிய இடங்களில் வீசியெறிதலெனல்  ஒரு அறியாமையும் பொறுப்பின்மையுமாகும்.  தூய்மைப் பணிகளுக்கு உதவுங்கள்.  அல்லது குப்பைகளை அதிக  மாக்காம  லாவது வாழ்வது கடமை)



பாரதம் > பாரத்

 பாரதம் என்ற சொல். எவ்வாறு வந்ததென்பதைச் சுருங்கச் சொல்வோம். மிக்க விரிவாக வரையப்பட்ட  நூல்கள் படித்து முடிக்கப்பெறுவது பெரும்பாலோர்க்கு இயலாதது.

கடலும் வானும் மிக்கப் பரப்பு உடையவை

பரவை என்ற தமிழ்ச்சொல்லுக்கு பரந்ததான கடல் என்பது பொருள்.

மிகப் பரந்த இடத்தில் எங்கும் இருப்பவன் கடவுள். அதனால் அவன் பர+ ம் + அன்.

ம் என்பது இடைநிலை.  இது உம் என்பதன் குறுக்கம்.

பாரதம் :  பர + அது + அம் >  பாரதம்.  இது பின் அயற்றிரிபாக பாரதம் என்று நீண்டு திரிந்தது.  இது பரதவர் என்ற சொல்லின் உறவு.

பர > பாரதம்:  இது முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயர். பரத்தல் என்ற

 வினையிலிருந்து அமைந்த சொல்.

பர + அது + அ + அர் > பரதவர்.  வகரம் உடம்படுமெய்.

மீன்விலைப் பரதவர் என்ற இலக்கிய வழக்கை நோக்குக.  மீனவர் என்று பொருள்>

மூன்று புறமும் கடல்.  வடக்கில் மலைகளிலிருந்து நீர்வரத்து.  மீனுக்குப் பஞ்சமில்லை. இந்த மீன் நாகரிகம் இந்தியாவில் செழித்திருந்தது.

பாரத் என்பது வால்வெட்டுச் சொல். (  சொல்லியல் முறையில் சொன்னால் புரிதல் குறைவு.)

எம் பழைய இடுகைகளில் மேலும் சொற்களை அறிந்துகொள்க.

அறிக மகிழ்க.


மெய்ப்ப்ய் பின் 

நாளை வருக நற்கவி

உங்களுடன் உரையாடும் கவிதை:


சென்றமுந்   நாளும்தாம் செந்தமிழில் சிந்தித்து

வந்தமுந்  நற்கவிதை நான் தரவே  ---- முந்திடினும்

ஆங்கெனை முந்தி  அயர்வு முடக்கியதால்

நான்கிடந்  தின்றெழுந்  தேன்.


இனிநேரம் நன்றாயின் யானே எழுத

நனிமுயல்வேன் நம்பி  வருவீர் ---- கனிபயந்த

சாறாய் அவைவருமே சற்றும் தயங்காமல்

நேராய் வருவீரே இங்கு.


சென்ற முந் நாளும் -  சென்ற மூன்று நாட்களும்

வந்த முந்நற் கவிதை -   தோன்றிய நல்ல மூன்று கவிதைகள்

நனி -  நன்கு

கனி பயந்த சாறு ---  கனிச்சாறு  போல

நேராய் - எதற்கும் தயங்காமல்.  வேறு எங்கும் செல்லாமல்

இங்கு --  இந்த வலைப்பதிவுக்கு

நன்றி வணக்கம்

மெய்ப்பு பின்

பிறழ்வுகள் காணின் பின்னூட்டம் செய்யுங்கள்>

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

செவிகளில் வந்து விழும் செய்திகள்

 (புதுக்கவிதை)


கொந்தளிக்கும் கொழும்பொடு

பொறிப றக்கும்  உக்கிரைன்,

எந்தக் கணினிக் காணொளி

எனினும் எட்டும் செய்திகள்!

வந்த நிலைகள்  மாறியே

குந்த  கங்கள் இலாமலே, 

நந்தல் இலாத செய்திகள்

எந்தம் செவிகள் கேட்குமோ?


உக்கிரேன்    போர்க்களம்

குந்தகங்கள்  -  குழப்படிகள்

நந்தல் -- கெடுதல்

எந்தம் -  எங்களின்

கண்டமும் சாகரமும்

[   ]    இந்தக் குறியிட்ட பாகிகளை ( பத்தி அல்லது  பராகிராப்)களை) தவிர்த்துவிடலாம்.  நேரத்தை மிச்சப்படுத்திக்கொள்ள.


[இப்போது சில சொற்களுடன் விளையாடுவோம்.  விளையாடினாலும் ஆய்வு செய்தாலும் எல்லாம் ஒரு விளையாட்டுத்தான்;  அல்லது எல்லாம் ஒரு ஆய்வுதான்.  வேறுபாடுகள் யாவை, ஒற்றுமைகள் யாவை என்று பட்டியலிட்டுக்கொண்டு, இதுதான் சரி அதுதான் சரி என்று வாதடினாலும் எல்லாம் ஒரு விளையாட்டுத்தான்.]

[இல்லையில்லை, இவ்வாறெல்லாம் குழப்புதல் கூடாது.  விளை என்றால் விழை என்பதுதான்.  விழை என்றால் விரும்புவது. அப்படியானால் ஆய்வு என்பது விருப்பமில்லாமல் செய்வதென்று ஆகிறது?  இதெல்லாம் பொருந்தவில்லை. ஆய்வில் விரும்புவதும் இல்லை, வெறுப்பதும் இல்லை என்பீரோ?]

இதை உங்களிடம் விட்டுவிடுகிறோம்.  யாம் விலகிக்கொள்கிறோம்.  ஆனால் உங்களையும் சேர்த்துக்கொண்டபடி,  

கண்டம் என்பது யாது, சாகரம் என்பது யாது ஆய்வுசெய்வோம்.

சாகரங்களில் இருப்பவை கண்டங்கள்.  கண்டங்களைச் சுற்றி இருப்பவை சாகரங்கள்.

சாகரம் என்பது கடல்.  கடந்து செல்ல முடியாவிட்டால் அது கடல்:  கட+  அல்.

எதையும் கடந்து அப்பால் செல்வது என்பது மிகமிகப் பழங்காலத்து மனிதனுக்குக் கடினமாக இருந்தது.  இந்தச் சொல்லை அவன் தமிழில் எப்போது அமைத்துக்கொண்டான் என்றால்,  கடப்பது எளிதன்று என்று நெஞ்சம் கலங்கிக் கொண்டிருந்த அந்தப் பழைய காலத்தில்தான்..  அப்போது மாட்டுவண்டியைக் கண்டுபிடித்து விட்டானோ என்னவோ?  மாட்டுவண்டியைப் போல் கப்பலை எளிதாக நீரில் செலுத்தமுடியவில்லை. இது அவன் கவலையாக அப்போது இருந்திருக்கலாம்.

பழங்கால மனிதர்கள் கருவிகள் பலவற்றை அறியாத பிற்போக்கில் பெரியவர்கள்.  அவர்கள் நம் எத்தனையோ தலைமுறைகளுக்கு முன் நம் தாத்தாவின் .......தாத்தாவின் தாத்தாக்கள். அவர்களை இங்கு வணங்கி மேலும் ஒன்றிரண்டு சொல்வோம். நம்மை நம் பிற்காலத்தோர் பழித்துவிடக்கூடாது,  எல்லாவற்றையும் அவர்களே கண்டுபிடித்திருந்தால் நாம் எதைத்தான் கண்டுபிடித்துப் பெருமைப்படுவது.  அவர்களுக்குத் அன்று தேவை இல்லாமையாலோ என்னவோ நம்மிடம் விட்டுப்போய் நமக்கும் வாய்ப்புகளை வழங்கியிருக்கிறார்கள். பேரன் பேத்திகட்கு வாய்ப்புத் தருவது அவர்கள் கடமையும் பெருமையும் ஆகும்.

அவர்கள் கப்பலைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே, பலர் கடல் அருகில் போகாதே, சாவு நிச்சயம் என்று எச்சரிப்பது வழக்கமாய் இருந்தது.  சிலர் நீந்தினார்கள். அருகில் சென்றால் சாவுக்கு வாய்ப்பு மிகுதி என்பது தோன்ற, சா+  கு + அரு + அம் > சாகரம் என்று கடலைக் குறித்தனர்.  அருகில் சென்றால் ஒருவேளை சாக நேரிடலாம்!

 கடலின் அருகில் போனால் அது ஆபத்து என்று பயந்தவர்கள், பின்னர் கப்பலை அமைதது அது கடந்துசெல்ல உதவியானதால் கடப்பல் என்று பெயரிட, அதை நாளடைவில் சுருக்கி க் கப்பல் என்று ஆக்கி இன்றுவரை நாம் அச்சொல்லை  வழங்கிக்கொண்டிருக்கிறோம். கட> கடப்பு > கடப்பல் , இது இடைக்குறைந்து கப்பலானது.  இந்தச் சொல் புலவர் அமைத்தன்று.  கப்பல் என்பது அதைச் செய்து அதில் தைரியமாக மிதந்தவன்  வனைந்தது.

இவைபோல்வன எல்லாம் ஒரு கண்டத்தில் நடந்துகொண்டிருப்பின் அது இயல்புதான். கண்டு என்ற வினை எச்சத்தை விடுங்கள்.  நூல்கண்டை எடுத்துக்கொள்ளுங்கள்.  நூலைச் சுற்றி  அதைக் கட்டிபோல  ஆக்கிவைத்தால் அது நூல்கண்டு.  அது ஒரு துண்டுதான்.  கடித்தால் சிலபொருள்கள் துண்டாகவோ துண்டுகளாகவோ ஆகிவிடுகின்றன. பல்லே மனிதன் முதல் ஆயுதம் ஆனபடியினால்,  கடி என்ற சொல்லும் கண்டு என்பதும் உறவுடைய சொற்கள்.

கடு + இ  >  கடி.   இ  என்றால் இங்கு  (இ) துண்டாக்குவது..  இங்கு என்றது வாயை  அல்லது கடிப்பது போல் இயங்கும் ஒன்றை/   சப்பாத்து கூடக் கடிக்கும் என்பர்.

கடு+  ஐ >  மிகவும் சிறிய துண்டுகளாக  ஒட்டுமாறு  ஆக்கிவைப்பது.  எ-டு கடைந்த கீரை.

கடு  >  கண்டு   - துண்டாக இருப்பது.

இது  அடு >  அண்டு என்ற சொல் போல அமைந்தது.  அதுதான் அதன் அமைப்பு மற்றும் திரிபு விதி.  இடையில் ஒரு மெய் தோன்றி  (  ண்  )  வினை அல்லது உரிச்சொற்கள் பெயர்களாகும் முறை.

இதை இன்னொரு நாள் விரிவாக அறிந்துகொள்வோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்