நீலத்தைக் கரைத்துவிட்ட ஏரி நீரை
நிமிர்ந்துபனை தலையாட்டி வாழ்த்தும் ஓரம்
காலை மணல் சூரியனை வாவா என்று
கனிந்தவுயர் அன்பினொடும் ஏந்தும் கைகள்,
ஓலமிடும் காற்றுமெதிர் கொண்ட போது
ஊதிஊதித் தள்ளிவிட்டு ஞற்றும் கோபம்
ஞாலமிதில் அழகிதனின் ஓவக் காட்சி
நாளையினிக் கண்டுமகிழ் மீட்சி யுண்டோ?
கண்டுமகிழ் மீட்சி - மீண்டும் வந்து காணுதல்
ஓரம் - கரை ஓரம்
உஞற்றும் - மீண்டும் மீண்டும் முயலும்
தள்ளிவிட்டு உஞற்றும் > தள்ளிவிட்டு (உ)ஞற்றும்.
ஞாலம் - உலகம்
ஓவக் காட்சி - ஓவியம்போலும் காட்சி
சூடியன் > சூரியன்; சூட்டியன் > சூடியன் > சூரியன் எனினுமாம் எனில் இடைக்குறை.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக