பருத்தி அமைதி. உறுதி
சொற்கள் சிலவற்றில் புணர்ச்சியிற் போல வலிமிகுந்து வருவதைக் காணலாம். சிலவற்றில் வலிமிகுவதில்லை. வலி மிகுதல் என்றால் வல்லலெழுத்து மிகுந்து வருதல்.
பஞ்சு விளையும்போது, அதிக இடத்தைக் எடுத்துக்கொள்ளுதல் "போல" ( பஞ்சு) பருத்து விரிந்து பறக்கத் தொடங்கிவிடுகிறது. பருத்து விரிந்து பறத்தலினால் அது பரு+ தி > பருத்தி என்று பெயர் பெற்றது. ஆனால் ஒரு தலையணை உறை போலும் சிறிய இடத்திற்குள் அதை அடக்கிவிடமுடியும். அது பின்னர் அடக்கப்படுவது, கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆகவே பெயரமைப்பில் கவனிக்கப்படா தொழிந்தது.
இங்கு நாம் சுட்டிக்காட்ட விழைந்தது யாதெனில், இச்சொல் இப்போது "பருதி" என்று வழங்கவில்லை. இன்றுகாறும் இச்சொல் "பருத்தி" என்றே உள்ளது. சங்க இலக்கியத்தில் இச்சொல் பருதி என்று வழங்கி, பரிதியைக் குறித்தபடியினால் , இச்சொல் பருதி என்ற முற்பட அமைந்து பின்னர் ருகரம் ரிகரமாகி பரிதி என்று மாறி, சூரியனைக் குறித்ததென்பது தெளிவு ஆகும். இதில் நாம் கூறுவது, இச்சொல் பரிதி என்றான போதும் வலிமிகவில்லை. பருதி என்றிருந்த போதும் வலிமிக்கு வரவில்லை என்று உணர்க.
பருந்தலை ( பருத்ததலை) என்ற சொல்லில் ஒலி மெலிந்துள்ளது. மெலிந்து தலையின் பருமை குறிக்கிறது. பருத்தலை என்று வருவதில்லை. பருத்த உடலுள்ள பறவை, பருந்து ஆயிற்று. ஒலி மிகவில்லை.
பரிதி என்பதிலும் வலி மிகவில்லை. ( பரித்தி அன்று).
அமைதி என்பது அமைத்தி என்றாவதில்லை; உறுதி உறுத்தி ஆவது இல்லை
சொல்லமைப்பு மிக்கக் கவனமுடன் செய்யப்பட்டுத் தமிழ்மொழியில் வந்துள்ளது என்பது இவற்றை நோக்குவார்க்குப் புலனாகும்.
விரித்தல் என்ற சொல்லுடன் தொடர்புடையதே விருத்தம் என்ற விருத்தப்பாவின் பெயர். விரித்தம் என்று அமைந்து பின் விருத்தம் ஆயிற்று என்க. அகரம் இகரமாகும். அது பரிதி> < பருதி என்பதில் தெரிந்திருக்கவேண்டுமே. மொழி முதலிலும் இஃது வரும். இதழ் - அதழ் என்பதிலும் காண்க. விருத்தி என்பதும் அது.
You may ask us to explain if it is difficult to understand. Pl enter up your comment.
அறிக மகிழ்க.
மெய்ப்பு: பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக