புதன், 11 மார்ச், 2020

கடிதத்தில் வக்கணை.

ஒரு கடிதம் எழுதினால் அது யாருக்காக எங்கு செல்வதற்காக எழுதப்படுகிறது என்பதைத் தெளிவாக எழுதவேண்டும்.  இல்லாவிட்டால் இதைச் சுமந்து சென்று கொடுப்பவன் யாரிடம் சேர்ப்பது என்று திணறுவான்.

கடிதத்தை இடைவருவோனிடமிருந்து பெற்றுக்கொள்பவனும் அது தனக்குத்தான் என்று  அறிந்துகொள்ள அதற்கான முன் அறிகுறிகளை அறிந்துதான்  அதைப் படிக்கத் தொடங்குவான்.


இவ்வாறு கடிதங்களை வகுத்து அணைப்பிக்க வேண்டும்.  அணைப்பித்தலாவது சேர்ப்பித்தல்.

அண்முதல் - நெருங்குதல். சேர்தல்.
அண்டுதல் -   அடுத்துச்செல்லுதல்.
அண்மை
அணிமை.
எனப் பல சொற்கள்.  இவற்றின் அடிச்சொல் அண் என்பது.

அண் >( அணு )> அணுகு > அணுகு(தல்).
அண் > அன் > அனு>  அனுப்பு > அனுப்பு(தல்)
அண் >  அணை > அணைதல்  ( கப்பல் துறையில் அணைதல் )

இவற்றில் சேர்தல் கருத்து,   தொடர்வதை அறிந்துகொள்ளுங்கள்.

வகுக்கும்  அணை.

மாட்சிமை  பொருந்திய மாமன்னரே!.

இது அணை வாக்கியம்.  அணைக்கும் வாக்கியம்.

வகுக்கு(ம்)  அணை>  வகுக்கணை > வக்கணை.

இடையில் கு என்ற எழுத்து மறைந்து இடைக்குறையானது.

வக்கணை என்பதற்கு வேறுபொருளும் உண்டு. இது பல்பொருளொரு சொல்.

பிற பொருள்  :  அவற்றை அடுத்தடுத்து அறிந்து மகிழ்வோம்.

வக்கணை = கடித முகப்புக் குறிப்புரைகள்.

கருத்துகள் இல்லை: