சாமி என்ற சொல்லை முன் சிலமுறை விளக்கியதுண்டு. அதிலொன்றை இங்குக் காணலாம்.
https://sivamaalaa.blogspot.com/2019/02/blog-post.html
இதுவேயன்றி இன்னொரு பொருளும் அறியக்கிடக்கின்றது.
சாய்தல் /. சாய்த்தல் : இது பேச்சு வழக்கில் இன்னுமுள்ள சொல். இது சாயாது என்றால் நடைபெறாது என்பது பொருள். " எப்படி முயன்றாலும் சாய்க்க முடியாது என்றால் " முடிக்க இயலாது என்பதுதான். ஜம்பம் சாயாது என்பதுமுண்டு.
சாய் > சாய்த்தியம் > சாத்தியம் என்பது இயல்வது குறிக்கும்.
வாய்ப்பாடம் சொல்பவர் என்னும் பொருளிய வாய்த்தியார் என்பது வாத்தியார் என்று வந்தமை காண்க. உப அத்தியாயி என்ற உபாத்தியாயி ( இலக்கணம் சொல்லிக்கொடுப்பவர் ) என்னும் சொல் வேறு. பலருக்கு இதிற் குழப்பம்.
இனி சாமி என்பதன் இன்னொரு பொருள்.
சாய் > சாய்மி > சாமி : வேண்டுதல்களைச் சாத்தியமாக்கும் தேவன் என்ற பொருளும் காணலாம்.
சாய் > சாம் > சாமி எனினும் அது. பழநூல்களில் இது சாம் என்று காணப்படுகிறது.
சாய் > சா(யு)ம் இ > சாமி என்று பழங்குடியினரிடை வழங்கின எளிதான சொல் இது. சாயுங்காலம் > சாய்ங்காலம் என்று யகர ஒற்று மறையாமலும் வரும்.

சில ஒலிகள் மறைதலுக்கும் வேறுசில வெளிப்பட்டு வருதலுக்கும் மனிதனின் நாவுதான் காரணம். ஒரு மொழி பேசுவாரிடை இவ்வாறு நிகழ்ந்தால் அம்மொழிக்குரியது என்ற முத்திரை ஏற்படுகிறது. மொழி காரணமன்று. இந்த மொழி என்பது நாம் வைத்த பெயர்தான்.
இங்கு சில சொற்கள் தரப்பட்டுள்ளன. வாசித்து மகிழ்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக