ஞாயிறு, 30 ஜூலை, 2017

முக்தி மோட்சா!!

மோட்சம் என்பது ஒரு திராவிடச் சொல்லே ஆகும்.

இதை இப்போது ஆராயலாம்.

மேல் என்ற தமிழ்ச்சொல் சில திராவிடமொழிகளில் மோள் என்று
திரிந்து வழங்கும்.

ஒன்று இன்னொன்றன்மேல் மோதுகிறது. மேல்சென்று இடிப்பதை
மேது என்று வினையாக்காமல் மோது என்றல்லவா வினைச்சொல் ஆக்குகிறோம்? மே> மேல்; மே> மோ > மோது. ஏகாரச் சொற்கள் ஓகாரமாகும். ஏம் ‍= பாதுகாத்தல்; ஓம் = பாதுகாத்தல்; ஓம் > ஓம்புதல் : பாதுகாத்தல். பல சொற்களை ஆராய்ந்தால் இது தெற்றெனத் தெரியவரும்.

மோள் > மோட்சு > மோட்சம்.


மே > மோ > மோச்சம். சு, அம் விகுதிகள்.

இது பேச்சு வழக்குச் சொல். இறந்தவன் மேலே போய்விட்டான் என்பது பேச்சு வழக்கு. அதிலமைந்ததால் மோச்சம் என்ற சொல்அதுபின் மோட்சம் என்று திருத்தப்பெற்றது. ட்ச என்றால் ஒலி இனிமையாகிறது என்று கருதினர்.

முது > முதுமை.

முது > முத்து > முத்தி > முக்தி.

மோள் > மோட்சம்.


முக்தி மோட்சா!!

கருத்துகள் இல்லை: