நெய்,
நெயவு,
நேயம்,
ஸ்நேகம்.
நெய்
என்பது ஒன்றாக உருகி ஒட்டி
நிற்கும் பொருள்.
நெயவில்
அல்லது நெசவில் நூல்கள்
பின்னிப்பின்னி இழை அணுக்கமாகத்
தொடுக்கப்பட்டு,
துணி
ஏற்படுகிறது.
நூல்கள்
பின்னிப் பிணைகின்றன.
நேயத்தில்
இருவர் அன்பினால் உருகி
உள்ளங்கள் ஒன்றுபட்டுத்
திகழ்கின்றனர்.
இச்சொற்களில்
ஓடும் பரக்கக் காணப்படும்
பொருளாவது,
அணுக்கமாகச்
சேர்ந்திருத்தல் என்ற ஒரு
கருத்தே ஆகும் என்பதை அறிந்துகொள்ள
இயல்பான அறிவே போதுமானது
ஆகும்.
ஆனால்
ஆய்வுத்திறனில்லார் இதை
அறிந்துகொள்ளாதது
வருந்தத்தக்கதே.
நெய்.
நெய்தல்.
நெய்
> நெயவு
> நெசவு.
நெய்
> நெய்+
அம்
= நேயம்.
> நேசம்.
நேயம்
> நேசம்
> நேசன்.
யகரம்
சகரமாதல்.
வாயில்
> வாசல்.
இங்கு
யகரம் சகரமாதலோடு,
இடையில்
இகர உயிரும் அகரமாயிற்று.
யகரம்
ககரமாதல் சில சொற்களில் உளது.
நேயம்
> நேகம்
> ஸ்நேகம்.
நாகம் > நாக் > நேக் > ஸ்னேக் (ஆங்கிலம்) என்பதும்
ஒப்பு நோக்குக. இடைநின்ற ஐரோப்பியத் திரிபுகள் விடப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக