வெள்ளி, 14 ஜூலை, 2017

அகமும் வீடும்

/வீடும் அகமும் ஒருபொருட் சொற்கள். எனினும 
அகம் என்பது மனத்தையும் குறிக்கிறது. இன்னும்
 பலபொருள்களும் உள்ளனஅவற்றுள் "உள்"
  என்பதும் ஒன்று. மனம் என்பது எங்கிருக்கிறது
என்று அறிய இயலவில்லை; ஆனால் உடம்பின் 
உள்ளிருப்பதாகஏறத்தாழ நம் இருதயம் இருக்குமிடத்தில்
 இருப்பதாக நம்பப்படுகிறதுநுரையீரலுடன் கல்லீரல்
 முதலியவையும் அங்கு உள்ளன. நினைப்பு.
இரக்கம் என்று இன்னுமுள்ள உணர்வுகளுக்கும் 
சேர்த்து, மூளையே காரணம் என்கிறது அறிவியல்.

சில சொற்கள் அறிவியலுக்கு ஒத்துவருகின்றன;
சில அங்ஙனம் ஒத்துவருவதில்லை.


இப்போது வீடு என்பதைக் காண்போம், இது 
விடு என்ற வினனச்சொல்லிலிருந்து வருகிறது.
  விடு> வீடு. முதனீலை நீண்டு விகுதி ஏதும் 
பெறாமல் அமைந்த சொல். எங்கே வெளியில்
சென்றாலும் நாம் வீட்டுக்கு வந்துவிடுகிறோம்
எல்லாவற்றையும்  முடித்தாலும் முடிக்காவிட்டாலும்
விட்டு வந்துவிடுகிறோம். அதனால் அது வீடு 
ஆகிறது. வீடு என்பதற்கு மேலுலகு அல்லது 
சொர்க்கம் என்று ஒரு பொருளும் உண்டு
அதுவும் விட்டுச் செல்லுதலையே குறிக்கிறது
வீடுபேறு ‍ = துறக்கம்இனி அகம் என்ற 
சொல்லை ஆய்வோம்.

= அவ்விடம்; அங்கு. இது சுட்டடிச் சொல்.
கு = சேர்விடம்; போய்ச்சேர்தல்.

மதுரைக்குப் போனான் என்ற வாக்கியத்தில்
"கு" எதைக் குறிக்கிறது?
போய்ச்சேர்ந்த இடம் குறிக்கிறது.

எங்கு வெளியில்) திரிந்தாலும் போய்ச் சேருமிடமே
வீடு ஆகும்அதுவே (+கு) என்பதுமாகும். அதாவது 
அங்கிருந்து போய்ச்சேரவேண்டிய இடம். +கு 
என்பதில் அம் சேர்த்து, அகம் ஆகிறது. இங்கு 
அம் என்பது ஒரு சொல்லிறுதி அல்லது விகுதி ஆகும்.

விடு> வீடு என்ற முதனிலை திரிந்த ( நீண்ட
தொழிற்பெயரும் அகம் (+கு+அம்) என்ற
சுட்டடிச் சொல்லும்  ஒரு கருத்தையே
வெளிப்படுத்துகின்றன.

மனிதன் உள்ளிருப்பதே வீடு ஆதலின் உள் என்ற 
கருத்து, அகத்தைத் தழுவி நிற்கின்றது. இது பொருத்தமே
மனம் உள்ளிருப்பது என்ற கருத்தில் அகம் மனத்தைக் 
குறித்ததும் பொருத்தமே. மனத்தில் நிகழும் ஒழுக்கம் 
என்ற கருத்தில் அகம் ‍> (அகவொழுக்கம்) குறித்து நின்றதும்
 அதிலிருந்து பெறப்பட்ட பொருத்தமான கருத்தே.

இவ்வொப்பாய்வின் மூலம் வீடு என்பதும் அகம்
என்பதும் ஒத்த கருத்தமைதியில் எழுந்த மிக்கப் 
பொருத்தமுடைய தமிழ்ச்சொற்கள்
என்பது பெற்று அகமகிழலாம்.

will edit later.  edit not available.



கருத்துகள் இல்லை: