தோப்புக்கரணம் என்பது எளிதாக அமைப்பறியக்கூடிய
சொல்தான்.
தோப்பு என்பதன் மூலச் சொல் " தொல்" என்பதாகும். இது
பழமை என்று பொருள்தருவதுடன், காலக்கழிவினால் இப்போது அடைய எட்டாத நிலையையும் காட்டும்.
தொல் - தொலை.
தொலை - தொலைத்தல்.
தொலை > தொலைவு.
தொலைதல் (தன்வினை), தொலைத்தல் (பிறவினை).
தொல்லை என்பது, மிக்கப் பழமையினால் இடர்ப்பாடு ஏற்படுதலைக் குறித்தது. இப்போது இடர் என்ற பொதுப்பொருளில் மட்டும் வழங்குகிறது.
தொல் > தோல் என்று முதனிலை நீண்டது.
தோல் - தோல்வி. (வெற்றியைத் தொலைத்தல்).
தோல் > தோற்பு = தோல்வி.
தோற்புக்கரணம் > தோப்புக்கரணம்.
தோல்வியடைந்தவர் போடும் "கரணம்".
இது மிகவும் சுருக்கமான விளக்கம். பலவற்றை விடவேண்டியதாயிற்று -- நீட்டம் தவிர்க்க.
படித்து இன்புறுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக