ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

சபதம்

சபதம் என்பதைக் குறிக்கப் பல சொற்கள் சங்கதத்தில் உள. இவற்றுள் பல, "வ்ரத" என்ற இறுதிபெற்று முடியும். வெறுமனே வ்ரத என்றாலும் சங்கதத்தில் சபதம்தான். சபதம் என்பது அங்குக் காணப்படவில்லை. நீங்களும் தேடிப்பார்த்து, இருந்தால் தெரிவியுங்கள்.

சகரம் மொழிக்கு முதலில் வராது என்று தொல்காப்பியத்தில் ஒரு நூற்பா காணப்படுகிறது. இது ஆராய்ச்சி அற்ற‌ ஆசிரியர் எவரோ ஒருவரின் இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை.

சமைத்தல் என்பது சமஸ்கிருதம் அன்று.  சண்டை என்பதும்  அப்படியே. இங்ஙனம் எத்தனையோ சொற்கள்!  உதைப்பது என்று பொருள்படும் சவட்டு என்னும் மலையாளச் சொல்லைப் பாருங்கள்.   இந்த நூற்பா பிற்பட்ட காலத்திய இடைச்செருகல்,  இது  நன்றாகவே புரியும்.

சபதம் தொடக்கத்தில் "இன்னதைத் தடுக்காமல் விடமாட்டேன்" என்பதுபோன்ற உறுதிச்சொல்  வெளிப்பாட்டைக்  குறித்தது. இங்ஙனம்  தடுக்கப்பட்ட நிகழ்வு கெட்டுவிடும் அன்றோ? எனவே  கெடுத்தல்  கருத்தினடிப்படையில்  சபதம் அமைந்துள்ளது.

அவம்  >    அவதம்  >  ச‌வதம்.>   ச‌பதம்.

அவம் = கெடுதல்,  கெடுத்தல்.

அமைதல்  - சமைதல்   போன்றது  இது.  அ -ச திரிபு.


சபதக் கதைகள் பல நமக்குக் கிடைக்கின்றன. மங்கம்மா  சபதம், சரசு  வதி  சபதம்  எனத் தொடங்கிப் பலவாம் அவை .  சபதம் மேற்கொண்டவர் வெற்றி, மற்றவருக்குத் தோல்வி.தோல்வியிலும் நன்மை இருக்கலாம் எனினும் இத்தகு வெவ்வேறு  நிலைகளை அவ்வக் கதைகளில் கண்டுகொள்ளுங்கள்.

இனி இன்னொரு அ > ச திரிபைக் காட்டுகி ேன்.

அமர்  > சமர்.

அமர் என்ாலும் போர்;  சமர் என்றாலும் போர்.தான்.  இந்தத் திரிபில் பொருள்
மாறவில்லை.

எனவே அவதம்  எனற்பாலது சவதம் > சபதம் ஆனதென்பதை அறியலாம் .

கருத்துகள் இல்லை: