தெருவிலே திரியும் நாய்களில் எங்காவது ஒன்று வெறி நாயாக இருக்கும். அது நடையர்க்கு (pedestrians) "அபாயம் ". அதேபோல் கோகுலத்து வீடுகளில் நிற்கின்ற பசுக்களில் ஏதேனுமொன்று மனிதனை முட்டும் கோபக்கார மாடாக இருந்தால் அதுவும் அபாயமானதாய் இருக்கும்.
"கிட்டே போகாதே!அது பாயும் " என்று எச்சரிக்கை செய்வார்கள். தமிழ் தழைத்திருந்த காலங்களில் "அந்த ஆ பாயும் , அருகில் செல்லாதே ! " என்று சொல்வர் .
ஆ பாயும் என்பது நாளடைவில் குறுகி "அபாயம்" ஆயிற்று.
நாம் வழங்கும் சொற்களில் சில மாடுகள் வளர்ந்த இடங்களில் உருப்பெற்றவை. சில மலையடி வாரங்களில் இருந்து புறப்பட்டவை. சில மீனவர்களிடமிருந்து கிடைத்தவை. அபாயம் - இந்தச் சொல் மாட்டுத் தொழுவங்களிலிருந்து நாம் அடைந்த பரிசு.
ராஜராஜ சோழன் முதலான அரசர் பெருமக்கள் தம் நாட்டிலிருந்து வெகு தொலைவு வரை படை நடத்தினார்கள் . அவர்களின் படையியல் சொற்கள் எல்லாம் எங்கே? தமிழ் மொழியில் உள்ள சொற்கள் அனைத்தையும் இப்படித் துறை துறையாய் இதுவரை யாரும் தொகுத்தளித்ததாகத் தெரியவில்லை. நீங்கள் முயன்று ஒரு பி.எச்.டி (முனைவர்) !போடலாமே ....... அந்தக் காலத்தில் தொல்காப்பியனார் கொஞ்சம் செய்துள்ளார். நிகண்டுகள் சில உள்ளன.
கண்ணதாசன் பாடியதுபோல நீங்கள் எங்கிருந்தாலும் வாழ்க ! ஆ பாயும் அபாயம் இன்றிப் பத்திரமாக - நலமுடன் இருங்கள்.
notes:
Sanskrit has bhaya meaning: (= பயம்)

fear , alarm dread apprehension ; fear of RV. {bhayAt} . `" from fear "' ; {bhayaM-kR} with abl. `" to have fear of "' ; {bhayaM-dA} , `" to cause fear , terrify "') ; . terror , dismay , danger , peril , distress ; danger from or to , (comp.) ib. ; the blossom of . ; m. sickness , disease ; but abhaya means fearlessness. or protection from fear. (=அபயம் ) பயம் வேறு அபாயம் வேறு. apAyam was absorbed into Skrt as Tamil teachers thought it was a Skrt word. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக