Reply with quote
நயாகரா
நளின அலைசேர் நடையின் நதியே நயாகராஉன் ீ
கவனம் எலாம்நின் புதினம் புகழ்ந்திடும் காதலன்பால்!
புவனமிப் பூவன மாக்கிய ஆறுகள் தேவிநீயென்(று)
எவனும் விளம்புவன் என்றிடில் அஃதும் மிகையலவே!
வீழ்ச்சி அழகினை விஞ்சும் அழகும் உலகிலுண்டோ,
காய்ச்சிய வௌ்ளியை ஊற்றுதல் போல் ஒரு காட்சிதரும்,
மூச்சினை நிற்பிக்கும்் விந்்தையை ஈந்திடும் நீரிதுபோல்
பாய்ச்சும் அருவி பயக்கும் நதிதனைக்் கண்டிலனே.
கண்டிட வந்தவர் மேனி குளிரப் ப(ன்)னீர்தெளித்து
சுண்டி மனத்தினை ஈர்த்தனை சுற்றுப் புறத்திலெல்லாம்
மண்டிக் கிடக்குமிம் மக்கள் வரவினை வாழ்த்துதல்போல்
அண்டும் எனக்கும் அளித்தனை அன்பை மறக்கொணாதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக