By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
சனி, 15 ஆகஸ்ட், 2026
''பெலக்கப் பேசு'' என்றது -. கோஷம் என்பது
சனி, 8 ஆகஸ்ட், 2026
அபலை என்பது. ஆண்பால் அபலன்.
அபலை என்பது கைவிடப்பட்ட பெண்ணைக் குறிக்குமென்பர். இந்தப் பொருளை இங்கு ஆய்வு செய்வோம்.
இதில் வரும் பலை என்ற இறுதி, பலம்+ ஐ < பல+ ஐ <பல்+ ஐ எனவரும். பல் என்பது பலம் என்ற சொல்லின் அடிச்சொல். இது வழக்கில் பலமில்லாதவன் என்பதில் பயன்பாடு காணும். ஆளும் கட்சி பலமிழந்தது என்ற வழக்கைக் காண்க. அபலன் என்பது அபலை என்பதன் ஆண்பால் வடிவம்.
பலம் என்ற சொல், பிற்காலத் திரிபு. முன் அது வல்- வலம் என்றே இருந்தது. பகர வகரப் போலியை உணர்ந்துகொள்ள வகு> பகு என்பதைக் கண்டுணரலாம்.
வந்து இரு என்பதே வந்திரு > வது இரு> ( ரு குன்றி) > வது இ > வதி என்றானது. இதை வந்திரு> வந்தி> வதி என்றும் காட்டலாம். வந்தி இடைக்குறை வதி என்பதுணர்க. ரு மறைவு கடைக்குறை ஆகும். பின் வகு > பகு போல வதி > பதி என்று சொல்லமைந்தது. இது வகர பகரப் போலி.
அல் என்பது கடைக்குறைந்து, அ+பலை என்று சேர்ந்து அபலை ஆயிற்று.
வதிதலாவது, குடியிருத்தல். பதி என்ற கணவனைக் குறிக்கும் சொல், வந்து பெண்வீட்டில் தங்கிக் குடித்தனம் செய்தவனைக் குறிக்கும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
வியாழன், 6 ஆகஸ்ட், 2026
தனுஷ் என்பது (வில்)
வில் என்று குறிக்கப்படும் கருவி, பழைய தொடக்கத்தின்போது, மரத்தண்டுகளால் ஆனவைதாம். நல்லபடி வளைந்துகொடுக்கும் தண்டுகளால் இந்த வில்கள் அமைக்கப்பட்டன.
தண்டு என்ற சொல்: தண் என்பது அடிச்சொல். இதில் வந்த டுகரம், உண்மையில் '' து'' என்பதுதான். பின்னர் '' டு'' என்பதே ஒரு விகுதியாகக் காட்டபட்டிருக்கலாம். எதுவாயினும் சொல்லமைந்தபின் அது பயன்பட்டு, புழங்கப்படுகிறதா என்பதுதான் அந்தச் சொல்லின் நீடிப்புக்குக் காரணம்.
தண்+ து > தண்டு.
தண்+ டு > தண்டு.
மேலது புணர்ச்சி காரணமான திரிபு ஆகும்.
தண் என்பது தண்மை அல்லது குளிர்ச்சிக்கும் வரும் அடிச்சொல் ஆகும்.
தண்டுவடம், தண்டுக்கீரை என்ற சொற்களில், தண்டு என்பது தண்மை என்னும் குளிர்ச்சியைக் குறிக்கவில்லை. கம்பு, கம்பம் என்பனவும் தண்டு குறிக்கும்.
தணுஷ் என்ற சொல்லில் டு அல்லது து என்பதற்குப் பதில் ஷ் வந்தது. தண்> தணு> தணுஷ். தணு என்பது உகரத்தில் முடிந்த சொல். கண்> கணு என்பது போல.
தணுஷ் என்பது வில் குறித்தமையால் இது ஒரு கருவிக்குப் பெயராய் வழங்கியுள்ளது.
தண்டு என்பது படையினர் வைத்திருந்த ஆயுதம் ஆதலால், அது படையையும் குறித்தது. தண்டு என்பது வில் (தணுஷ்). தண்டெடுத்தல் என்பது படையை இயக்குதலையும் குறித்தது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை.