சனி, 20 ஏப்ரல், 2024

சாமியைக் கும்பிடுதல் தமிழர் பண்பாடு

 இங்குச் சில ஆய்வுரைகளை நீங்கள் அடைந்தறியும் பொருட்டு கீழே குறிப்பிடுகிறோம்.  சொடுக்கி வாசித்து அறிக. நீங்களே தாங்களாகவே தேடிக் கண்டுபிடிப்பது கடினம்.  ஆகையால் இது இங்கு பதிவுபெறுகிறது.

1. https://sivamaalaa.blogspot.com/2019/02/blog-post.html

சாமி என்பது எப்படி அமைந்த சொல்.

2. https://sivamaalaa.blogspot.com/2019/12/blog-post_9.html

சாமி  இன்னொரு பொருள்

https://sivamaalaa.blogspot.com/2017/06/go-to-heaven-now.html

சொர்க்கத்தைத் தாக்கிய  அறிவாளிகள் சிலர்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


வெள்ளி, 19 ஏப்ரல், 2024

விதிநிரல் : மிரட்டு - விரட்டு

 மிரட்டிய பின்னும் மிரட்டப்பட்ட மனிதன் அஞ்சி ஒடுங்கிய பின்னுமே அந்த மனிதனைத் துரத்திவிட முடிகிறது  

ஆகவே:

மிரட்டு ( மி )  >  விரட்டு.

இவ்வாறு சொற்கள் அவற்றின் தொடர்பொருள் நிரலுடன் தமிழில் அமைந்திருப்பது கண்டு வியக்கத் தகுந்ததாய் உள்ளது.  இதுபோலும் நிகழ்வு நிரலை யாம் ஏனைச் சொற்களிலும் கண்டுள்ளோம்.  ஆங்காங்கு எழுதியும் உள்ளோம்.

இது மிஞ்சு> விஞ்சு என்ற விதிநிரல் படியான  திரிபுவகையாகும், 


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

வியாழன், 18 ஏப்ரல், 2024

அ/திருஷ்டம் திட்டம் [ கேள்விக்குப் பதில்]

முன் இடுகையில் எழுப்பிய கேள்விக்கான பதிலை இங்குக் காண்க:

 இங்கு தெர் என்ற அடிச்சொல்லிலிருந்து தொடங்குவோம். இதுவே எளிதாகவும் சுருக்கமாகவும் முடிப்பதற்குரிய வழி.

தெர் >  தெரி >  தெரிதல்.

தெர் >  தெர் + உள் > தெருள்.  ( உள் என்பது விகுதி,  எ-டு:  கடவுள் ).

தெருள் > தெருட்டு >  தெருட்டுதல்.   தெளிவாக்குதல்.

பூசைமொழியில் இது மாற்றப்பட்டது:

தெருட்டு > திருட்டம் > திருஷ்டம்.

அதி + திருஷ்டம் >  அதிருஷ்டம்  :  மிகத் தெளிவான நிலை.  நற்பேறு உண்டான நிலை.   உயர்ந்த காட்சி பெற்ற தன்மை.

இது உண்மையில் தாயுமானவர் பெற்றதுபோலும் இறுதிக் காட்சி. சிலரே அடைவது, பிறரால் அடையமுடியாதது.  பணத்தை அடைவது அன்று. பணம் பிணத்துக்கு ஒப்பானது,  நிலையானது அன்று, 

திருஷ்டாந்தம் -  தெளிவுபடுத்துவது. சான்று. விளக்கம், எடுத்துக்காட்டுகள்.

திட்டம்: இது இடுகை இன்னொன்றில் விளக்குவோம்.

இங்குச் சொடுக்கி வாசிக்கவும்:

https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_31.html

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.