ஆடம்பரம்: எவ்வாறு அமைகிறது?
இதில் "பரம் " என்னும் இறுதியை முதலில் எடுத்துக் கொள்க.
இது ஒரு பரந்த வெளியைக் குறிக்கிறது.
பர+அம் > பரம்.
அடுத்து நிற்பது "அம்".
அம் என்றால் அழகு.
" அம்பரம்" என்ற இணைப்பு "வானம்" என்ற பொருளது.
ஆடம்பரம் எனில் ஆடு அம்பரம், வானத்தில் ஆடு , அம்பரத்தில் ஆடு.
ஆடம்பரமாய் நடக்கிறான். (வாக்கியம்)
ஆடம்பரமாய் என்பது உண்மையில் ஓர் உவமைத் தொடர். "போல்" என்று உவமைச் சொல் இன்மையால், பொருண்மை வழுவினதாய்த் தெரியலாம். "வானத்தில் ஆடினவனாய் இருக்கிறான்" என்றால் பொருந்துவதாகும். உருவகமாகக் கொள்ளலாம்.
இது இல்பொருள் உவமையைச் சேரந்தது.
இன்னொரு வகையில் :
அம்பரம் என்பது அம்பம் ஆகிறது.
இடுதல் என்பதை முன்னொட்டி;
இடு+ அம்பம் > இடம்பம் > டம்பம்
ஆகவே டம்பமாய்ப் பேசுவதென்றால், " வானிலிட்டதுபோல் பேசுவது என்று பொருள்.
இது இடு+ அப்பி>. இடப்பி>டப்பி >டப்பா> dabba.
போன்ற அமைபு.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்