புதன், 4 ஏப்ரல், 2018

கேடயம், கேட்டி



அம்பு நம்மை நோக்கி ஏவப்படுமானால் அது நமக்குக் கெடுதல்தான். அத்தகைய கெடுதலினின்று நாம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.  வெறும் கைகாளால் அம்பைத் தடுக்க இயலுமோ? அதைத் தடுக்க ஒரு இரும்பு முறமோ பலகைத் தடுப்போ ஒரு கூடையோ தேவைப்படலாம்.

இதற்காகவே செய்யப்பட்டதுதான் கேடயம்.

இந்தச் சொல்:
கேடு -   வருகின்ற அம்பைக் குறிக்கிறது.
  -      அங்கேயே நிறுத்துவது. ( படர்கைச் சுட்டு).
அம் -  விகுதி.

பொருள்: வருகின்ற கேட்டினை (அம்பை ) ங்கேயே நிறுத்தும் வட்டத் தடுப்புத் தகடு.

வண்டிமாட்டுக்குத் தார்ப்போடும் கம்பு  கேட்டிக்கம்பு எனப்படும்.  கேடு+இ  =  (கேடுபயப்பது.) கம்பு - தடி. தார்ப்போடுவதைக் கேடு என்ற சொல்லினின்று அமைத்தமையால், பண்டையர்  அத்தகைய செயல்களைக்
கடிந்தனர் என்று தெரிகிறது.

மதிலுள் ஒரு மேடையிலிருந்து கேடயங்களைப் பயன்படுத்துவர். இம்மேடை
பரிகை (பரிசை) என்றும் சொல்லப்படும்.

கேடயம் என்ற சொல் கேடகம் என்றும் திரியும்.

கேடயம் :  தடுதட்டம் எனினுமாம்.

மறுபார்வை செய்யப்பட்டது: 13.06.2020.


நஞ்சு

பண்டைத் தமிழ் மக்கள் சொற்களை மிக்க அருமையாக
அமைத்துள்ளனர். அமைத்தனர் என்பதைவிட ஒலிகள்
எழுப்புவதன் மூலம் கருத்தறிவிக்கப் பல வேளைகளில்
சொற்களைஇயல்பாக அமையவிட்டனர்  என்பதே
உண்மை.  புலவர் அல்லது மொழியறிஞர் அமைத்தவை
சிலவே.

அஃறிணை, ஒழிபு என்பவை போலும் சில புலவர்
அமைத்தன எனலாம். ஆனால் ஒழிவு, பொம்மை
என்பன போலும் பல மக்கள் அமைத்தவை.

பொய்யான உடல் என்று பொருள்படும் "பொய்ம்மெய்"
என்பது போலும் சில நாளடைவில் பயன்பாட்டினால்
தேய்வுற்றுப் "பொம்மை" என்று மறுதோற்றம் உற்றது.
இத்திரிபுகளால் சொற்களின் தொகை பல்கிற்று.
வேய்ந்தன் (முடி சூடிக்கொண்டவன்)  என்பது மாறி
வேந்தன் என்று புத்துருக் கண்டது.

கெட்டதையும் நல்லதாகவே கொள்ளும் பரந்த உள்ளம்
தமிழர்களுக்கிருந்தது. நச்சுப் பாம்பினை நல்ல பாம்பு
என்றனர். சிலர் இதுபோலும் உயிரிகளைத் தொழவும்
தொடங்கினர். அதிலிருந்தும் அருளாற்றல் வெளிப்
படுமாறு கண்டனர். தின்னவரும்புலி தன்னையும்
அன்னை பராசக்தியின் வடிவாய்க் கொண்டனர்.

தமிழ்மொழிச் சொற்களில் அவர்கள் பண்பாட்டின்
தோற்றம் கண்டு இன்புறலாம்.

நஞ்சினை நன் ( நல் ) என்றே தொடங்கினர்.  அதன்
தலை " நல் "  (  நன் )  ஆனது.  நஞ்சும் ஒரு நன்மையைச்
சுரக்கும்.   சு என்பதை விகுதியாய்ச் சேர்த்தனர். பொருளற்ற
விகுதியாகவும் கொள்ளலாம்; சுரத்தல் ( ஊறி வெளிவரல்)
குறிப்பாகவும் எடுத்து அமைதி காணலாம்.

நச்சுப்பாம்பு என்று சொல்ல நினைத்தாலும் அந்த நச்சு
என்ற சொல்லிலும் நன்மை தொனிக்க அமைத்த அரிய
பண்பாட்டுக் கூறு தமிழருடையதாகும்.

விடப்பாம்பை ஓர் ஓலைப் பெட்டிக்குள் அடைத்துக்
குற்றவாளி அதற்குள் கையைவிட பாம்பு அவன்
தேகத்தினுள் நஞ்சை விட அவன் உயிரை விட
இப் பல விடுதல்களால் அரசு அவன் உடலை
உறவினரிடம் விடலானது..   விட விட விட விட
நிகழ்ந்ததனால் அது விடமாகி,   பின் ஒருவாறு
மெருகூட்டப்பட்டு விஷம் என்று மறு தோற்றம்
கண்டது. இங்ஙனம் தந்த தண்டனை
நிறைவேறுவதும் சில வேளைகளில் நடந்தன.

இப்படியான சிந்தனை மெல்லழகே தமிழின்
உள்ளழகு ஆகும்.

இனிப் பாஷாணம் என்ற சொல் அமைப்பினை
யும் கண்டு தேனருந்தத் தவறாதீர்.

https://sivamaalaa.blogspot.sg/2012/07/blog-post_23.html

பின்னர் செப்பம் செய்யப்படும்

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

பூமிக்குத் தமிழில் உள்ள பெயர்கள்: ஒரு தொகுப்பு:-



பூமி பற்றிய சொற்கள்.

பூமிக்குத் தமிழில் உள்ள பெயர்கள்:  ஒரு தொகுப்பு:-


பூத்தல்:  தோன்றுதல்.

பூ+ ம் + இ  =  பூமி.

பல உயிர்களும் தாவரங்களும் ( நிலைத்திணை உயிரிகளும்)
தோன்றுமிடம்.   அல்லது  இறையருளால் தோன்றிய ஓர் இடம்
அல்லது கோள்.

தருதல் :  கொடுத்தல்.

தரு+ அணி > தார்+அணி =  தாரணி.

தரு என்பது தார் என்று திரியும்.  தரு> தார் ( தாராயோ என்ற
வினைமுற்றை நோக்கின் புரியும்.)


தாரணி > தரணி.  இது   முதனிலை குறுகிய சொல்.

தரணி >  தரு+ அணி > தர்+ அணி > தரணி.
இதில் உகரம் கெட்டது.


தருதல்:  தரை.

தரு+ஐ = தரை.

இது பல மொழிகளிலும் பரவிய தமிழ்ச்சொல். டெரா என்று

இலத்தீன் மொழிக்கும் சென்றது நம் பெருமைக்கு¡¢யதே.

தமிழ் பல மொழிகட்கும் சொல்வளம் தந்துள்ளது.

இடம்:

எதை எங்கு இடுகிறோமோ அது அங்கு இடம் கொள்கிறது.

இடு+அம் = இடம்.

இடு> இடை.

இடு >இடுக்கு.  (கு - விகுதி).


மேல் இருக்கும் இடம்:


மே+து + இன் + இ.

மேல் (தன்மேல்) உயிர்கள் தாவரங்கள் இவற்றை உடைய (து

 ) ஆகிய இடம்.