சனி, 11 நவம்பர், 2017

ஆயிரம் அறிந்த தமிழர்.



ஆயிரம் என்ற சொல்லைப் பண்டைத் தமிழர்கள் எப்படி அறிந்தனர் அல்லது அமைத்துக்கொண்டனர்?

தாமே அமைத்தற்குத் திறமோ அறிவோ முயற்சியோ இல்லாதவிடத்து,  அல்லது அமைத்துப் பயனோ பயன்படு தருணங்களோ இல்லாதவிடத்து,  அல்லது குழப்பம் ஏற்படும் என்ற அச்சம் நிலவுமிடத்து அமைக்கமாட்டார்கள். அங்கனம் இல்லையாயின் அமைத்திருப்பர்.

காட்டிலோ, கரையிலோ காலங்கழித்துக்கொண்டிருந்த முந்தியல் மாந்தனுக்கு,  ஆயிரமென்பது ஒரு பெருந்தொகையே. பத்தும் நூறும் அறிந்தபின்பே அவன் ஆயிரத்தை எட்டமுடியும்.

ஒன்றை அறிந்து பழகியபின் இரண்டு அறிந்தகாலை அவன் அதைப் பெரிது என்று கருதினான்.  இரு என்ற சொல்லுக்கு இன்னும் பெரிது என்ற பொருள் தமிழில் இருக்கிறது. 

ஒன்பதின் பின் பத்து என்பது பலவாகத் தெரிந்தது. அங்கனமே பொருள்படுஞ்  சொல்லை அவன் அதற்கு ஏற்படுத்தினான்.  

ஆயிரமென்பது ஆகப் பெரிதாகத் தோன்றிய எண்.
ஆ =  வியப்பும் குறிக்கும் சொல். ஆக  என்பது இறுதியும் குறிக்கும்.
இரு=  பெரியது.
அம் :  விகுதி.
இச்சொல்லின் பொருளும் “ ஆகப் பெரிது”  என்பதுதான்.
ஆ+ இரு + அம் = ஆயிரம்.
ஆ என்று வியத்தகு  பெரிதாய ஓர் எண்.
இலக்கம் கோடி என்பன கண்டகாலை, ஆயிரம் சிறிதாகிவிட்டது.

பின் என்பதனடித் தோன்றிய சொற்கள்



பின் என்னும் சொல்லை மேலும் அணுக்கமாகக் கருதுதற்கு இது நல்ல தருணமே.

பிம்பம் என்ற சொல்லும் பின் என்பதனடிப் பிறந்ததே. பின்> பின்பு> பின்பு+அம் > (பின்பம்) >  பிம்பம் > bimba.
இது பின் தொடர்வதாகிய நிழல்போலும் ஒற்றொளியைக் குறிக்கிறது

இதுபோலும் ஒளி முன்னும் விழுவதுண்டே, எனின் உண்டுதான். சொல்லைமைப்பில் எல்லாக் கோணத்துக் கருத்துகளையும் உட்புகுத்திவிடுதல் அரிது. வேண்டாத எல்லாவற்றையும் திட்டவட்டமாக விலக்கிவிடவும் முடியாது.  நாற்காலி என்பது நாலு கால்களை உடையது என்று பொருள்பட்டாலும் அது வழக்கில் நாய்க்குட்டிக்கு ஒத்துவருவதில்லை.  ஆகவே காரண இடுகுறியாகிறது. பகுதி காரணத்தையே உள்ளடக்கிற்று. மிகுதி: இடுகுறியாய் நிற்பதாம்.

ஒற்றொளியாவது ஒன்றி அல்லது ஒற்றி வரும் ஒளி. 1

பின் என்பதனடி வேறு சொற்கள் சில::

பின் > பின்னணி. (பின்னணிப் பாடகி........)
பின் > பின்னடி (சந்ததி)
பின் > பின்னகம்  (வேறுபாடு)
பின் > பின்னம் ( அரை. கால் எனவரும் இன்ன பிற)
பின் > பின்றுதல்,  ( இது வினைச்சொல்.  அருகியே வழங்குகிறது).
பின் > பின்னுதல். ( நூல் பின்னல். சடைப்பின்னல்).
பின்றை > பிற்றை.
பின் > பின்னிதம் ( பின்+ இது + அம்).  வேறுபாடு.
பின் > பின்னிலை.  பின்பற்றுதல். வழிபாடு.
பின் > பின்னிரை (பின்+ நிரை).  நிரை : வரிசை.
பின் > பின்னோக்குதல் .  (எதிர்பார்த்தல்).
பின் > பின்னை
பின் > பின்னர்
பின் > பின்னனை ( பின்+(ன்)னை):  சின்னம்மா, சிறியதாயார்.
இன்னும் உளவற்றைப் பட்டியலில் சேர்த்துக்கொள்க.


குறிப்புகள்:
1.       ஒன்றும் ஒளி :  ஒன்று+ ஓளி > ஒற்றொளி,  வலித்தல் விகாரம். இன்னோர் உதாரணம்:  இரும்பு+ பாதை = இருப்புப்பாதை. Railway tracks.  கம்பிச்சடக்கு என்பர் மலேசியவழக்கில்.


Situation at the China India border:



If the Indian Armed Forces wanted  to bring a bull dozer to the India China border (say in the event of an earthquake, you need heavy machinery to help in the rescue work even though the area is sparsely populated ) they will have to dismantle it into parts and  fly them to the border by helicoper.  There the mechanics will have to reassemble the bull dozer and then test it.
Modi has to focus on many problems.  He is remedying such problems .

It is  a wonder  that such problems have not been addressed previously.