வெள்ளி, 3 நவம்பர், 2017

இலடாக்கில் வானூர்தி ஓடுபாதைகள்.

சீன அரசு அதன் -நிலப்பகுதியில் ஒழுங்கான ஓடுபாதைகளை அமைத்துத்
தன் கடமைகளை முறையாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது.

ஆனால் இந்திய அரசு வெகுகாலமாக இதில் ஒழுங்கான கவனம் செலுத்தவில்லை என்று தெரிகிறது. பனிபடர் நிலப்பகுதியான இலடாக்கில்
கவனிப்பின்றி வேலைகள் கிடக்கின்றன. படைவீரர்களைப் பனிப்பாறைகள் அடர்பகுதியில் கிடத்திவிட்டுக் குளிரில் வாடச்செய்துள்ளனர்.  மோடியின் அரசு பதவியேற்ற பின்புதான் இப்போது மீண்டும் இப்பகுதி அரசின் கவனித்தில் வரத் தொடங்கியுள்ளது.

படைவீரர்களை அதிகம் தண்டிக்காமல் வசதிகள் செய்துகொடுப்பதுதான் அரசின் கடமை. அதை மோடியே நன்'கு நிறைவுசெய்கிறார்.

அதைப்பற்றிய ஒரு துணுக்குச் செய்தி இங்கே உள்ளது.  யாம் படித்துச் சுவைத்தோம்.  நீங்களும்:.......

http://indiatoday.intoday.in/story/doklam-indian-air-force-ladakh-airfields/1/1082130.html


மழைத்துளியே கொஞ்சம் படு



மழைத்துளியே  என்மேல் கொஞ்சம் படு;----முற்றும்
மருவாமலே தண்மை உருவாகவே  உன்னை இடு;
உழைத்தனியே இனிதே காண  விடு --- வந்து
உறவாடவே நெஞ்சம் இனிவாடுதல் ஆமோ தடு.

விளைத்தனையே இன்பம் ஈடொன்  றிலை ---- உன்னை
விழையாமலே மண்ணில் உழல்சோர்விலே உயிர்கள் பல .
களைத்தவரே துள்ளி முன்னுற் றெழ  ----  பொழிவாய்
கணமேனுமே துளிகள் படவேணுமே தண்மை பெற.

உழை = பக்கம்.
ஆமோ =  ஆகுமோ
 




வியாழன், 2 நவம்பர், 2017

சொல்லமைப்பு: நீதம்



இன்று நீதம் என்ற  சொல்லினமைப்பை  அறிவோம்.

நீதம் : இதைப் பிரித்தால் நில்+து +அம்.

நில் என்ற சொல்லில் லகர ஒற்று குறையும்.

இஃது கடைக்குறை ஆகும்;

நில் >  நி > நீ.
நி  > நி+து+ அம் = நித்தம்.  ( -நித்தம் என்றால் நிற்பது அல்லது தினமும் மாறாமை)
-நி >  -நீதி.  ( ஒவ்வொரு வழக்கிலும் அதன் அடிப்படைகள் மாறாமை).
நீதி + அம் =  நீதம்.  இங்கு தி என்பதில் உள்ள இகரம் கெட்டுப் பின் அம் விகுதி பெற்றது.
-நீ+ து + அம் =  நீதம் எனினுமது.
இதுவே நீதம் என்பதன் அமைப்பு ஆகும்.

பதி + அம் = பதம் என்பதிலும் தி என்பதன் இறுது இகரம் கெட்டுப் புணர்ந்தது நோக்குக.  தி என்பதன் முன்னுள்ளது நெடிலெனினும் குறிலெனினும் இதுதான் விதி.

இது பிற அறிஞர் ஆய்வுப்படி ,